Tuesday, 9 May 2023

சியாமளா_தண்டகம்

 #கல்வியில்_சிறந்து_விளங்கச்_செய்யும்_சியாமளா_தண்டகம்_ஸ்லோகம்


#அபூர்வ_ஸ்லோகம் 


மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம், 


#சியாமளா_தண்டகம். 


தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம். 


பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் திறக்கவிருக்கும் இந்த காலகட்டத்தில் புது வகுப்புகளுக்குப் போகும் மாணவ, மாணவியருக்கு இந்தத் துதி அளப்பரிய நன்மைகளை வழங்கும். மாணவர்கள் என்று மட்டும் அல்லாமல் எல்லோருமே இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்; அனைத்து நலன்களையும் பெறலாம்.


மாணிக்யவீணா முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி


மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் 

பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், 

நீல மணியின் 

ஒளியுடன் கூடிய 

அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி

வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் 

தியானம் செய்கிறேன். 


சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே

குசோன்னதே குங்குமராகசோணே

புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண

ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:


நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.


மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப 

வனவாஸினீ

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே


ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியேஉலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. (கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).


ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த

ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட

பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப

காதம்ப காந்தார வாஸப்ரியே,

க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!


அம்ருதம் எனும் கடலின் மத்தியில், 

மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ

மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக 

விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே! 

யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே, 

அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே. 


ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல 

நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே

சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீநத்த 

ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக 

ஸம்பாவிதே!


நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின் புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே! 


காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப 

ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே 

சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே 

ஸூராமே ரமே


காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனு ப்ரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே! 


ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா 

சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்

தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த 

ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.


ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும், கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்

குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே. 

வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல 

தாளீ தளா பத்த 

தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.


திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு

ஜராந்தோலன 

ஸமாக்ஷிப்த கர்ணைக 

நீலோத்பலே, ச்யாமலே 

பூரிதா சேஷலோகாபிவாஞ்

சாபலே நிர்மலே.


சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.

ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த 


ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே 

ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே 

முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக  

கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே, 

ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !


நெற்றியில் காணும் வியர்வைத் துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை புஷ்பம் ஏந்தியவளே! 


குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ 

நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர  

சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே

முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் ப்ரகாசத்துடன்

 கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே. 


ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத  யோத்வேல லாவண்ய 

துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !

திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா 


ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே

துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்து உடையவளே, நளின நடையுடையவளே! சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே! 

ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:


விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் 

கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !

ரத்னங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!


வாஸராரம்பவேலா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த 

ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.

திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம 

ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே 

ஸன்னுதா (ஆ) 

கண்டலே, 

சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை 


புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே, எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் ரத்ன மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் ப்ரகாசமுடைய தளிர் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளி

யினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே. 


தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ 

வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர  கரே

ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே 

லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, 


மஞ்ஜூ ஸம்பாஷணே

நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான 

ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசை

யினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே. 


சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே 

பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.

விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு 

கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர 

மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.


மன்மதனின் வில்லின் நாணுக்கு ஒப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்ரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய இடையுடையவளே, பவுர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச புஷ்பம் போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் ப்ரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே. 


கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ 

ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!


அழகிய மென்மையான நீலத்தாமரை புஷ்பத்தினாலான மன்மதனின் அம்புறாத் தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும் 

சந்திரன் போன்ற மிகையான ப்ரகாசத்துடன் விளங்குபவளே. 


ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச 

தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச, 

கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர

ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.


ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, 

ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, 

சங்க்க பத்மத்வயோபாச்ரிதே வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு, 

சிவன், யமன், வருணன், குபேரன், ப்ரஹ்மா, 


நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே! நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே, அழிவற்றவளே. ரத்னம் போன்ற தாமரையில் ரத்ன 

ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து, சங்கு, தாமரை இரண்டாலும் சேவிக்கப்படுபவளே. 

தத்ரவிக்னேச துர்க்கா, வடுக்ஷேத்ர பாலையுதே 

மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, 

மஞ்ஜூளாமேனகாத்யங்க நாமானிதே, 


பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி 

வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, 

சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி 

சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !

பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங் கனா மண்டலை ரர்ச்சிதே


விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்ரபாலன் இவர்களுடன் கூடியவளே. ஆனந்தத்தில் திளைக்கும், மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே. மஞ்ஜுளா, மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே, எட்டு பைரவர்கள் எனும் தேவர்களால் சூழப்பட்டவளே. பூமி, லக்ஷ்மி முதலிய எட்டு சக்திகளுடன் கூடியவளே. ப்ராம்ஹீ முதலிய மாத்ருக்கள் எனும் எழுவரால் அலங்கரிக்கப்பட்டவளே. யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களின் 

ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுபவளே. 


பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யாச 

ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாபிநந்திதே

பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, 

யோகினாம் மானஸே, த்யோதஸே, 


சந்தஸாமோஜஸா ப்ராஜஸே 

கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன 

க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே 

பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, 

விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர்கீயஸே 


மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே, மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே, ப்ரியமுள்ள வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே, பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும் செய்கிறாய். யோகிகளின் மனதில் ப்ரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் ப்ரியமுள்ள க்ருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்

படுகிறாய். மனதைக் கவரும் வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய். 


ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.

யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே 

ஸர்வ ஸௌபாக்ய வாஞ்ச்சா வதூ

பீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.

ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு 

காதா ஸமுச்சாடனம் 

கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் 

ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகாபம் சுகம் லாலயந்தீ 

 பரிக்ரீடஸே.


செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ, கந்தர்வ, ஸித்தர்களின் ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். சகல வித்யைகளின் ஸாரமுடைய இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன் கூடிய மூக்குடையதும் ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய். 


பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம் 

ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்

பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய 

வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.

யேன வாயா வகாபாக்ருதிர் 

பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: 


யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.

கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத: 


தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம் 


செய்பவருக்கு எதுதான் கிட்டாது. 

தஸ்ய லீலாஸரோவாரித: 

தஸ்ய கேளீவனம் நந்தனம் 

தஸ்ய பத்ராஸனம் பூதலம், 

தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, 

தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்

ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்

மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, 


ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, 

ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, 

ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, 

ஸர்வவிச்வாத்மிகே, 

ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, 

ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், 


பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:


சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும் பணிப்பெண்ணாகிறாள். அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே! 


எல்லா ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக்காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.

Sunday, 7 May 2023

ஸ்ரீ_லக்ஷ்மி_நரசிம்மர் #ராஜ_மந்திரம்

 #ஸ்ரீ_லக்ஷ்மி_நரசிம்மர்

#ராஜ_மந்திரம்


திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. 


இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம். 


தினமும் மாலையில், லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை படைத்துல இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம். 


வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் 

விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!

நிநாத த்ரஸ்த விச்வாண்டம் 

விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!


பொருள்: பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.


ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் 

ஸபலௌகம் திதே ஸூதம்!

நகாக்ரை சகலீசக்ரே

யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!


பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.


பதா வஷ்டப்த பாதாளம் 

மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!

புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்

மஹா விஷ்ணும் நமாம்யஹம்!! 


பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.


ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர

ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய

தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!


பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 


ஸர்வேந்த்ரியை ரபி விநா

ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!

யோ ஜாநாதி நமாம் யாத்யம்

தமஹம் ஸர்வதோ முகம்!!


பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.


நரவத் ஸிம்ஹவச் சைவ

யஸ்ய ரூபம் மஹாத்மந!

மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்

தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!


பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன். 


யந்நாம ஸ்மரமணாத் பீதா

பூத வேதாள ராக்ஷஸா

ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி

பீஷணம் தம் நமாம்யஹம்!!


பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

.

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய

ஸகலம் பத்ர மச்நுதே!

ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட

யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!!


பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 


ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்

ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!

பக்தாநாம் நாசயேத் யஸ்து

ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!!


பொருள்: மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன். 


நமஸ்காரத்மகம் யஸ்மை

விதாய ஆத்ம நிவேதநம்!

