Thursday, 16 February 2023

லலிதா_நவரத்தின_மாலை

 #லலிதா_நவரத்தின_மாலை


ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, லலிதா அன்னையை போற்றி புகழும் அற்புதமான  பாட்டு. அம்பிகையை 9 நவரத்தினங்களாக வர்ணித்து, பிறகு பாடலின் பயனையும் குறிக்கிறது. 


"ஞான கணேசா சரணம்

ஞான ஸ்கந்தா சரணம் சரணம்

ஞான ஸத்குரோ சரணம் சரணம்

ஞானா னந்தா சரணம் சரணம்"


#காப்பு


"ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்

பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே"


ஐந்து அறங்களையும் நன்கு புரியும் நலம் பூக்கும் சிரிப்பினையுடைய புவனேஸ்வரியின் மேல் இயற்றப்படும் இந்த நவரத்தின மாலை நூல் நன்கு அமைய கணநாயகனான யானை காக்குமே.


"மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே"


*1. #வைரம்*


கற்றும் தெளியார் காடேகதியாய்

கண்மூடி நெடுங்கன வானதவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்

பெருகும் பிழையேன் பேசத்தகுமோ

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கெமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


கற்க வேண்டிய நூற்கள் பலவும் கசடறக் கற்றப் பின்னும் அப்படிக் கற்றவர் தெளிவு பெறவில்லையாம். உலக இன்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று அதுவே கதியாய் இருந்து கண் மூடி நீண்ட நாட்கள் பெருந்தவம் செய்து தவவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லையாம். அவர்கள் நிலையே அப்படி இருக்க மிகத் தாழ்ந்த பிழைகள் பலவும் புரியும் ஏதாவது பேசவும் முடியுமோ? வயிரத்தால் செய்த படைவாளினை மிக வலிமை மிக்க பகைவர்களுக்கு எமனாகப் பற்றி எடுத்தவளே. அடியவர்களுக்கு என்றும் வற்றாத சுனையைப் போல் அருள் புரிபவளே. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


*2. #நீலம்*


மூலக்கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக்கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக்குவையே சரணம்

நீலத்திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரி வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


மூலாதாரமெனும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி எனும் தீயே சரணம் சரணம். முடிவும் முதலும் ஆனவளே; முடிவும் முதலும் அற்றவளே சரணம் சரணம். அழகிய கிளியே சரணம் சரணம். என்றும் குறையாத ஒளிக்கூட்டமே சரணம். உன்னுடைய நீலத் திருமேனியையே தியானித்து மற்ற நினைவுகளே இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரியே என் முன் வருவாய் வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


*3. #முத்து*


முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே

முன்னின் றருளும் முதல்வி சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரணம்

தத்தேறிய நான் தனயன் தாய் நீ

சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 


முப்பெரும் தேவர்களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களும் குறைவறச் செய்யும் வண்ணம் அவர்களுக்கு அருளும் முதல்வியே சரணம். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் விதையானவளே; அந்த விதையிலிருந்து விளைந்த எல்லாமும் எல்லாரும் ஆனவளே; சரணம் சரணம். வேதங்களின் முடிவான வேதாந்தமாம் உபநிடதங்களில் நிலைத்து வாழ்பவளே. உன்னிடம் தஞ்சம் என்று அடைந்த நான் உன் மகன்; நீ என் தாய். என்றும் அழியாத வரத்தை எனக்கருளவே வருவாய். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் நான் அங்கும் இங்குமாக அலையும் வாழ்வை அடையாமல் என்றும் அழியாத வாழ்வை அருள்வாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


தத்தேறிய நான் - உன்னிடம் தத்தாக வந்த நான்; தஞ்சமாக வந்த நான்.


*4. #பவளம்*


அந்தி மயங்கிய வானவி தானம்

அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்

தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ

எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்

மந்திர வேத மயப் பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


அந்தி வானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. சிந்தை நிரம்பும்படி, மகிழும் படி வளம் பொழிந்து இந்த உலகத்தை (பாரை) ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ? அன்னையே! என் தந்தையாம் இறைவரின் இடப்பாகத்திலும் அவர் தம் மனத்திலும் / என் மனத்திலும் இருப்பாள். அவளை எப்போதும் எண்ணுபவர்க்களுக்கு என்றும் அருளும் எண்ணம் மிகுதியாகக் கொண்டாள். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளாவாள். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!


*5. #மாணிக்கம்*


காணக் கிடையா கதியானவளே

கருதக் கிடையாக் கலையானவளே

பூணக்கிடையாப் பொலிவானவளே

புனையக் கிடையாப் புதுமைத்தவளே

நாணித்திரு நாமமும் நின் துதியும்

நவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


எளிதில் காணக்கிடைக்காத நற்கதியானவளே! எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலை வடிவானவளே! அணிவதற்கு அரிதான அழகு அணியானவளே! கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே! இவற்றை எல்லாம் செய்ய முயன்று முடியாமல் தம் குறைப்பாட்டை எண்ணி நாணி உன் திருநாமங்களையும் உன் துதிகளையும் யார் நவிலவில்லையோ அவர்களை நாடாதவளே! மாணிக்கத்தின் ஒளிக்கதிரானவளே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!


*6. #மரகதம்*


மரகத வடிவே சரணம் சரணம்

மதுரித பதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

சுதிஜதிலயமே இசையே சரணம்

ஹர ஹர சிவ என்றடியவர் குழும

அவரருள் பெற அருளமுதே சரணம்

வர நவநிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பச்சை மரகத உருவையுடையவளே சரணம் சரணம். தேன் பொழியும் திருவடிகளை உடையவளே சரணம் சரணம். தேவர் தலைவன் உன் பாதங்களைப் பணிய திகழ்ந்திருப்பாய் சரணம் சரணம். சுதி, ஜதி, லயம் போன்ற இசை உறுப்புகளாய் இசைவடிவானவளே சரணம். ஹர ஹர சிவ என்று அடியவர் பாடிக் கொண்டு குழும அவர்கள் இறைவரின் அருள் பெறும் படி அருள் புரியும் அமுதமானவளே சரணம். ஒன்பது வித செல்வங்களானவளே சரணம் சரணம். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


*7. #கோமேதகம்*


பூமேவிய நான் புரியும் செயல்கள்

பொன்றாது பயன் குன்றா வரமும்

தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்

திடமாய் அடியேன் மொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வான் நிலவே

குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்

மரமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பூமியில் பிறந்த நான் புரியும் எல்லா செயல்களும் எந்த வித குறைகளும் இல்லாமல் எல்லா பயன்களும் குறைவின்றி கிடைக்கும் வரமும், தியிலிட்டுப் பொசுக்கினாலும் 'ஜெய சக்தி' என்று உன் அருளில் உறுதி கொண்டு அடியேன் சொல்லும் வீரமும், தாயே நீ வந்து தருவாய். மோமேதகமே! குளிர் வான் நிலவே! குழலைப் போல் இனிய வாய்மொழியைக் கொண்டவளே! மாமேரு மலையில் வாழும் கிளியே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!


