Saturday, 19 October 2024

ஸ்ரீ_ராமர்_அஷ்டகம்

 #ஸ்ரீ_ராமர்_அஷ்டகம்


வேதவியாசர் அருளியது ஸ்ரீ ராமர் அஷ்டகம்


பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்

ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்


#பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்

ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்


#பொருள் : அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.


நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்

ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.


ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்

நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.


நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்

சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.


பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்

குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்


#பொருள்: சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.


மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை

பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்ப

வராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)


சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்

விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்


#பொருள்: நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.


ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம் ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்


#பொருள்: வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!

ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்

 ☘#ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்☘

--

#அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. 

அந்த வகையில் *

--

#ஸ்ரீகிருஷ்ணனைத்_துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு - #கிருஷ்ணாஷ்டகம்.* ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த #கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது. இந்த  அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

--

☘#ஸ்ரீ_கிருஷ்ணாஷ்டகம்☘


☘1. *வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘2. *அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘3. *குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘4. *மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘5 .*உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘6. *ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘7. *கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.


☘8. *ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்*


*#பொருள்:* ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.


☘9. *க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி*


*#பொருள்:* எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!


#Thanks  :  #kamakoti .#org

ஸ்ரீ_ஸ்ரீ_தாமோதராஷ்டகம்

 தாமோதர  மாதம் ஸ்பெஷல் !


#ஸ்ரீ_ஸ்ரீ_தாமோதராஷ்டகம்


நன்றி ! இணைய தளம் !


1.நமாமீஷ்வரம் ஸச்-சித்-ஆனந்த-ரூபம்

லஸத்-குண்டலம் கோகுலே ப்ராஜமானம்

யஷோதா-பியோலூகலாத் தாவமானம்

பராம்ருஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா


(1) பூரண அறிவும் ஆனந்தமும் நிறைந்த நித்திய ரூபத்தில் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகின்றேன். சுரா மீனின் வடிவிலுள்ள காதணிகள் இங்குமங்கும் ஆட, தெய்வீகத் திருத்தலமான கோகுலத்தில் அவர் அழகாக ஜொலித்துக் கொண்டுள்ளார். அன்னை யசோதையைக் கண்ட பயத்தால் மர உரலிலிருந்து இறங்கி வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அதைவிட வேகமாக அவரை விரட்டிய அன்னையினால் அவரைப் பிடித்துவிட முடிந்தது. அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.


2. ருதந்தம் முஹுர் நேத்ர-யுக்மம் ம்ருஜந்தம்

கராம்போஜ-யுக்மேன ஸாதங்க-நேத்ரம்

முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட-

ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்


(2) (அன்னையின் கரங்களில் இருந்த கோலைக் கண்ட) அவர் அழுதபடி தாமரைக் கரங்களைக் கொண்டு, பயம் நிறைந்த கண்களை மீண்டும் மீண்டும் கசக்குகிறார். சங்கின் மூன்று கோடுகளை ஒத்திருக்கும் அவரது கழுத்தில் அவர் அணிந்திருக்கும் முத்து மணி மாலை, விம்மி அழுவதனால் அங்குமிங்கும் அசைகின்றது. கயிற்றினால் அல்ல, தனது அன்னையின் அன்பினால் வயிற்றில் கட்டப்பட்ட முழுமுதற் கடவுளான ஸ்ரீ தாமோதரருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்

கின்றேன்.


3.இதீத்ருக் ஸ்வ-லீலாபிர் ஆனந்த-குண்டே

ஸ்வ-கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயந்தம்

ததீயேஷித-க்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்

புன: ப்ரேமதஸ் தம் ஷதாவ்ருத்தி வந்தே


(3) அத்தகு பால்ய லீலைகளினால் கோகுலவாசிகளை அவர் ஆனந்தக் கடலில் மூழ்கடிக்கின்றார். மதிப்பு மரியாதையைக் கடந்த நெருக்கமான தூய பக்தர்களால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்பதை, ஐஸ்வர்ய ஞானத்தில் மூழ்கியுள்ள தனது பக்தர்களுக்கு அவர் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன்.


4. வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா

ந சான்யம் வ்ருணே (அ)ஹம் வரேஷாத் அபீஹ

இதம் தே வபுர் நாத கோபால-பாலம்

ஸதா மே மனஸ்-யாவிராஸ்தாம் கிம் அன்யை:


(4) வரம் நல்குவோரில் சிறந்தவரான எம்பெருமானே, அரூபமான முக்தி, உயர்ந்த முக்தியான வைகுண்ட பிராப்தி, அல்லது வேறு எந்த வரத்தையும் நான் தங்களிடம் வேண்டுவதில்லை. பிரபுவே, விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபால ரூபம் என் மனதில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். இதை விட்டுவிட்டு வேறு வரத்தைப் பெறுவதால் என்ன பலன்?


5. இதம் தே முகாம்போஜம் அத்யந்த நீலைர்

வ்ருதம் குன்தலை: ஸ்னிக்த-ரக்தைஷ் ச கோப்யா

முஹுஷ் சும்பிதம் பிம்ப-ரக்தாதரம் மே

மனஸ்-யாவிராஸ்தாம் அலம் லக்ஷ-லாபை:


(5)எம்பெருமானே, செம்மை கலந்த மிருதுவான கருமை நிற சுருள் கூந்தலால் சூழப்பட்டுள்ள தங்களின் தாமரைத் திருமுகம் மீண்டும் மீண்டும் அன்னை யசோதையினால் முத்தமிடப்படுகிறது; உதடுகள் கோவைப் பழம்போல சிவந்துள்ளன. இத்தாமரைத் திருமுகம் எப்போதும் என் மனதில் தோன்றுவதாக. இலட்சக்

கணக்கான இதர லாபங்களால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.


6.நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ

ப்ரஸீத ப்ரபோ து:க-ஜாலாப்தி-மக்னம்

க்ருபா-த்ருஷ்டி-வ்ருஷ்ட்யாதி-தீனம் பதானு-

க்ருஹாணேஷ மாம் அக்ஞம் ஏத்-யக்ஷி-த்ருஷ்ய:


(6) முழுமுதற் கடவுளே, தங்களுக்கு நான் எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றேன். ஓ தாமோதரா! ஓ அனந்தா! ஓ விஷ்ணு! ஓ பிரபுவே, என்மீது திருப்தியடைவீராக. கருணை மிகுந்த தங்களது பார்வையை என்மேல் பொழிந்து, பௌதிகத் துன்பக் கடலில் மூழ்கி முட்டாளாக இருக்கும் என்னை விடுவியுங்கள்; எனது கண்களுக்குக் காட்சியளி

யுங்கள்.


7.குவேராத்மஜௌ பத்த-மூர்த்யைவ யத்வத்

த்வயா மோசிதௌ பக்தி-பாஜௌ க்ருதௌ ச

ததா ப்ரேம-பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச

ந மோக்ஷே க்ரஹோ மே (அ)ஸ்தி தாமோதரேஹ


7) ஓ தாமோதரா, மர உரலில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள தங்களால் குபேரனின் இரு மகன்களும் (மணிக்ரீவன், நளகூவரன்) நாரதரின் சாபத்திலிருந்து விடுபட்டு மாபெரும் பக்தர்களாயினர். அதுபோன்ற பிரேம பக்தியை எனக்கும் கொடுங்கள். நான் அதற்காகவே ஏங்குகிறேன், எந்தவித முக்தியிலும் எனக்கு ஆசையில்லை.


8. நமஸ் தே (அ)ஸ்து தாம்னே ஸ்புரத்-தீப்தி தாம்னே

த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே

நமோ ராதிகாயை த்வதீய-ப்ரியாயை

நமோ (அ)னந்த-லீலாய தேவாய துப்யம்


(8) ஓ தாமோதரா, நான் எனது முதல் வணக்கங்களை உமது வயிற்றைக் கட்டியுள்ள அந்த ஒளிவிடும் கயிற்றுக்கு சமர்ப்பிக்கின்றேன். பின்னர், முழுப் பிரபஞ்சத்தின் இருப்பிடமான உம்முடைய வயிற்றிற்கும், உமக்கு மிகவும் பிரியமான ஸ்ரீமதி ராதாராணிக்கும், அதன் பின்னர், அளவில்லா லீலைகள் புரியும் முழுமுதற் கடவுளாகிய உமக்கும் எமது வணக்கங்களை சமர்ப்பிக்

கின்றேன்.


ஸ்ரீ  க்ருஷ்ணா உன் திருவடிகளே  சரணம்  !

Saturday, 18 May 2024

 இன்று அன்னையர் தினம் !


மாத்ரு பஞ்சகம் !