த்யக்தது கோகிலாந் காமாந்

அச்நந்தம் தம் நமாம்யஹம்!!


பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

 

தாஸபூதா: ஸ்வத ஸர்வே 

ஹ்யாத்மாந பாமாத்மந!

அதோஹமபி தே தாஸ: 

இதி மத்வா நமாம்யஹம்!!


பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.


சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்

பதாநாம் தத்வ நிர்ணயம்!

த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய

ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!


பொருள்: ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.


உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!


பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன். 


ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நம;

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:

ஓம் பூம் பூம்யை நம:

ஓம் நீம் நீளாயை நம:


பொருள்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம். லட்சுமி தாயாருக்கு நமஸ்காரம். பூமாதேவிக்கு நமஸ்காரம். நீளாதேவிக்கு நமஸ்காரம்.

Sunday, 16 April 2023

_பாண்டுங்காஷ்டகம்

 #ஆதிசங்கரின்_பாண்டுங்காஷ்டகம்


1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !

ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


2.தடித்வாஸஸம் நீலமேகாவபாஸம்

ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !

வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


மின்னலொத்த வஸ்திரம் தரித்தவரும், நீலமேகம் போன்று விளங்குபவரும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவரும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுடரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்

நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !

விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே

ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !

சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவரும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.


5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்

லஸத்குண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !

ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.


6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்

ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !

த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.


7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்

ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !

கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்

பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !

ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!


பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.


9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே

படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !

பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே

ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!


புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் கடந்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.


பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.


நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

Tuesday, 4 April 2023

ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :

 ஶ்ரீ நாராயணப⁴ட்ட பாத ³ விரசிதா ஶ்ரீபாத ³ஸப்ததி :


யத்ஸம்வாஹநலோபி⁴ந : ஶஶிகலாசூட ³ஸ்ய ஹஸ்தாம்பு ³ஜ-

ஸ்பர்ஶேநாபி ச லோஹிதாயதி முஹுஸ்த்வத்பாத ³பங்கேருஹம் ।

தேநைவோத் ³த⁴தகாஸராஸுரஶிரஶ்ஶ ்ரு ’ங்கா ³க்³ரஸஞ்சூர்ணந -

ப்ராசண்ட் ³யம் தத ³நுஷ்டி ²தம் கில கத ²ம் முக்திஸ்த ²லஸ்தே ²! ஶிவே ! ॥ 1॥

முக்தி ஸ்தலத்தில்* வாசம் செய்யும் மங்களாம்பிகயே ! சந்திரனை சிரசில் தரித்துள்ள ஸ்ரீ பரமேஸ்வரன் உன் ஸ்ரீ பாதாரவிந்ததைத் தாங்கப் பேராவல் கொண்டவராய் கமலம் போன்ற கையினால் உன் ஸ்ரீ பாதத்தை ஸ்பரிசிக்கும் போது உன் ஸ்ரீ பாதம் சிவந்து போகிறது.  அப்பேர்ப்பட்ட உன் ஸ்ரீ பாதமானது மலையை விடப் பெரிய சரீரங்கொண்ட மஹிஷாசுரனுடைய தலையைப் பொடி பொடியாக்கியது ப்ரசித்தம். இது எவ்வாறு?

· முக்தி ஸ்தலம் என்ற க்ஷேத்திரத்தில் ப்ரகாசிப்பவள்

· முக்திக்குத் தகுதி வாய்ந்த பெரியோர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவள்

· மாயையாகிற அவித்யையைப் போக்கும் ப்ரம்ம வித்யை சொரூபமாக இருப்பவள் என்று பல அர்த்தங்கள் கொள்ளலாம்.