*8. #பத்மராகம் (புஷ்பராகம் )*


ரஞ்சனி நந்தினி அங்கணி பதும

ராகவிகாஸ வியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணி

சாம்பவி சந்த்ர கலாதரி ராணி

அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


இன்பம் அருள்பவளே! இன்ப வடிவே! அழகிய கண்கள் உடையவளே! பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே! அம்மா! நிலையில்லா மன நோய்களை நீக்குபவளே! அனைத்துக் கலைகளையும் அறிந்தவளே! சம்புவின் சக்தியே! நிலவை அணிந்தவளே! தலைவியே! கருநிறத் திருமேனியைக் கொண்டவளே! எல்லா வித அணிகலன்களும் அணிந்திருப்பவளே! மரணமிலா பெருவாழ்வின் உருவே! என்றும் மங்கலகரமானவளே! அழகிய மேருமலை சிகரத்தில் நிலைத்து வசிப்பவளே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே! 


*9. #வைடூர்யம்*


வலையொத்த வினை கலையொத்த மனம்

மருளப் பறையாரொலி யொத்த விதால்

நிலையற் றெளியேன் முடியத்தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அலையற் றசைவற் றநுபூதி பெறும்

அடியார் முடிவாழ் வைடூரியமே

மலையத்துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


நான் செய்த முன்வினைப்பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும் படி அறையும் பறை போன்றவை உலக இன்ப துன்பங்கள். இப்படி வினை வயப்பட்டு இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு மானைப் போல் என் மனம் நிலையற்று எளியேன் அழிந்துப் போகலாமோ? இது தகுமோ? இவையெல்லாம் தூளாகப் போகும் படி வரம் தருவாய். அலைவற்று அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியார்களின் திருமுடியில் வாழும் வைடூரியமே! மலையத்துவச பாண்டியன் மகளே! மீனாட்சியே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே. 


#பயன்


எவர் எத்தினமும் இசையாய் லலிதா

நவரத்தின மாலை நவின்றிடுவார்

அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்

சிவரத்தினமாய் திகழ்வா ரவரே.


மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்

பிகையே.!


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

Wednesday, 15 February 2023

*சியாமளா நவராத்திரி*

 *சியாமளா நவராத்திரி* 

***************************


 (22-01-2023

- to -

  -30-01-2023)


 


நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை…

ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.


அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.


சாக்தமும் நவராத்திரிகளும்:


இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும்.


பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.


ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை

நாம் அறிவோம்.


நவராத்திரியின் வகைகள்

1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது

வஸந்த நவராத்திரி).

(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)


2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது

ஆஷாட நவராத்திரி.

(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)


3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது

சாரதா நவராத்திரி.

(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).


4தை மாதத்தில் கொண்டாடப்படுவது

ச்யாமளா நவராத்திரி.

(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)


ச்யாமளா தேவி

ச்யாமளா’ என்றும்,

‘ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும்,

ஸ்ரீமாதங்கி என்றும்,

‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை,


மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.


தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.


கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.


வேத மந்திரங்களுக்கு

எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.


இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.


ஸ்ரீ ராஜ மாதங்கி,

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.


அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள்.


அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,

(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.


இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.


சரஸ்வதி தேவி அருள்

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே

ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.


கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது.


வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள்.


அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை.


ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர்.


இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.


ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘சியாமளா’ என்று பெயர்.


சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!


பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.


சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.


தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இன்று (15ம் தேதி சதுர்த்தி நாள்). நாளைய தினம் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வசந்த பஞ்சமி.


அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.


சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி என்பார்கள்.


பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!


மாணிக்ய வீணா முபலாலயந்தீம் |

மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸம் ||

மஹேந்திர நீலத்யுதி கோமலாங்கீம் |

மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி ||


மாதா மரகத சியாமா மாதங்கீ மதசாலீனீ 

குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பாத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே

AWB

மகாபெரியவா சரணம் 🙏


அடியேன் 

sriramkannan

Wednesday, 1 February 2023

பீஷ்மாஷ்டமி

 #பீஷ்மாஷ்டமி-


பீஷ்மாஷ்டமி- 

"கங்கையின் மைந்தன்' என்றும்; "பிதாமகன்' என்றும் போற்றப்படும் பீஷ்மரின் இயற்பெயர் காங்கேயன் என்பதாகும். இவர் கங்கையிடம் பிறந்தது எப்படி?

 

கங்கையைக் கண்டு அவள் அழகில் மயங்கிய சாந்தனு மன்னன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதற்கு கங்கை ஓர் நிபந்தனை விதித்தாள்.

 

""திருமணத்திற்குப்பின் நமக்குப் பிறக்கும் குழந்தையை எடுத்துச் சென்று நதியில் வீசிவிடுவேன். ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்கக் கூடாது. இந்த நிபந்த னையை மீறிக் காரணம் கேட்டால் நான் உம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவேன்'' என்றாள். கங்கையின் நிபந்த னைக்குக் கட்டுப்பட்டு அவளுக்கு மாலை சூடினார் சாந்தனு. முதலில் ஒரு குழந்தை பிறந்தது. அதை எடுத்துச் சென்று நதியில் வீசினாள் கங்காதேவி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தனு மகாராஜாவின் மனம் கலங்கியது. ஆனால் நிபந்தனை அவரைத் மௌனியாக்கி விட்டது! இவ்வாறு ஏழு குழந்தைகளை நதியில் வீசிவிட்டாள் கங்கை. அடுத்து தான் பெற்ற எட்டாவது குழந்தையுடன் நதியை நோக்கிச் சென்றாள் கங்கை. இதனைப் பொறுக்க முடியாமல் சாந்தனு மகாராஜா, ""கங்கா, பெற்றெ டுத்த குழந்தையை ஏன் நதியில் வீசுகிறாய்?'' என்று கேட்டு விட்டார். உடனே கங்கையானவள், ""மகாராஜா! நீங்கள் நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி உங்களுக் கும் எனக்கும் எந்த சம்பந்த மும் இல்லை'' என்று குழந் தையை சாந்தனுவிடம் கொடுத்துவிட்டு, நதியில் சங்கமமாகி மறைந்தாள். அந்தக் குழந்தைதான் பிரபா சன் என்னும் காங்கேயன்.

 

காங்கேயன்தான் பின்னா ளில் "பீஷ்மர்' என்று பெயர் பெற்றார்.

 

ஒருசமயம் சாந்தனு மகாராஜா வேட்டை யாடச் சென்றார். அப்போது மீனவ குலப் பெண்ணைக் கண்டு, அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் கொண்டார். அப்பெண்ணின் தந்தை யான மீனவர் குலத் தலைவனி டம் சென்று சாந்தனு தன் விருப்பத்தைக் கூறிய போது, அவர் தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளுக்கே அரசுரிமை தருவதாக இருந்தால் சம்மதிப்பதாகக் கூறினார்.

