Saturday, 19 October 2024

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்

 ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்

***************************************

1

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி

காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !

ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


2

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ

வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ !

கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


3 மஞ்


அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ

ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா !

வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


4

அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ

ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா!

சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


5

அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ

வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா !

மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


6

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா

காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா !

ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


7

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா

யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ !

யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!


8

அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்

அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் !

அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா

சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !!

ஸ்ரீ ராஜ் ராஜேக்ஷ்வரி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.🙏🙏🙏🙏

மஹாலட்சுமி அஷ்டகம்

 மஹாலட்சுமி அஷ்டகம் செல்வம் பெருக சொல்ல வேண்டிய மஹாலட்சுமி அஷ்டகம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |


சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||


நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |


சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||


சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |


சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||


சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |


மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி


யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||


ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |


மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |


பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |


ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||


பலஸ்ருதி:


மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |


ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |


த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||


திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |


மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||


|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம் ||🙏🙏

கிருஷ்ணாஷ்டகம்

 #கிருஷ்ணாஷ்டகம்


கோகுலாஷ்டமியில்... சகல ஐஸ்வரியம் தரும் கிருஷ்ணாஷ்டகம்! 

 

பகவான் கிருஷ்ணரை பூஜித்துப் போற்றும் கோகுலாஷ்டமி. கீதையின் நாயகனைக் கொண்டாடி வணங்கும் நன்னாள். புல்லாங்குழலோன் உதித்து, குழலின் இசையால் ஆவினங்களையும் நம்மையும் குளிர்வித்த புண்ணியத் திருநாள். இந்தநாளில், இல்லத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணரை வணங்குவோம். கண்ணனுக்குப் பிடித்த சீடை, அதிரசம், அவல் பாயசமெல்லாம் செய்து கண்ணனை அழைத்து ஆராதிப்போம்.


குழந்தை இல்லாத வீட்டில், கோகுலாஷ்டமி பூஜையைச் செய்தால், குழந்தையாக கிருஷ்ணனே வந்து பிறப்பான் என்பது ஐதீகம். குசேலருக்கு உதவியது போல் நமக்கும் அருள் மழை பொழிவான். சகல ஐஸ்வர்யமும் தந்து வாழச் செய்வான்.


முக்கியமாக... இந்த நன்னாளில், கோகுலாஷ்டமியில், #கிருஷ்ணாஷ்டகம்_பாராயணம்_செய்யுங்கள். தெய்வ கடாக்ஷம் இல்லத்தில் ஒளிரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும்.


அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். 

இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.


'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது. கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!


#கிருஷ்ணாஷ்டகம்


1. வசுதேவ ஸூதம் தேவம்


கம்ஸ சாணூர மர்த்தனம்


தேவகீ பரமானந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


2.அதஸீ புஷ்ப ஸங்காசம்


ஹாரநூபுர சோபிதம்


ரத்ன கங்கண கேயூரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


குடிலாலக ஸம்யுக்தம்


3.பூர்ண சந்த்ர நிபானனம்


விலஸத் குண்டல தரம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


4.மந்தார கந்த ஸம்யுக்தம்


சாருஹாஸம் சதுர்ப்புஜம்


பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


5.உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்


நீல ஜீமூத ஸந்நிபம்


யாதவானாம் சிரோ ரத்னம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.


6.ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்


பீதாம்பர ஸூசோபிதம்


அவாப்த துளசீ கந்தம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


7.கோபிகாநாம் குசத்வந்த்வ


குங்குமாங்கித வக்ஷஸம்


ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


8.ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்


வநமாலா விராஜிதம்


சங்க சக்ரதரம் தேவம்


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


#பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


9.க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்


ப்ராதருத்தாய ய படேத்


கோடி ஜந்ம க்ருதம் பாபம்


ஸ்மரணேன விநச்யதி


#பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


நன்றி :  Hindutamil.in

தேவி_அஷ்டகம்

 #தேவி_அஷ்டகம்


அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. 


ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத் துதியை, தேவ்ய இஷ்டகம் எனப்போற்றுவர்.


குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும்.


நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதிப்பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்.


ஸ்ரீகணேஸாய நம:


1) மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம் பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்


கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.


2) பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்

பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்


கருத்து: பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


3)அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்

மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்


கருத்து: நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.


4)காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்

 ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்


கருத்து: பிரளயகால ராத்திரியாகவும் மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இருப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகியவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.


5) ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் 

  ஜகத்ஸம்ஹாரகாரிணீம்

  முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்


கருத்து: ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.


6)தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்

முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்


கருத்து: தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


7) த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்

மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்


கருத்து: முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.


8.) ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்

ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்


கருத்து: சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.


     . (இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)

தோடகாஷ்டகம்

 தோடகாஷ்டகம் !


ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.


அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.


ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும். 


விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே

மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 

என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.


பவதா ஜனதா ஸுகிதா பவிதா

நிஜபோதவிசாரண சாருமதே

கலயேச்வர ஜீவ விவேகவிதம்

பவ சங்கர தேசிகமே சரணம்!!


தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!


பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கெளதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!


ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்சன லாலஸதா

அதிதீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 

நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ

விசரந்தி மஹா மஹஸஸ்சலத:

அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ

பவசங்கர தேசிக மே சரணம்!!


குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


குருபுங்க புங்கவ கேதந தே

ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:

சரணாகத வத்ஸல தத்வநிதே

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


விகிதா ந மயா விசதைககலா

நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ

த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம்!!


ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!


ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஶ்ரீ_ரங்கநாதர்_அஷ்டகம்

 #ஶ்ரீ_ரங்கநாதர்_அஷ்டகம்


ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் !


1. ஆனந்தரூபே நிஜபோதரூபே

ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே

சசாங்கரூபே ரமணீயரூபே

ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே.


பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.


2. காவேரிதீரேகருணா விலோலே

மந்தாரமூலே த்ருதசார கேலே

தைத்யாந்த காலே அகிலலோகலீலே

ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே.


பொருள்: காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என் மனம் ஈடுபடுகின்றது.


3. லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே

ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே

க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே

ஸ்ரீரங்க வாஸே ரமதாம் மனோ மே.


பொருள்: லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.


4. ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே

முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே

வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே

ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மனோ மே.


பொருள்: பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.


5. ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே

வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே

த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே

ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே.


பொருள்: பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.


6. அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே

ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே

ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே

ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மனோ மே.


பொருள்: உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், 

இறையருள் - Divine Power 

யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கல

மடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.


7. ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ

நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ

க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ

ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மனோ மே.


பொருள்: ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் 

மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப்  படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.


8. இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்

புனர் நாசங்கம் யதி சாங்க மேதி

பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்

யாநே விஹங்கம் சயனே புஜங்கம்.


பொருள்: இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்).


9. ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: யஹ் படேத்

ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்.


பொருள்: எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!


சரணம் சரணம் ஸ்ரீரங்கா !

திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி - அஷ்டகம் !

 தை வெள்ளி ஸ்பெஷல் !


ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி - அஷ்டகம் !


1.கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்

நிதம்பஜிதபூதராம் ஸுரநிதம்பிநீபூஜிதாம் I

நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.


2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்

மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்

தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸுந்தராமாச்ரயே II


கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.


3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா

குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I

மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா

கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II


கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.


4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்

ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்

விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்

த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸுந்தரீமாச்ரயே II


கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.


5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்

குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !

மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்

மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II


மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.


6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்

க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I

கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்

த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸுந்தரீ மாச்ரயே II


மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.


7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I

அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்

ஜபாகுஸுப பாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II


ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.


8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்

பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I

முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்

பஜாமி புவம்பிகாம் ஸுரவதூடிகா சேடிகாம் II


தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.


ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி அஷ்டகம் முற்றிற்று.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...