த்வத்பாத ³ம் நிஜமஸ்தகே க⁴டயிதும் கே கே நு லோகே ஜநா :

கிம் கிம் நாரசயந்தி து³ஶ்சரதபஶ்சர்யாஸபர்யாதி ³கம் ।

மந்யே த⁴ந்யதமம் து தே ³வி ! மஹிஷம் வைரஸ்த ²யைவ த்வயா

யந்மூர்த்⁴நி ஸ்வயமேவ பாதகஹரம் பாதா ³ம்பு ³ஜம் பாதிதம் ॥ 2॥

தேவியே ! ஜனங்கள் உன்னுடைய ஸ்ரீ பாதார விந்தங்கள் தங்கள் சிரஸின் மீது தாங்கக் கிடைப்பதற்காக மிகக் கடுமையான தபஸ், பூஜை முதலிய என்னென்னவோ காரியங்களையெல்லாம் மேற்கொள்ளுகிறார்கள். ஆனால் மஹிஷாசுரனோ உன்னுடைய பரம விரோதியாக இருந்தான். இருந்தும் நீயோ சர்வ பாபங்களையும் போக்கும் உன் ஸ்ரீ பாத மலத்தை நீயாகவே அவனுடைய சிரஸின் மீது வைத்தாய். அந்த மஹிஷாசுரனல்லவோ மகா பாக்கிய சாலி.

இங்கு “கே கே ஜனா” என்று சொல்லியிருக்கிறபடியால் மனுஷ்யர்களைத் தவிர தேவர்கள், யக்ஷர்கள், கந்தவர்கள் முதலானவர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக ஆகும்.

த்வத்பாதா ³ம்பு ³ஜமர்பிதம் க்வ நு ஶிவே ! கிந்நு த்ரயீமஸ்தகே ?

நித்யம் தத்த்வவிசாரத ³த்தமநஸாம் சித்தாம்பு ³ஜாக் ³ரேஷு வா ? ।

கிம் வா த்வத்ப்ரணயப்ரகோபவிநமந்மாராரிமௌலிஸ்த ²லே ?

கிம் ப்ரோத்க ²ண்டி ³தகோ⁴ரஸைரிப⁴மஹாதை ³த்யேந்த் ³ரமூர்த் ³தா⁴ந்தரே ? ॥ 3॥

மங்களாம்பிகையே ! உன் ஸ்ரீ பாத கமலங்கள் எங்கு இருக்கின்றன? தேவர்களுடைய சிரஸாகிற உபநிஷத்துக்களிலா ? (வேதங்களுக்கு சிரஸாகிற ப்ரணவமாகிற ஓங்காரத்தையும் கொள்ளலாம்) அல்லது தத்வ ஆராய்ச்சியில் மனஸைப் பறி கொடுத்த யோகிகளின் ஹ்ருதய கமலங்களிலா ?

அல்லது மன்மதனைச் சாம்பலாக்கிய ஸ்ரீ பரமேஸ்வரன் பிரளய கலகத்தின் போது உன் ஸ்ரீ பதங்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது அந்த ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சிரஸின் மீதா ? அல்லது மகா பயங்கரமான மஹிஷாசுரனுடைய வெட்டப்பட்ட சிரசின் மீதா ?

த்வத்பாதா ³ஞ்சலரூபகல்பலதிகாபா ³லப்ரவாலத் ³வயம்

யே தாவத்கலயந்தி ஜாது ஶிரஸா நம்ரேண கம்ரோஜ்ஜ்வலம் ।

தேஷாமேவ ஹி தே ³வி ! நந்த ³நவநக்ரீடா ³ஸு லப்⁴யம் புந :

ஸ்வர்வல்லீதருணப்ரவாலப⁴ரணம் ஸேவாநுரூபம் ப²லம் ॥ 4॥

தேவியே ! உன் ஸ்ரீ பாதங்களின் முன் பாகம் அதிசுந்தரமாகவும், ப்ரகாசமாகவும், தேவலோகத்துக் கல்பகக் கொடியின் மொட்டுக்களைப் போன்று (மென்மையுடனும், வேண்டியவற்றைத் தரவல்லவையாகவும்) இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஸ்ரீ பாதங்களை வணக்கத்துடன் தங்கள் சிரஸின் மீது யார் தரிக்கின்றார்களோ அவர்கள் (ஸ்வர்க்கத்தை வேண்டுபவர்க்ளாயிருந்தால்) ஸ்வர்க்கத்தில் நந்தவனங்களளில் கல்பகக்கொடி போன்ற தேவ கன்னிகைகளுடன் ஆனந்திக்கிறார்கள். அதாவது, பக்திக்குத் தக்க பலனை உன் ஸ்ரீ பாத கமலம் அளிக்கிறது. (கல்பகக்கொடி போன்ற ஸ்ரீ பாதங்களை நமஸ்கரித்ததன் பலன், ஸ்வர்க்கத்திற்கே கொண்டு சென்று, கல்பகக் கொடி போன்ற கன்னிகைகளுடன் ஸ்வர்க்க ஆனந்தத்தை அளிக்கிறது.