 

அரசுரிமை பெற்ற மூத்த மகன் இருக்கும்போது இந்த நிபந்தனையை எவ்வாறு ஏற்பது என்று தவித்தார் சாந்தனு. அதேசமயம் அந்தப் பெண்ணை யும் அவரால் மறக்க முடியவில்லை. இதையறிந்த காங்கேயன் (பீஷ்மர்) மீனவர் குலத் தலைவனிடம் சென்று தன்னுடைய அரசுரிமையைத் துறப்பதாக வும், பின்னாளில் உரிமைப்போர் வராத வகையில் தான் திருமணமே செய்துகொள்ளாமல் சுத்த பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். சாந்தனுவின் ஒரே வாரிசான காங்கேயன் தன் தந்தையின் பொருட்டு அரச பதவியையும் மணவாழ்க்கையையும் துறந்ததை அறிந்த அஸ்தினாபுரத்தின் மக்கள் மட்டுமல்ல; தேவர்களும் வியப்படைந்தார்கள். அப்போது வானுலகினர் பூமாரி பொழிந்து, "பீஷ்ம... பீஷ்ம...' என்று வாழ்த்தினார்கள். பீஷ்மரைப் பற்றிய இந்தக் கதை நாம் அறிந்த ஒன்றுதான்! "பீஷ்ம' என்ற சொல்லுக்கு கடுமையான விரதத்தை உடையவன் என்று பொருள்.

 

தன் மகனின் தியாகத்தைப் போற்றிய சாந்தனு, ""எப்போது நீ மரணம் வேண்டும் என்று விரும்பு கிறாயோ அப்போதுதான் உனக்கு மரணம் சம்பவிக்கும்'' என்று வரம் கொடுத்து வாழ்த்தினார்.

 

பீஷ்மர் சகல கலைகளிலும் வல்லவர். பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாட்டனார் ஆவார்.

 

விதிவசத்தால் பீஷ்மர், துரியோதனன் கூட்டத்துடன் இருக்க நேர்ந்தது. சகுனியுடன் சூதாடி பாண்டவர்கள் நாட்டை இழந்தது, பாஞ்சாலி மானபங்கம், அவளை கண்ணன் காத்தது, பின் பாண்டவர் வனவாசம், இறுதியாக நடந்த பாரதப் போர் போன்றவற்றை நாம் அறிவோம்.

 

பாரதப்போர் தட்சிணாயன கால இறுதி மாதமான மார்கழியில் நடைபெற்றது. துரியோதனன் படைக்கு பீஷ்மர் தலைமை தாங்கினார். பாண்டவர் சார்பில் அவரை எதிர்க்க வந்த அர்ச்சுனன் சிகண்டி எனப்படும் அலியை முன்நிறுத்திக் கொண்டான். சுத்த வீரனுடன் போரிட்டு வெற்றி கண்ட பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் அம்பு தொடுக்காமல் நின்றார். இதுதான் சமயம் என்று கண்ணபிரான் ஜாடை காட்ட, பீஷ்மர்மீது பானங்களை எய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனனின் பாணங்கள் பீஷ்மரின் உடலைத் துளைத்தன. பீஷ்மர் போர்க்களத்தில் விழுந்தார். ஆனால் அவரது உயிர் பிரியவில்லை.

 

தட்சிணாயன காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிட்டாது என்பதால், உத்தராயண காலம் துவங்கும் வரை காத்திருக்க விரும்பி னார் பீஷ்மர். அதுவரை அம்புப் படுக்கை யில் படுத்துத் தவம் செய்தார்.

 

பீஷ்மரைக் காண்பதற்கு பாண்டவர்கள் வந்தனர். தலைப்பக்கத்தில் துரியோதனன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மரின் காலடிப் பக்கம் பாண்டவர்கள் நின்றிருந்தனர். அப்போது தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் பீஷ்மர். துரியோதனன் பழரசம் கொண்டுவர ஓடினான். பீஷ்மர் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் ஓர் அம்பினை மந்திரம் ஜெபித்து பூமியில் எய்தான். அம்பு துளைத்த இடத்திலிருந்து கங்கை ஊற்றெடுத்து மேலே பீறிட்டு வந்து பீஷ்மரின் தாகத்தைத் தணித்தாள். மகனுக்கு கங்கை அளித்த கடைசி நீர் இதுவாகும்.

 

உத்தராயணம் பிறக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மர் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துப் பிரார்த்தித்தார். அப்பொழுது பீஷ்மர் துதித்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.

 

பாரதப் போரினால் இந்த உலகிற்கு கீதையும் கிடைத்தது.

 

உத்தராயண காலம் ஆரம்பமானது. தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள், பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, "பீஷ்மாஷ்டமி' என்று போற்றப்படுகிறது.

 

பீஷ்மர் பிரம்மச்சாரி. அவர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால், அவர்மீது அன்பு கொண்டவர்கள், தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுத் தார்கள். அதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது. சாஸ்திரம் அறிந்தவர்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.

 

பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பர். பீஷ்மாஷ்டமி நாளில் யார் வேண்டுமானாலும் பீஷ்மருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்!

Sunday, 8 January 2023

ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்

 ☘#ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்☘

--

☘#ஸ்ரீ_கணபதி_த்யானம்☘

--

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம் 

ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:

ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

--

அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய,

அகோர ருஷி:   அனுஷ்டுப் சந்த:

ஸங்கர்ஷண - மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:

பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா

நம: ஸிவாயேதி பீஜம்:

ஸிவதராயேதி ஸக்தி:  மஹா-தேவாயேதி கீலகம்:   ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:

--

#சாந்தி_பாடம் 

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே, 

ஸெளமன ஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, 

யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, 

தர்தா ச மே, க்ஷேமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, 


மஹஸ்ச மே, ஸம்விச்ச மே,  ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, 


யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே,  தீர்காயுத்வஞ்ச மே, 

நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே, 

ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:   

ஓம் நமோ பகவதே ருத்ராய

ஓம் நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: 

நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:


யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: 

ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா


யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோர பாப காஸினீ 

தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி

யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே 

ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிஹிம் ஸீ: புருஷம் ஜகது


ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி 

யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்மகம் ஸுமனா அஸது


அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷகு 

அஹீஸ்ச ஸர்வாAAன் ஜம்பயன்த்-ஸர்வாAAஸ்ச யாது தான்ய:

அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:


யே சேமாஹும் ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷாஹும்  ஹேட ஈமஹே


அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:

உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:


உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:

நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷேAA 


அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:

ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்


யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப

அவதத்ய தனுஸ்த்வஹம் ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே

நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ

விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ 

பாணவாஹம் உத 


அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:

யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:


தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ

நமஸ்தே அஸ்த்வாயு தாயானா ததாய த்ருஷ்ணவேAA

உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே

பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:

அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்

சம்பவே நம:

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய 

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய 

ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

இரண்டாவது அனுவாகம்

நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ 

நமோ வ்ரு க்ஷேப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ 


நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ 

நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ 


நமோ ஹரிகேஸாயோ பவீ திநே புஷ்டானாம் பதயே நமோ

நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ 

நமோ ருத்ராயா ததாவிநே க்ஷேத்ராணாம் பதயே நமோ 

நமோ ஸூதாயா ஹந்த்யாய வனானாம் பதயே நமோ 


நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம் பதயே நமோ 

நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ 

நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ 

நம: உச்சைர் கோஷாயா க்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ 

நம: க்ருத்ஸ்ன வீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:

மூன்றாவது அனுவாகம்

நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதி நீனாம் பதயே நமோ 

நம: ககுபாய நிஷங்கிணே AA ஸ்தேநானாம் பதயே நமோ 


நமோ நிஷங்கிண இஷுதி மதே தஸ்கராணாம் பதயே நமோ 

நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ 


நமோ நிசேரவே பரிசராயா ரண்யானாம் பதயே நமோ 

நம: ஸ்ரு காவிப்யோ ஜிகாஹும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ 

நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ 

நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ 


நம: இஷுமத்ப்யோ தன் வாவிப்யஸ்ச வோ நமோ 

நம ஆதன்வானேப்ய: ப்ரதித தானேப்யஸ்ச வோ நமோ 

நம ஆயச்சத்ப்யோ விஸ்ரு ஜத்ப்யஸ்ச வோ நமோ 

நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ 


நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ 

நமஸ் ஸ்வபத்யோ ஜாக்ரத் ப்யஸ்ச வோ நமோ 

நம திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ 

நம: ஸபாப்ய: ஸபா பதிப்யஸ்ச வோ நமோ 

நமோ அஸ்வேப்யோ ஸ்வ பதிப்யஸ்ச வோ நம:

நான்காவது அனுவாகம்

நம ஆவ்யாதினீAAப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ 

நம உகணாப்யஸ்-த்ரு ஹம்தீப்யஸ்ச வோ நமோ 


நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ 

நமோ வ்ராதேAAப்யோ வ்ராத பதிப்யஸ்ச வோ நமோ 


நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ 

நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ 

நமோ மஹத்ப்ய: க்ஷúல்ல கேப்யஸ்ச வோ நமோ 

நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ 


நமோ ரதேAAப்யோ ரதபதிப்யஸ்ச வோ நமோ 

நமோ ஸேநாப்AAய: ஸேநானிப்யஸ்ச வோ 

நமோ க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ 

நமஸ் தக்ஷப்யோ ரதகாரேAAப்யஸ்ச வோ நமோ 

நம: குலாலேப்ய: கர்மாரேAAப்யஸ்ச வோ நமோ 

நம புஞ்ஜிஷ்டேAAப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ 

நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ 


நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ 

நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஐந்தாவது அனுவாகம்

நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷாய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச

நமோ ஒ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச

நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச

ஆறாவது அனுவாகம்

நமோ ஒ  ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச 

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச

நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நமஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச

ஏழாவது அனுவாகம்

நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச

நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச

நமோ தூதாய ச ப்ரஹிதாய ச

நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச

நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச

நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச

நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச

நம: காட்யாய ச நீப்யாய ச

நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச

நமோ நாத்யாய ச வைஸந்தாய ச

நம: கூப்யாய சாவட்யாய ச

நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச

நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச

நம ஈத்ரியாய சாதப்யாய ச

நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச

நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச


எட்டாவது அனுவாகம்

நம: ஸோமாய ச ருத்ராய ச

நம: தாம்ராய சாருணாய ச

நம: ஸங்காய ச பஸுபதயே ச

நம உக்ராய ச பீமாய ச

நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச

நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ

நமஸ்தாராய

நம: ஸம்பவே ச மயோபவே ச

நம: ஸங்கராய ச மயஸ்கராய ச

நம: ஸிவாய ச ஸிவதராய ச

நம: தீர்த்யாய ச கூல்யாய ச

நம: பார்யாய சாவார்யாய ச

நம: ப்ரதரணாய சோத்தரனாய ச

நம ஆதார்யாய சாலாத்யாய ச

நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச

நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச

ஒன்பதாவது அனுவாகம்

நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச

நம: கிகிம்ஸிலாய ச க்ஷயணாய ச

நம: கபர்திநே ச புலஸ்தயே ச

நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச

நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச

நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச

நமோ  ஒ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச

நம: பாகம்ஸவ்யாய ச ரஜஸ்யாய ச 

நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச 

நமோ லோப்யாய சோலப்யாய ச

நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச

நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச

நமோ பகுரமாணாய சாபிக்நதே ச

நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச

நமோ வ: கிரி கேப்யோ தேவானா ஹ்ம்ருதயேப்யோ

நமோ விக்ஷீண கேப்யோ,

நமோ விசின்வத் கேப்யோ

நம ஆநிர்ஹதேப்யோ

நம ஆமீவத்கேப்யஹ


பத்தவாது அனுவாகம்

த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித

ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர் மாரோ

மோ ஏஷாம் கிஞ்சநாமமது

யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ 

ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே AA

இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினே AA க்ஷயத்வீராய

ப்ரபராமஹே மதிம்

யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்

ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய

நமஸா விதேம தே

யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ

மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த

முத மா ந உக்ஷிதம்

மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:

மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ

அஸ்வேஷு ரீரிஷ: 

வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே

ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய

ஸும்ன-மஸ்மே தே அஸ்து

ரக்ஷா ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா: AA

ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு

முக்ரம்

ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: AA

பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-

ரகாயோ: ஹோ

அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய

மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ

பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி,  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: 

யாஸ்தே ஸஹஸ்ரஹ்ம் ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஹா

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:

தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி

பதினொன்றாவது அனுவாகம்

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாAAம்

தேஷாஹும் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி


அஸ்மின் மஹத்யர்ணவேAA ந்தரிக்ஷேபவா அதி

நீலக்ரீவா: ஸிதிகண்டா: AA ஸர்வா  அத: க்ஷமாசரா: ஹா


நீலக்ரீவா: ஸிதிகண்டா திவஹும் ருத்ரா உபஸ்ரிதா: ஹா 

யே வ்ருக்ஷேக்ஷு ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலோஹிதா: ஹா

யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:

யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனானு


யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:

யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:


ய ஏதாவந்தஸ்ச பூயாஹ்ம் ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே

தேஷாஹ்ம் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே AAந்தரி÷க்ஷ யே திவி

யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ


தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ

நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ


த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்

த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்

புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்

ம்ருத்யோர் - முக்ஷீய – மாம்ருதாAAது

யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு 

யோ ருத்ர விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து

தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய 

யக்ஷ்வாAAமஹே ஸெளஹுமனஸாய ருத்ரம் நமோAAபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய

அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர: 

அயம் மேAA விஸ்வ பேAAஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:


யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே

 தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே


ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹாAA

ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி 

ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:

தேனான் னேனாAAப்யாயஸ்வ; சதாசிவோம்

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:


ஸ்ரீருத்ரம் சமக ப்ரச்னம்

(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை) சமகம் - முதல் அனுவாகம்

அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்

ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:

த்யும்னைர் வாஜே பிராகதம்

இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்

வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே, 

ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே, 

ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே, 

ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே, 


ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே, 

ஸுஸ்ச மே, சித்தஞ்சம ஆதிதஞ்ச மே, வாக்ச மே, 


மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே, 

தக்ஷஸ்ச மே, பலஞ்சம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே, 

ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே, 

வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே, 

பரூஹும் ஷி ச மே, ஸரீராணி ச மே


சமகம் - இரண்டாவது அனுவாகம்

செல்வச் செழிப்பு வேண்டுதல்


ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே, 

பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே, 


ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே, 

ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே, 


வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே, 

ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே, 

வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே, 

மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே, 


ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே, 

வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே, 


ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச மருத்தஞ்ச மருத்திஸ்ச மே, 

க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே

சமகம் - மூன்றாவது அனுவாகம் - இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, 

னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,

 

பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே, 

பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே, 


÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே, 

ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, 

ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, 

ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, 


ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே, 

பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே, 

ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

சமகம் - நான்காவது அனுவாகம் உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்


ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே, 

க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே, 


ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே, 

ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே, 


புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே, 

பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே , 

பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே, 

ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே, 


யவாAAஸ்ச மே, மாஷாAAஸ்ச மே, திலாAAஸ்ச மே, 

முத்காஸ்ச மே, கல்வாAAஸ்ச மே, கோதூமாAAஸ்ச மே, 


மஸுராAAஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே, 

ஸ்யாமாகாAAஸ்ச மே, நீவாராAAஸ்ச மே

சமகம் - ஐந்தாவது அனுவாகம் 

அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே, 

பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே, 


ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே, 

த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே, 


க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே, 

க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே, 

க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம், 

வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே, 


பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே, 

கர்ம ச மே, ஸக்திஸ்ச மே, 


ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே


சமகம் - ஆறாவது அனுவாகம் புற வாழ்க்கைக்கு தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே, 

ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே, 


பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே, 

மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே, 


த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே, 

விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே, 

மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே, 

தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே, 


ந்தரிக்ஷஞ்ச ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம இந்தரஸ்ச மே, 

திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே, 

ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே


சமகம் - ஏழாவது அனுவாகம் இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அகும்ஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாAAப்யஸ்ச மே, 

திபதிஸ்ச ம உபாஹும்ஸுஸ்ச மே, 


ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே, 

மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே, 


ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே, 

வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே, 

வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே,  

திக்ராஹ்யாAAஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே, 


மருத்வதீயாAAஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே, 

ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே, 


பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே

சமகம் - எட்டாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்

இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே, 

திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே, 


க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே, 

திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே, 

பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீAAத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாAAஸ்ச மே, 

பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகா காரஸ்ச மே

சமகம் - ஒன்பதாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்

அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே, 

ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே, 


ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே, 

த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே, 


யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே, ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷஆ  ச மே, 

தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே, 

ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ர தந்தரே ச மே, 

யஜ்ஞேன கல்பேதாம்

சமகம் - பத்தாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்


கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே, 

த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே, 


பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே, 

த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே, 


பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே, 

வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே, 

தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம், 

ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம், 


வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம், 

ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம், 


வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம், 

யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்

சமகம் - பதினொன்றாவது அனுவாகம் 

ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச ச மே, ஸப்த ச மே, 

நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,


ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவிஹும் ஸதிஸ்ச மே,

த்ரயோவிஹும் ஸதிஸ்ச மே, பஞ்சவிஹும் ஸதிஸ்ச மே, 


ஸப்தவிஹும் ஸதிஸ்ச மே, நவவிஹும் ஸதிஸ்ச ம ஏகத்ரிஹும்  ஸச்ச மே, 

த்ரயஸ்த்ரிஹும் ஸச்ச மே சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே, 

த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, விஹும் ஸதிஸ்ச மே, 

சதுர்விஹும் ஸதிஸ்ச மே, ஷ்டாவிஹும் ஸதிஸ்ச மே, த்வாத்ரிஹும் ஸச்ச மே,

 

ஷட்த்ரிஹும் ஸச்ச மே, சத்வாரிஹும் ஸச்ச மே, சதுஸ்சத்வாரிஹும் ஸச்ச மே, ஷ்டாசத்வாரிஹும் ஸச்ச மே, 

வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச

வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச

புவனஸ்சாதிபதிஸ்ச

சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல

இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி

சஹும்ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூAAக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹிஹிகிம் ஸீர்-மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி மது மதீம்;   தேவேப்யோ வாசமுத்யாஸகும் ஸுஸ்ரூஷேண்யாAAம்;   மனுஷ்யேAAப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து


#நன்றி :  #ஸ்ரீ_ருத்ரம்_நமகம்_சமகம்_தமிழ். 


ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

 காயத்ரீ, ஸாவித்ரீ,ஸரஸ்வதி

என்னும் பெயர்களுடன் விளங்கும் காய்த்ரீ தேவியை வரிசையாகத் துதிக்கும் 

' #புஜங்க_ப்ரயாதம் ' என்னும் விருத்தாதால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தை மூன்று வேளைகளிலும் படிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். 