ஸ்தாம் தாவதியம்ப்ரஸூ தி ஸமயே துர்வார

சூலவ்யதா

நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச

ஸாம்வத்ஸரீ

ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய

யஸ்யாக்ஷம:

தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை

ஜனன்யை நம:


பொதுப் பொருள்: தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு  நிமிஷமும் என்னைத் தாங்கியபோது அவள் அடைந்த உடல் துன்பத்துக்குப் பிரதி உபகரமாக நான் ஏதாவது செய்திருக்கிறேனோ?  அதுமட்டுமா, பிரசவ சமயத்தில், தாங்கிக்கொள்ள இயலாததும், பிறரால் பங்கிட்டுக்கொள்ளவும் முடியாததுமான, அவள் அனுபவித்த  சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கின்றேன்?இது மட்டுமா? என்னைப் பிரசவித்ததும், என்  உடல்நலத்தைப் பாதுகாக்க, தான் கொஞ்சமும் ருசியில்லாத உணவைச் சாப்பிட்டு ஜீவித்த அந்தத் தியாகச் செம்மலுக்கு நான் என்ன பரிகாரம்  செய்திருக்கிறேன்? தூக்கமில்லாமல், சரியான உணவு இல்லாமல் தன் உடலை இளைக்க வைத்துக்கொண்டு, என்னை அரவணைத்தபடி எனது  மலத்திலேயே படுத்துக்கொண்டு ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்? தன்னைக் கஷ்டப்படுத்திக்  கொண்டு அளவற்றப் பொறுமையுடன் காப்பாற்றிய தாயாருக்கு அவளுடைய குழந்தைகள் பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் அந்தத்  தியாகத்துக்கு சமமாகப் பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மையே, இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம் உமக்கு  நமஸ்காரம் செய்வதுதான்; ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே.


குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது     த்ருஷ்ட்வா

யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வ

முச்சை:

குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்

ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: 


நான் குருகுலக் கல்வியை மேற்கொண்டிருந்தபோது ஒருநாள், அம்மையே நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். அந்தத் தூக்கத்தில் நான்  சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, திடுக்கிட்டு எழுந்து பதறியடித்துக்கொண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறினீர்கள்.  அதைப் பார்த்து குருகுலவாசிகளும் கதறினார்கள், என்மீதான உங்கள் பாசத்தைக் கண்டு அவர்கள் நெக்குருகினார்களே, என் தாயே, உமக்கு  நமஸ்காரம்.


ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே 

தோயமபி வா

ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த

விதினா

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதர

துலாம் 


அம்மையே, நீங்கள் முக்தியடையும் சமயத்தில், உங்களுக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால்  ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உங்களது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உங்கள் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக்  கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதாலும்,  மனம் தவிக்கின்ற உங்களது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உங்களது கமல பாதங்களைச் சரணடைந்து 

வேண்டுகின்றேன் தாயே.


முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி

ராஜேதி ஜீவேதி சிரம் ஸ¤ தத்வாம் 

இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்

ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம் 


அம்மையே, என்னைக் காணும்போதெல்லாம், ‘என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்’ என்று  எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொற்களால் என்னைச் சீராட்டி,  பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன்! இதைப் பொறுக்க  முடியவில்லையே அம்மையே! உன்னைச் சரணடைகிறேன்.


அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்

ப்ரஸதி காலே யதவோச உச்சை 

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்

யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி: 


தாயே, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் ‘அம்மா! அப்பா! சிவபெருமானே, கிருஷ்ணா, கோவிந்த,  ஹரே முகுந்தா’ என்று வலி தாங்கிக்கொள்ளும் உபாயமாக தெய்வங்களை அழைத்த என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும்  உயர்த்தி உங்களுக்கு அஞ்சலி செய்து, உங்களைச் சரணடைகின்றேன்.


பெற்ற தாய்க்கு, அவளுடைய இறுதிப் பொழுதில் தன்னை  அர்ப்பணித்துக் கொண்டார் முற்றும் துறந்த சந்நியாசியான, பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர். முற்றும் துறந்த ஒரு துறவியையே  தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமும் உண்டு, பகவத்பாதாள், சாதாரணமான உலகத்தில் நாம்  இன்று காணும் சந்நியாசிகளைப் போன்றவர் அல்லர். 


தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய சந்நியாசிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். ‘தாயிற் சிறந்த கோயிலில்லை’ என்னும் சாஸ்திர  வாக்கியத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் அவர். ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும்கூட,  அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம்  அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும்,  தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என ‘லகுயோக  வாஸிஷ்டம்’ கூறுகிறது.