மோக்ஷத்தை வேண்டுபவர்களுக்கு மோக்ஷம் சித்திக்கும். வேண்டுவது கிடைக்கும் என்பது தாத்பரியம்.

தா⁴வல்யம் பரிலால்யதே புரரிபோரங்கே ³ந துங்க ³ஶ்ரீயா

கிஞ்ச ஶ்யாமலிமாபி கோமலதரே பா⁴த்யேவ கா ³த்ரே ஹரே : ।

தத்தாத் ³ரு’க்பத ³வீம் மமாபி ஜநயேத்யஸ்தோகஸேவாரஸா -

தா ³ருண்யம் தவ லீயதே சரணயோ : காருண்யமூர்தே ! ஶிவே ! ॥ 5॥

கருணாமூர்த்தியே ! மங்களாம்பிகையே ! திரிபுராந்தகனான (முப்புரம் எரித்தவனான) ஸ்ரீ பரமேஸ்வரனின் சரீரத்தினுடைய உத்தமமான ஒளியினால் வெண்மை நிறமானது சோபையை அடைகிறது. ஸ்ரீ ஹரியினுடைய மிகவும் மிருதுவான சரீரதிலோ, நீல மேக ஸ்யாமள வர்ணமானது ப்ரகாசிக்கிறது.

சிவப்பு நிறமோ, உன் பாதங்களிலே மகத்தான சேவை செய்வதினால், எனக்கு சிவ விஷ்ணு போன்ற பதவியைத்ததந்துவிடத்தான் போகிறாய் என்று உன் பாதங்களிலேயே லயமாகி விடுகிறது.

உன் ஸ்ரீ பாதங்களை நான் இறுகப் பற்றிக் கொண்டிருப்பதினால் சிவப்பு நிறமானது மறைந்து விடுகிறது. காரணம், சிவப்பு நிறத்திறிகு தெரியும், நீ சிவ, விஷ்ணு போன்ற பதவியை எனக்குத் தரப் போகிறாய் என்று.


Saturday, 18 March 2023

கந்தர் அனுபூதி

 #கந்தர் அனுபூதி

காப்பு


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே

பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


நூல்

ஆடும் பணிவே லணிசே வலெனப்

பாடும் பணியே பணியா யருள்வாய்

தேடுங் கயமா முகனைச் செருவிற்

சாடுந் தனியா னைசகோ தரனே.


உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனு நீயலையோ

எல்லாமற என்னை யிழந்த நலஞ்

சொல்லாய் முருகா சுரபூ பதியே.


வானோ புனல்பார் கனல்மா ருதமோ

ஞானோ தயமோ நவில்நான் மறையோ

யானோ மனமோ எனையாண் டவிடந்

தானோ பொருளா வதுசண்முகனே.


வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந்

தளைபட் டழியத் தகுமோ தகுமோ

கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந்

தொளைபட் டுருவத் தொடுவே லவனே.


மகமாயை களைந்திட வல்ல பிரான்

முகமாறு மொழிந்து மொழிந் திலனே

அகமாடை மடந்தை யரென் றயருஞ்

சகமாயையுள் நின்று தயங் குவதே.


திணியா னமனோ சிலைமீ துனதாள்

அணியா ரரவிந்த மரும்பு மதோ

பணியா வென வள்ளி பதம் பணியுந்

தணியா வதிமோக தயா பரனே.


கெடுவாய் மனனே கதிகேள் கரவா

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடுவே தனைதூள் படவே

விடுவாய் விடுவாய் வினையா வையுமே.


அமரும் பதிகே ளகமா மெனுமிப்

பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம் பொரு தானவ நாசகனே.


மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்

தட்டூ டறவேல் சயிலத் தெறியும்

நிட்டூர நிராகுல நிர்ப் பயனே.