☘#ஸ்ரீ_காயத்ரீ_புஜங்க_ஸ்தோத்ரம்☘


 1.☘ உஷ: காலகம்யா முதாத்த ஸ்வரூபாம்

அகாரப்ரவிஷ்டா முதாராங்கபூஷாம்

அஜேஶாதி வந்த்யா மஜார்சாங்கபாஜாம்

அநௌபம்யரூபாம் பஜாம்யாதி ஸந்த்யாம்☘                                             


2 .☘ ஸதா ஹம்ஸயாநாம் ஸ்ப்புரத் ரத்நவஸ்த்ராம்

வராபீதி ஹஸ்தாம் ககாம்நாயரூபாம்

ஸ்ப்புரத் ஸ்வாதிகா மக்ஷமாலாம் ச கும்பம்

ததாநாமஹம் பாவயே பூர்வஸந்த்யாம்☘                                                      


 3.☘ ப்ரவாள ப்ரக்ருஷ்டாங்க பூஷோஜ்வலந்தீம்

ஸகீடோல்லஸத் ரத்நராஜ ப்ரபாதாம்

விசாலோரு பாஸாம் குசாத்லேஷஹாராம்

பஜே பாலிகாம் ப்ரஹ்மவித்யாம் விநோதாம்☘                                            


 4. ☘ஸ்ப்புரச்சந்த்ர காந்தாம் ஶரச்சந்த்ரவக்த்ராம்

மஹாசந்த்ர காந்தாத்ரி பீநஸ்தநாட்யாம்

த்ரிஸூலாக்ஷ ஹஸ்தாம் த்ரிநேத்ரஸ்ய பத்நீம்

வ்ருஷாரூடபாதாம் பஜே மத்யஸந்த்யாம்☘                                                  


 5. ☘ஷடாதார ரூபாம் ஷடாதார கம்யாம்

ஷடத்வாதிஶுத்தாம் யஜுர்வேதரூபாம்

ஹிமாத்ரே: ஸுதாம் குந்த தந்தாவபாஸாம்

மஹேஶார்த்த தேஹாம் பஜே மத்யஸந்த்யாம்☘                                         


 6. ☘ஸுஷும்நாந்தரஸ்தாம் ஸுதாஸேவ்யமாநாம்

உகாராந்தரஸ்தாம் த்விதீயஸ்வரூபாம்

ஸஹஸ்ரார்க்கரஶ்மி ப்ரபாஸத்ரிணேத்ராம்

ஸதா யௌவநாட்யாம் பஜே மத்யஸந்த்யாம் ☘                                          


 7. ☘ஸதா ஸாமகாநாம் ப்ரியாம் ஶ்யாமலாங்கீம்

அகாராந்தரஸ்தாம் கரோல்லாஸி சக்ராம்

கதாபத்ம ஹஸ்தாம் த்வநத்பாஞ்சஜந்யாம்

ககேஶோபவிஷ்டாம் பஜே மாஸ்த ஸந்த்யாம்☘                                          


 8. ☘ப்ரகல்ப்ப ஸ்வரூபாம் ஸ்புரத் கங்கணாட்யாம்

அஹம் லம்பமாந ஸ்தநப்ராந்தஹாராம்

மஹா நீலரத்ந ப்ரபா குண்டலாப்யாம்

ஸ்புரத் ஸ்மேரவக்த்ராம் பஜே துர்யஸந்த்யாம் ☘                                        


 9. ☘ஸதா தத்வமஸ்யாதி வாக்யைக கம்யாம்

மஹாமோக்ஷ மார்கைக பாதேயரூபாம்

மஹாஸித்த வித்யாதரை: ஸேவ்யமாநாம்

பஜேஹம் பவோத்தாரிணீம் துர்யஸந்த்யாம் ☘                                           


 10 . ☘ஹ்ருதம்போஜ மத்யே பராம்நாயநீடே

ஸுகாஸீந ஸத்ராஜஹம்ஸாம் மனோஜ்ஞாம்

ஸதா ஹேமபாசாம் த்ரயீமத்ய வித்யாம்

பஜாமஸ் ஸ்துவாமோ வதாம: ஸ்மராம:☘                                                      


11 . ☘ஸதா தத்பதே ஸ்தூயமாநாம் சவித்ரீம்

வரேண்யாம் மஹாபர்கரூபாம் த்ரிணேத்ராம்

ஸதா தேவதேவாதி தேவஸ்ய பத்நீம்

அஹம் தீமஹித்யாதி பாதைக ஜுஷ்டாம்☘                                                  


 12 .☘அநாதம் தரித்ரம் துராசார யுக்தம்

ஶடம் ஸ்த்தூல புத்திம் க்கலம் தர்மஹீநம்

த்ரிஸந்த்யம் ஜபத்யாநஹீநம் மஹேஸீம்

பரம் சிந்தயாமி ப்ரஸீத த்வமேவ  ☘                                                                 


 13. ☘இதீதம் புஜங்கம் படேத் யஸ்து பக்த்யா

ஸமாதாய சித்தே ஸதா ஸ்ரீபவாநீம்

த்ரிஸந்த்யஸ் ஸ்வரூபாம் த்ரிலோகைகவந்த்யாம்

ஸ முக்தோ பவேத் சர்வ பாபை ரஜஸ்ரம். ☘                                      


☘#இதி_ஸ்ரீ_காயத்ரீ_புஜங்க_ஸ்தோத்ரம்_ஸமாப்தம்☘

நடராஜ_தசகம்

 ☘#நடராஜ_தசகம்!☘


☘(அன்ந்தராம தீட்சிதர் இயற்றியது)☘


1. கனகஸபாகத காஞ்சனவிக்ரஹ

காமவிநிக்ரஹ காந்ததனோ

கலிகலிதாகில பாபமலாபஹ

க்ருத்திஸமாவ்ருததேஹ விபோ

குவலயஸன்னிப ரத்னவிநிர்மித

திவ்யகிரீட ஸுபாஷ்டதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஸ்வர்ணமயமான ஸபையில் இருக்கிறவரும், பொன்போன்ற மூர்த்தியை உடைய வரும், மன்மதனை ஜயித்தவரும் அழகிய சரீரமுள்ளவரும், கலியினால் ஏற்பட்ட எல்லாவிதமான பாபங்களாகிற அழுக்கைப் போக்குகிறவரும், யானைத் தோலை அணிந்தவரும், ப்ரபுவானவரும். 

https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/

நீலோத்பல  புஷ்பம்போல் நிறமுள்ள ரத்னங்களால் இழைக்கப்பட்ட திவ்ய கிரீடத்தை உடையவரும், மங்களமான எட்டு சரீரத்தை உடையவரும், உலகிற்கு நாய கனும், மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


2. கரகலிதாமல ஸூலபயங்கர

காலநிராஸக பாதவிபோ

பதகமலாகத பக்தஜனாவன

பத்தஸுகங்கண தேவ விபோ!

ஸிவநிலயாகத பூதிவிபூஷித

தீக்ஷித பூஜித பூஜ்யதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜ மே!!


நிர்மலமான சூலத்தைக் கையில் ஏந்தியவரும், பயங்கரமான காலனை உதைத்தவரும், ப்ரபுவும், தாமரை போன்ற பாதங்களை வந்தடைந்த  பக்தர்களைக் காப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டவரும், தேவர்களுக்குள் சிறந்தவரும், கைலாஸத்திலிருந்து வந்தவர்களும், விபூதியினால்  அலங்கரிக்கப் பெற்றவர்களுமான தீக்ஷிதர்களால் பூஜிக்கப்பட்டவரும், பூஜிக்கத் தகுந்த சரீரத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


3. ஹர ஹர ஸங்கர பக்தஹ்ருதம்பர

வாஸசிதம்பர நாத விபோ

துரிதநிரந்தர துஷ்டபயங்கர

தர்ஸன ஸங்கர திவ்யதனோ!

தஸஸதகந்தர ஸேஷஹ்ருதந்தர

ஸங்கர ரக்ஷித பார்த்தகுரோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஓ ஹர ஹர, சுகத்தைச் செய்கிறவரும் பக்தர்களின் ஹ்ருதயாகாசத்தில் வீற்றிருப்பவரும், சிதம்பர நாதரும், ப்ரபுவும், இடைவிடாது பாபங்களைச்  செய்யும் துஷ்டர்களுக்கு பயத்தை அளிப்பவரும்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ (தர்சனாதப்ரஸதஸி) என்றபடி தரிசனம் செய்வதாலேயே முக்தியைக் கொடுப்பவரும், திவ்ய  ஸ்வரூபம், ஆயிரம் தலையனான ஆதிசேஷனின் ஹ்ருதயத்தில் இடம் பெற்றவரும், (துரோண) யுத்தத்தில் அர்ஜுனனை ரக்ஷித்தவரும், குரு வானவரும், உலகிற்கு நாயகனும், மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க  வேண்டும்.


4. ஸிவஸிவ ஸங்கர ஸாம்பபுரந்தர

பூஜித ஸுந்தர மந்த்ரநிதே

முரஹரஸன்னிதி மங்களதர்ஸன

மந்த்ர ரஹஸ்ய சிதாத்மதனோ!

புரஹரஸம்ஹர பாபமபாகுரு

பீதிமராதிக்ருதாமகிலாம்

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம் ருத்திமுபார்ஜய மே!!


