Sunday, 13 March 2022

போதாயன_அமாவாசை_தோன்றிய_கதை

 #போதாயன_அமாவாசை_தோன்றிய_கதை


சதுர்த்தசி திதி அன்றே அமாவாசை வரும் பட்சத்தில் அது போதாயன அமாவாசை என அழைக்கப்படுகிறது.


#போதாயன_சூத்திரம்:


போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புராண இதிகாஸ நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்

படுகின்றனர்.


"கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்;


ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்"


போதாயன ஸூத்திரம் பற்றி காஞ்சி பெரியவர் மிக உயர்வாக கூறியிருக்கிறார்.


#போதாயன_மகரிஷி:


போதாயன சூத்ரம்' என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது


#போதாயன_அமாவாசை:


போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக மற்றவருக்கான அமாவாசை நாளுக்கு முதல் நாள் போதாயன அமாவாசை நிகழும். இந்த போதாயன அமாவாசை முதன் முதலாக ஏற்பட்ட சரித்திரம் மஹாபாரதத்தில் காணப்படுகிறது.


#மகாபாரதத்தில்_அமாவாசை:


மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானம் ஏற்படாமல் இனிமேல் யுத்தம் தான் ஒரே தீர்வு என்று தீர்மானமானவுடன் துரியோதனன் யுத்தத்தில் தனக்கே வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். எந்த நாளில் போர் துவங்கினால் எனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தா என்று பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் ஸைன்யங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று அறிவுரை சொல்கிறார்.


#ஸ்ரீ_க்ருஷணர்_செய்த_லீலை:


இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று இனிமேல் என்ன செய்வது? என்று கேட்க ஸ்ரீ கிருஷ்ணரும் "கவலை படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்" என அவருக்கே உரிய புன்னகையுடன் கூறிவிட்டு

அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார்.


#சூரியனும்_சந்திரனும்:


திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:


சூரியனும் சந்திரனும் அடடா ஸ்ரீமன் நாராயனரே தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்? நாமே இவர்களிடம் நேரில் சென்று விவரத்தை சொல்லுவோமே என்று நினைத்து சூரியனும் சந்திரனும் ஸ்ரீ க்ருஷ்ண பகவானிடம்


"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"


கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"


"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.


கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"


அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து.


#மகாபாரத_வெற்றி:


ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீ க்ருஷ்ணர் அமாவாசை தர்ப்பணம் செய்வதால் இன்றுதான் அமாவாசை என்று துரியோதனன் முதலான கௌரவர்களும் அமாவாசைக்கு முதல் நாளே பித்ரு தர்ப்பணம் செய்தனர். மேலும் அன்றே அதாவது அமாவாசைக்கு முதல் நாளே மஹாபாரத யுத்தத்தை ஆரம்பித்தனர். ஆகவேதான் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனன் சைன்யங்களுக்கு வெற்றி கிடைக்காமல் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் அமாவாசை என்பது இரண்டு விதமாக ஆகி போதாயன அமாவாசை என்பது புதிதாக ஆரம்பமாயிற்று.


#சண்டையிட_ஏற்ற_சதுர்த்தசி_திதி:


காலப்பிரகாசிகை போன்ற ஜோதிட நூல்களில் சதுர்த்தசியை சன்டையிட (போர் துவங்க) ஏற்ற திதியாக கூறப்பட்டுள்ளது. அதை நன்றாக அறிந்த ஸ்ரீ க்ருஷ்ணர் சதுர்த்தசியில் போர் துவங்க வேண்டும் என்பதற்காகவே கபட நாடகம் ஆடியதை மகாபாரத கதைகளில் அறியமுடிகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் சதுர்த்தசி திதியில் எந்த முகூர்த்தமும் வைப்பதை தவிர்த்ததை காணும்போது

" நாள் செய்வதை நல்லோர் செய்யார் " என்பதை உணர முடிகிறது.

Saturday, 12 March 2022

காரடையான் நோன்பு

 காரடையான் நோன்பு ஸ்பெஷல் ! 


காரடையான் நோன்பு  ஒவ்வொரு சுமங்கலி பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.தன் கணவன் நன்றாக வாழவும், என்றென்றும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்விரதத்தை பெண்கள் இருப்பர்.


மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். 

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு.  சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.


காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்?


இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.


இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.


மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் 


பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது "உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்' என்று வேண்டிக் கொள்வார்கள். நம் வீட்டு பெண்குழந்தைகளுக்கும் 

சரடு கட்டி விட வேண்டும். 

அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும்.


 "மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்....? அத்தனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.


ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் அல்லது பூ சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?


சங்கல்ப ஸ்லோகம்

 

மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் 

மம பர்த்துச்ச  அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் 

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே


தியானம்


ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் 

புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே 

தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.


நோன்புச்சரடு மந்திரம்


தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா


மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.


'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்

ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'


காரடையான் நோன்பிற்கு சாவித்திரி விரதமென்ற பெயருண்டு. ஏன் என்று தெரிய வேண்டுமா?


காரடையான் நோன்பு பிறந்த கதை


"சாவித்ரி பாடம்'' என்ற கர்ண பரம்பரைப் பாட்டு ஒன்றில் இந்த நோன்பு தோன்றிய வரலாறும் அதன் மகிமையும் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்தைப் பெறுகிறாள். பின்பு பக்தி சிரத்தையுடன் பல காலம் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய, கணவன் அச்வபதியும் விடாமல் காயத்ரி ஜெபத்தையும் செய்ய அதன்படியே அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.