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே.


கூகா வெனவென் கிளைகூ டியழப்

போகா வகைமெய்ப் பொருள்பே சியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகா மணியே.


செம்மான் மகளைத் திருடுந் திருடன்

பெம்மான் முருகன் பிறவா னிறவான்

சும்மா இருசொல் லறவென் றலுமே

அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.


முருகன் தனிவேல் முனிநங் குருவென்

றருள்கொண் டறியா ரறியுந் தரமோ

உருவன் றருவன் றுளதன் றிலதன்

றிருளன் றொளியன் றெனநின் றதுவே.


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்

றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்

மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்

ஐவாய் வழி செல்லு மவாவினையே.


முருகன் குமரன் குகனென்று மொழிந்

துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

பொருபுங் கவரும் புவியும் பரவுங்

குருபுங் கவஎண் குணபஞ் சரனே.


பேராசை யெனும் பிணியிற் பிணிபட்

டோரா வினையே னுழலத் தகுமோ

வீரா முதுசூர் படவே லெறியுஞ்

சூரா சுரலோ கதுரந் தரனே.


யாமோ தியகல் வியுமெம் மறிவுந்

தாமே பெறவே லவர்தந் ததனாற்

பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீ ரினியே.


உதியா மரியா வுணரா மறவா

விதிமா லறியா விமலன் புதல்வா

அதிகா வநகா வபயா வமரா

பதிகா வலசூர பயங் கரனே.


வடிவுந் தனமும் மனமுங் குணமுங்

குடியுங் குலமுங் குடிபோ கியவா

அடியந் தமிலா அயில்வே லரசே

மிடி யென்றொரு பாவி வெளிப் படினே.


அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்

உரிதா வுபதேச முணர்த் தியவா

விரிதா ரணவிக் ரமவே ளி மையோர்

புரிதா ரகநா கபுரந் தரனே.


கருதா மறவா நெறிகா ணஎனக்

கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்

வரதா முருகா மயில்வா கனனே

விரதா சுரசூர விபாட ணனே.


காளைக் குமரே சனெனக் கருதித்

தாளைப் பணியத் தவமெய் தியவா

பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்

வேளைச் சுரபூபதி மேருவையே.


அடியைக் குறியா தறியா மையினால்

முடியக் கெடவோ முறையோ முறையோ

வடிவிக் ரமமேல் மகிபா குறமின்

கொடியைப் புணருங் குணபூத ரனே.


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ

சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்

போர்வேல புரந்தர பூப தியே.


மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்

தையோ அடியே னலையத் தகுமோ

கையோ அயிலோ கழலோ முழுதுஞ்

செய்யோய் மயிலே றியசே வகனே.


ஆதா ரமிலே னருளைப் பெறவே

நீதா னொருசற் றுநினைந் திலையே

வேதா கமஞா னவிநோ தமனோ

கீதா சுரலோ கசிகா மணியே.


மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்

என்னே விதியின் பயனிங் கிதுவோ

பொன்னே மணியே பொருளே யருளே

மன்னே மயிலேறிய வானவனே.


ஆனா அமுதே அயில்வே லரசே

ஞானா கரனே நவிலத் தகுமோ

யானாகிய வென்னை விழுங்கி வெறுந்

தானாய் நிலைநின் றதுதற் பரமே.


இல்லே யெனுமா யையி லிட்டனைநீ

பொல்லே னறியாமை பொறுத் திலையே

மல்லே புரிபன் னிருவா குவிலென்

சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.


செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்

றொவ்வா ததென வுணர்வித் ததுதான்

அவ்வா றறிவா ரறிகின் றதலால்

எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.


பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே

வீழ்வா யென என்னை விதித்தனையே

தாழ்வா னவைசெய் தனதா முளவோ

வாழ்வா யினிநீ மயில்வா கனனே.


கலையே பதறிக் கதறிக் தலையூ

டலையே படுமா றதுவாய் விடவோ

கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்

மலையே மலை கூறிடு வாகையனே.


சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்

விந்தா டவியென்று விடப் பெறுவேன்

மந்தா கினிதந்த வரோ தயனே

கந்தா முருகா கருணா கரனே.