மங்களுங்களுக்கெல்லாம் மங்களத்தைச் செய்பவரும், சங்கரரும், அம்பாளுடன் கூடியவரும், இந்திரனால் பூஜிக்கப்பட்டவரும், அழகு வாய்ந்தவ ரும், மந்திரங்களுக்கு இருப்பிடமும், பக்கத்திலிருக்கும் முரஹரனான கோவிந்த ராஜனின் ஸந்நிதியிலேயே மங்களகரமான தரிசனத்தைக் கொடுப் பவரும், மந்திர ரூபமாயும், ரஹஸ்ய ரூபமாயும் இருப்பவரும், சித்ஸ்வரூபமான சரீரத்தை உடையவரும், த்ரிபுரஸம்ஹாரம் செய்தவரும் ஆன ஓ சி த்ஸபேசா, பாபங்களை ஸம்ஹரிக்கவேண்டும், எதிரிகளால் செய்யப்பட்ட எல்லா பயத்தையும் போக்கவேண்டும், உலகிற்கு  நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


5. புஜக விபூஷண பூதிவிலேபன

பாலவிலோசன லோகதனோ

வ்ருஷபஸுவாஹன காங்கபயோதர

ஸுந்தரநர்த்தன ஸோமதனோ!

ஸுததனதாயக ஸௌக்யவிதாயக

ஸாதுதயாகர ஸத்வதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஸர்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், விபூதியை அணிந்து கொண்டிருப்பவரும், நெற்றிக் கண்ணை உடையவரும், உலகை சரீரமாகக்  கொண்டவரும், வ்ருஷபவாஹனரும், கங்கையை தரிப்பவரும், அழகிய நர்த்தனத்தைச் செய்பவரும், உமையுடன் கூடிய சரீரமுடையவரும் புத்ர  லாபத்தையும், தன லாபத்தையும் அளிப்பவரும் சவுபாக்கியத்தைச் செய்கிற வரும்.https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ நல்லவர்களிடத்தில் தயையைக் காட்டுகிறவரும் ஸத்வகுண  ஸ்வரூபரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்..


6. ஸகலஹ்ருதந்தர சந்த்ரகலாதர

மந்த்ரபராக்ருத பூதததே

சரணஸமர்ச்சன திவ்யக்ருஹாகத

தேவவரார்பித பாக்யததே!

விதிஹரிநாரத யக்ஷஸுராஸுர

பூதக்ருதஸ்துதி துஷ்டமதே

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஸகல ஜீவராசிகளின் இதயத்திலும் இடம்பெற்றவரும், சந்திரக்கலையைத் தரிப்பவரும், மந்திரங்களாலேயே விரட்டப்பட்ட பூதஸமூகங்களை  உடையவரும், சரணங்களில் அர்சனம் செய்ய தேவலோகத்திலிருந்து வந்த சிறந்த தேவர்களுக்கு எல்லா பாக்யங்களையும் அளித்தவரும், ப்ரும்மா,  விஷ்ணு, நாரதர், யக்ஷர்கள், தேவர்கள், அசுரர்கள், பூதங்கள் இவர்கள் செய்த துதியால் சந்தோஷம் கொண்டவரும், உலகிற்கு நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும். நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


7. கிரிதனயார்பித சந்தன சம்பக

குங்கும பங்கஜ கந்ததனோ

திமி திமி திந்திமி வாதன நூபுர

பாததலோதித ந்ருத்தகுரோ!

ரவிகிரணாஸ்தமயாகத தைவத

த்ருஷ்டஸுநர்த்தன தக்ஷதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருதத்திமுபார்ஜய மே!!


பர்வதராஜகுமாரி அளித்த சந்தனம், சம்பக புஷ்பம், குங்குமம், தாமரைப்பூ இவைகளால் வாஸனை நிரம்பிய சரீரத்தை உடையவரும், திமி திமி திந் திமி என்று சப்திக்கும் நூபுரங்களுடன் கூடிய பாத தலத்திலிருந்து உண்டான நடனக் கலையை உடையவரும், குருவானவரும், ப்ரதோஷ காலதத்தில்  வந்த தேவக் கூட்டங்களால் காணப்பெற்ற அழகிய நர்த்தனத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க ÷ வண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


8. ஹிமகிரிஜாகர ஸங்க்ரஹணோதித

மோதஸுபூர்ண ஸுவர்ணதனோ

குஹகணநாயக கீதகுணார்ணவ

கோபுரஸூசித விஸ்வதனோ! 

குணகணபூஷண கோபதிலோசன

கோபகுலாதிப மித்ரமணே

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


இமயனின் பெண்ணான பார்வதியை பாணிக்ரஹணம் செய்து கொண்டு அதனால் சந்தோஷம் நிரம்பியவரும், சிறந்த நிறமுள்ளவரும், குஹன்,  கணபதி இவர்களால் பாடப்பெற்ற குணங்களை உடையவரும், கோபுரத்தாலேயே விச்வரூபத்தை சூசித்தவரும், குணங்களையே அலங்காரமாகக்  கொண்டவரும், சூரியனைக் கண்ணாக உடையவரும், இடையர் குலத் தலைவனான கிருஷ்ணனுக்கு மிக்க ஸ்னேகமானவரும், உலகிற்கு நாயகனும்  ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


9. டமருக தாரிண மிந்துகலாதர

மிந்த்ரபதப்ரத மக்னிகரம்

குஹஜனனீயுத மாத்தம்ருகோத்தம

மர்த்திஜனாகில ரோகஹரம்!

பஜ பஜ மானஸ விஸ்ம்ருதிகாரக

ரோகதநூபரிதத்தபதம்

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாகயஸம்ருத்திமுபார்ஜய மே!!


உடுக்கை தரித்தவரும், சந்திக்கலையை தரித்தவரும், இந்திர பதத்தை அளிப்பவரும் அக்னியை கையில் தரித்தவரும், பார்வதி தேவியுடன் கூடியவ ரும், மானைக் கையில் தரித்தவரும், அண்டிய ஜனங்களின் எல்லா ரோகங்களையும் போக்குகிறவரும், அபஸ்மாரம் என்ற ரோக தேவதையின்  சரீரத்தில் கால்வைத்து நின்றவரும், ஆன பரமேச்வரனை, ஏ மனமே, பூஜிப்பாய், பூஜிப்பாயாக, உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


10. நதஜனஸங்கர பிங்கஜடாதர

கண்டலஸத்கர கௌரதனோ

வரதபதஞ்சலி ஸத்க்ருதி ஸன்னுத

ம்ருகசரணார்பிதபுஷ்பததே!

டமருக வாதன போதித

ஸர்வகலாகில வேதரஹஸ்யதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


வணங்கிய ஜனங்களுக்கு ஸுகத்தை செய்கிறவரும், மஞ்சள் நிறமான ஜடையை உடையவரும், கழுத்தில் விளங்கம் விஷத்துடன் கூடியவரும்,  வெளுப்பான சரீரத்தை உடையவரும், வரங்களை அளிப்பவரும், பதஞ்சலி முனியின் ஸ்தோத்திரத்தால் துதிக்கப்பட்டவரும், வ்யாக்ரபாதரால் https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/

அர்ப்பணிக்கப்பட்ட புஷ்பத்தை உடையவரும், உடுக்கு வாசித்தலால் அறிவிக்கப்பட்ட எல்லா கலைகளையும் உடையவரும், எல்லா வேதங்களாலும்  கூறப்படும் ரஹஸ்ய ஸ்வரூபத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கிய ங்களை அளிக்க வேண்டும்.