இந்த அடிப்படையில் மஹாப்ரம்ம ஞானியான ஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய்-தந்தையின்  மகத்துவத்தை விவரிக்கதான் இயலுமோ? அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப் போன்றதொரு  மாமுனி தோன்றிய குலத்தின் அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்கள். மனுதர்ம  சாஸ்திர காலத்திலிருந்து எல்லா சாஸ்திரங்களிலும் தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை காண்கிறோம். மனு, ‘‘ஒரு மகன் நூறு  வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாது’’ எனக் கூறுகிறார் :


பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன்  பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. சாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை, ‘‘தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும்  அவள் காக்கப்பட வேண்டியவள். ஒருவனுடைய ஆத்மாவுக்கு உயிரும் உடலும் கொடுப்பவள் அவளே" என விளக்குகிறார்.

Tuesday, 5 March 2024

 #தேவி_அஷ்டகம்


அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத்  துதியை, தேவ்ய இஷ்டகம் எனப்போற்றுவர். 

www.dinamalar.com

குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள்,  கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதிப்பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை  வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்.


ஸ்ரீகணேஸாய நம:


மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்

பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்


கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில்  ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.


பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்

பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்


கருத்து: பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், 

www.dinamalar.com

பரமசிவனிடம் அன்பு  கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்

மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்


கருத்து: நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய  பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம்  ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.


காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்

ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்


கருத்து: பிரளயகால ராத்திரியாகவும் மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இரு ப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகி யவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.


ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் 

ஜகத்ஸம்ஹாரகாரிணீம்

முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்


கருத்து: ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய் யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.


தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்

முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்


கருத்து: தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் 

 ஸவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்

மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்


கருத்து: முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், 

www.dinamalar.com

தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷ ங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம்  ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.


ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்

ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்


(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)


கருத்து: சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக  இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.


 Thanks:   www.dinamalar.com.

Monday, 19 February 2024

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

 ரத ஸப்தமி ஸ்பெஷல் !


ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் !


அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி 

அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு

நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


மங்கலக் குடியினில் மங்களமாய்க்

குடிகொண்டு மங்காத ஒளிவீசும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்

பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்

வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை

அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு

அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்

பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே

 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ

உன்திருமுகம் காட்டி அருள்புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே

அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே

இச்செகம் போற்றும் கதிரவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


கண்ணால் காணும் கடவுள் நீ

கதிரொளி வீசும் கிரகமும் நீ

உன்னால் வாழும் உயிர்களைக் காக்க

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


நாளையும் கோளையும் நம்பி வாழும்

இப்புவியில் நன்மைகள் பல புரியவே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி

தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


விழியில் ஒளிதந்து புவியில்

புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


வான் மழை பொழிந்திட பயிர்கள்

விளைந்திட வையகம் தழைத்திட

சூர்ய பகவானே உதித்தெழுவாய்


சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்

சரணம் சரணம் ஆதித்யனே சரணம்

சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்

சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்

சரணம் சரணம்.

Friday, 16 February 2024

சூர்யாஷ்டகம்

 சூர்யாஷ்டகம்....!


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||


ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய்.

பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.


ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|

ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


வானவில்லின் வண்ணம் போல் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே! வெப்பம் நிறைந்தவரே!

ரிஷி கச்யபரின் குமாரரே! வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே! அனைத்து உலகங்களுக்கும் தந்தையே!

எம் பாவத்தை அறுத்து பாவனம் ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|

மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


சத்வ, ரஜோ, தமோ என முக்குணங்களை உடையவரே! பலம் பொருந்திய மஹாசூரரே! ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே!

எம் பாவத்தை அறுத்து தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|

ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸாகிய ஒளி கொண்டவரே! வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே!

உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|

ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே! மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே!

ஒரே சக்கரத்தைக் கொண்டவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே! தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே!

எம் பாவத்தை அறுத்து என்னைத் தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!


தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|

மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||


உலகின் நாதனே! ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே!

எம் பாவத்தை அறுத்து தூயவன் ஆக்குபவரே! ஹே சூரிய தேவனே! உம்மை வணங்குகிறேன்!


இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்||

இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...