சிங்கார மடந்தையர் தீநெறி போய்

மங்காம லெனக்கு வரந்தருவாய்

சங்க்ராம சிகா வலசண் முகனே

கங்கா நதி பால க்ருபாகரனே.


விதிகாணு முடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்

மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்

துதியா விரதா சுரபூ பதியே.


நாதா குமரா நமவென் றரனார்

ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்

பாதா குறமின் பதசே கரனே.


கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்

பரிவா ரமெனும் பதமே வலையே

புரிவாய் மனனே பொறையா மறிவால்

அரிவா யடியொடு மகந் தையையே.


ஆதாளியை யொன் றறியே னையறத்

தீதாளியை யாண் டதுசெப் புமதோ

கூதாள கிராத குலிக் கிறைவா

வேதாள கணம் புகழ்வே லவனே.


மாவேழ் சனனங் கெடமா யைவிடா

மூவேடணை யென்று முடிந் திடுமோ

கோவே குறமின் கொடிதோள் புணருந்

தேவே சிவ சங்கர தேசிகனே.


வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்

மனையோடு தியங்கி மயங் கிடவோ

சுனையோ டருவித் துறையோடு பசுந்

தினையோ டிதணோடு திரிந் தவனே.


சாகா தெனையே சரணங் களிலே

காகா நமனார் கலகஞ் செயுநாள்

வாகா முருகா மயில்வா கனனே

யோகா சிவஞா னொபதே சிகனே.


குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைக் தனிவேல் நிகழ்த் திடலுஞ்

செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்

றறிவற் றறியா மையு மற்றதுவே.


தூசா மணியுந் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளந் துகளா யின்பின்

பேசா அநுபூதி பிறந் ததுவே.


சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்

சூடும் படிதந் ததுசொல் லுமதோ

வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்

காடும் புனமுங் கமழுங் கழலே.


கரவா கியகல்வி யுளார் கடைசென்

றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ

குரவா குமரா குலிசா யுதகுஞ்

சரவா சிவயோக தயா பரனே.


எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ

சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்

கந்தா கதிர்வே லவனே யுமையாள்

மைந்தா குமரா மறைநா யகனே.


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்

பேறா வடியேன் பெறுமா றுளதோ

சீறா வருசூர் சிதைவித் திமையோர்

கூறா வுலகங் குளிர்வித் தவனே.


அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்

பிறிவொன் றறநின் றபிரா னலையோ

செறிவொன் றறவந் திருளே சிதைய

வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.


தன்னந் தனிநின் றதுதா னறிய

இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ

மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்

கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.


மதிகெட்டறவா டிமயங் கியறக்

கதிகெட்டவமே கெடவோ கடவேன்

நதிபுத்திர ஞான சுகா திபவத்

திதிபுத் திரர்வீ றடுசே வகனே.


உருவா யருவா யுளதா யிலதாய்

மருவாய் மலராய் மணியா யொளியாய்

கருவா யுயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவா யருள்வாய் குகனே.


-- அருணகிரி நாதர்

Friday, 3 March 2023

பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்

 #பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்:


ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்


#பொருள் :


பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.


1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம

நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்

சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ

ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி

முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்

பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த

வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)


#பொருள் :


பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


3.லோகாவனாயாத்தலீலம் பூஜி

தானேக தேவேந்த்ர லோகைக பாலம்

ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு

தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்


#பொருள் :


உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.


4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச

ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்

ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர

பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)


#பொருள் :


இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


5. வாமேகரே சாருசக்ரம்-வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்

காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய

ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க

நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய

பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)


#பொருள் :

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி

தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை

நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு

தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)


#பொருள் :


விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


#ஸ்ரீ_பார்த்தசாரதி_சுவாமி_பெருமை:


மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். *


இங்கு உற்சவ மூர்த்தி தன் #கதாயுதம்_இல்லாமல் #செங்கோலுடன்_காட்சி_தருகிறார்.


🙏#ஸ்ரீ_பார்த்தசாரதி_உன்_திருவடிகளே_சரணம்".🙏


*ஓம் நமோநாராயணா*

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...