11. சிவதமனந்த பதான்வித

ராமஸுதீக்ஷித ஸத்கவி பத்யமிதம்

நடனபதேரதி துஷ்டிகரம்

பஹுபாக்யதமீப்ஸித ஸித்திகரம்!

படதி ஸ்ருணோதி ச பக்தியுதோ

யதி பாக்ய ஸம்ருத்திமதோலபதே

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


மங்களத்தைக் கொடுப்பதும், அனந்தராம தீக்ஷிதரால் செய்யப்பட்டதும், நடராஜாவிற்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடியதும், எல்லா பாக்யத்தையும்  அளிக்கக்கூடியதும், விரும்பிய ஸித்தியை கொடுக்கக்கூடியதுமான இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் எவர் படிப்பரோ, கேட்பரோ அவர் நிரம்ப  பாக்கியத்தை அடைவார். உலகிற்கு நாயகனும் மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்கவேண்டும், நிரம்ப பாக்கிய ங்களை அளிக்க வேண்டும்.

 #மார்கழி_மஹா_உற்சவம்


#வாரணம்_ஆயிரம்

பொருள் விளக்கத்துடன்


திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது.


திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்கள் ஆண்டாளால் இயற்றப்பட்டு இன்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் வாரணம் ஆயிரம் பதிகம் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம்.


இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும்


இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும்


மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும்


நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும்


ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை பற்றியும்


ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும்


ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும்


எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும்


ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும்


பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும்


பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது.


வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து


நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்


பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்


தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்                        (1)


நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு


பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்


கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்


காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்                                  (2)


 


இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்


வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து


மந்திரக்கோடி உடுத்தி மணமாலை


அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                                 (3)


 


நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி


பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி


பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்


காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                      (4)


 


கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்


சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள


மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்


அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்                                  (5)


 


மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத


முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்


மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்


கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்                       (6)


 


வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்


பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து


காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி


நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்                        (7)


 


இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்


நம்மை உடையவன் நாராயணன் நம்பி


செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி


அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான்                     (8)


 


வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு


எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி


அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்


பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்                (9)


 


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து


மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்


அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்


மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                      (10)


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை


வேயர் புகழி வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்


தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்


வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே                                      (11)


பொருள் விளக்கம்:

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து


நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்


பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்


தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்


என்னைப்பெண் கேட்டு ஆயிரம் யானைகள் சூழ என் தலைவனான நாராயணன் வருகின்றான் என்ற செய்தியால் அவனை எதிர் கொண்டு வரவேற்க ஊர் மக்கள் எல்லாம் வழி எங்கும் தோரணங்கள் கட்டியும், பொன்னால் செய்த குடங்களைக் கொண்டு அலங்கரித்தும் இருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ.


நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு


பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்


கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்


காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்


தென்னை மற்றும் பாக்கு மரத்தால் வேயப்பட்ட பந்தலின் கீழ் நரசிம்மனும் மாதவனும் ஆகிய கோவிந்தன் நாளை திருமணம் என்று நாள் குறித்த அறிவிப்பால் காளை போல வீற்றிருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ


இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்


வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து


மந்திரக்கோடி உடுத்தி மணமாலை


அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்


தேவர்களின் தலைவனான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் வருகை புரிந்து என்னை மணப்பெண்ணாய் மணம் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து அவற்றை அணிந்து வந்தபின் மைத்துனியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலையை அணிவிக்க நான் கனவு கண்டேன் தோழீ


நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி


பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி


பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்


காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்


நான்கு திசைகளிலிருந்தும் புனிதநீரினைக் கொண்டுவந்து அந்தணர்களில் சிறந்தோர் பலபேர்கள் மந்திரங்களால் ஓதி அப்புனிதநீரினைத் தெளித்து தாமரை மலர்களை அணிந்துள்ள புனிதமான கண்ணனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்ட நான் கனவு கண்டேன் தோழீ


கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்


சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள


மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்


அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்


கதிரவனைப் போல ஒளியுடைய தீபங்களையும், கலசங்களையும் ஏந்தி அழகிய இளம் பெண்கள் வரவேற்கும் போது வடமதுரை மன்னான கண்ணன் மணப்பந்தலின் நிலைப்படியினைத் தொட்டு வாத்தியங்கள் முழங்க உள்ள புகுந்து வர நான் கனவு கண்டேன் தோழீ


மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத


முத்துஉடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்


மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்


கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்


மங்கல வாத்தியங்களான கெட்டி மேளமும், வரிகளையுடைய சங்கும் ஒலிக்க சிறந்த முத்துக்களால் அலங்காரலம் செய்யப்பட்ட பந்தலின் கீழ் மதுசூதனாகிய கண்ணபிரான் என் கையினைப் பற்றி என்னை மணம் புரிந்து கொண்டான் என நான் கனவு கண்டேன் தோழீ


வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்


பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து


காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி


நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்


நல்ல சொற்களைப் பேசுபவர்கள் தங்களின் வாயால் மறைச் சொற்களைக் கூற சூரியன் ஒளியில் பதப்படுத்திய பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கொண்டு வளர்க்கபப்ட்ட அக்னியை யானையைப் போன்றவனாகிய கண்ணபிரான் என் கையினையைப் பிடித்து வலம் வர நான் கனவு கண்டேன் தோழீ


இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்


நம்மை உடையவன் நாராயணன் நம்பி


செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி


அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான்


இந்தப் பிறவிக்கு மட்டுமில்லாமல் ஏழேழ் பிறவிக்கும் நம்முடைய நற்கதிக்கு காரணமானவனும், நம்மை செல்வமாக உடையவனுமாகிய நாராயணன் தம்முடைய சிவந்த கைகளினால் என்னுடைய பிடித்து அம்மி மிதிக்கச் செய்தவாறு நான் கனவு கண்டேன் தோழீ


வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு


எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி


அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்


பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்


அழகிய புருவங்களை உடைய என் உடன்பிறந்தோர் அக்னி வளர்த்து அதன் முன்னர் என்னை நிறுத்தி நரசிங்கமாகிய அச்சுதனின் கைமேல் என்னுடைய கைகளை வைத்து நெற்பொரியை அக்னியில் இட நான் கனவு கண்டேன் தோழீ


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து


மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்


அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்


மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்


குளிர்ச்சியான சந்தனத்தையும் குங்குமத்தையும் திருமேனியில் பூசிக் கொண்டு யானையின் மீது கண்ணபிரானும் நானும் ஏறி ஊர்வலம் வந்தோம். எங்கள் இருவரையும் மஞ்சள் நீராட்டியதை நான் கனவில் கண்டேன் தோழீ


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை


வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்


தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்


வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே


கண்ணபிரானை அடையவதற்காக பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள் கண்ட கனவினைப் பற்றிய மேற்கூறிய தூய பத்து தமிழ் பாடல்களைப் போற்றிப் பாடுவோர் சகல சௌபாக்யங்களுடன் கூடிய திருமண வாழ்வினையும், நல்ல மக்கள் செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்.


கோதை என்ற ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

Inidhu.com

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...