"சாவித்ரி' என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடைகிறாள். விதி வசமாய் ஒருமுறை சாவித்ரி, சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. அப்போது அவன் கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். அவன் தன் பெற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் வரித்து விடுகிறாள்.


அவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதிக்கிறார். இந்த நிலையில் நாரதர் சாவித்ரியிடம் வந்து, "அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் காலகதி 

அடைந்து விடுவான். எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்'' என்று உபதேசிக்கிறார். எனினும் சாவித்ரியும் தன் தந்தையிடம் மன்றாடி சத்யவானையே மணக்கிறாள்.


நாரதர் சொன்னபடியே சத்தியவான் காட்டில் விறகு வெட்டி வரச் சென்று அங்கு தன் கோடரியால் காலை வெட்டிக் கொண்டு கீழே சாய்கிறான். யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு செல்கிறான். அவனை விடாமல் பின் தொடர்கிறாள் சாவித்ரி. தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று யமனிடம் மன்றாடி வேண்டுகிறாள். 


சாவித்ரியின் மன உறுதியையும், பதிவிரதா பக்தியின் மேன்மையையும் உணர்ந்த யமதர்மராஜன் அவளுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்கிறான்.

"தர்மபிரபுவே... என் கற்புக்குப் பங்கம் வராமல் எனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வரம் தாரும்'' என்கிறாள். யமனும் "இவ்வளவுதானே தந்தேன்'' என்று அவள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டான். அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே அவள் கேட்டபடி குழந்தைகள் பிறக்கும்? யமதர்மராஜனுக்கு 

இப்போது சத்தியவானின் உயிரைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், சத்தியவானை உயிர்ப்பித்துவிட்டு மறைகிறான்.


சாவித்ரி செய்த அந்த நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலர் இதை, "ஸம்பத் கௌரீ'' பூஜை என்றும் சொல்கிறார்கள். 


என்றும் உங்கள் குடும்பமும் நலமாக இருக்க காமாக்ஷி தேவியை பிராத்திக்கிறேன்.

நாமும் சந்தோஷமாக  இருப்போம்.மற்றவர்களும்  சந்தோஷமாக இருக்க வழிவகுப்போம்.

Friday, 4 March 2022

காரடையான் நோன்பு

 காரடையான் நோன்பு ஸ்பெஷல் !


மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.


சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.  இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.


மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.


விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.


பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

 #ஜெய_ஜனார்த்தன_கிருஷ்ணா_ராதிகா_பதே

ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன


கருடவாகனகிருஷ்ணாகோபிகாபதே

நயனமோகனகிருஷ்ணாநீரஜீக்ஷன

சுஜனபாந்தவகிருஷ்ணாசுந்தராக்ருதே

மதனகோமளாகிருஷ்ணாமாதவாஹரி


வசுமதிபதேகிருஷ்ணாவாசவனுஜா

வரகுணாகராகிருஷ்ணாவைஷ்ணவாக்ருதே

சுருசிராணனகிருஷ்ணாஷௌர்யவாரிதி

முரஹராவிபோகிருஷ்ணாமுக்திதாயக

விமலபாலககிருஷ்ணாவல்லபிபதே

கமலலோசனகிருஷ்ணாகாம்யதாயக

ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன

விமலகத்ரனேகிருஷ்ணாபக்தவத்சலா


சரணபல்லவம்கிருஷ்ணாகருணகோமளம்

குவலஈஷனகிருஷ்ணாகோமளாக்ருதே

தவபதாம்புஜம்கிருஷ்ணாஷரனமாஸ்ரையே

புவனநாயககிருஷ்ணாபாவனக்ருதே

குனகநோஜ்வலகிருஷ்ணாநளினலோச்சனா

ப்ரனயவாரிதேகிருஷ்ணாகுணகனாகர

தாமசொதரகிருஷ்ணாதீனவத்சலா

காமசுந்தராகிருஷ்ணாபாஹிசர்வத

நரகநாசனகிருஷ்ணாநரசஹாயக

தேவகிசுதாகிருஷ்ணாகாருண்யம்புதே

கம்ஸநாசனகிருஷ்ணாதுவாரகஇஸ்தித

பாவணத்மகாகிருஷ்ணாதேஹிமங்களம்

தவபதாம்புஜம்கிருஷ்ணாஷ்யாமகோமளம்

பக்தவத்சலாகிருஷ்ணாகாம்யதாயாக

பாலிசென்னணுகிருஷ்ணாஸ்ரீஹரிநமோ

ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன


பக்ததாசன கிருஷ்ணாஹரசுணீசதா

காடுநிந்தெனகிருஷ்ணாசலஹியாவிபோ

கருடவாகனகிருஷ்ணாகோபிகாபதே

நயனமோகனகிருஷ்ணாநீரஜீக்ஷன


ஜெயஜனார்த்தனகிருஷ்ணாராதிகாபதே

ஜனவிமொக்ஷனகிருஷ்ணாஜென்மமோக்ஷன

Thursday, 3 March 2022

பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்

 #பார்த்தஸாரதிப்_பெருமாள்_ஸ்தோத்திரம்:


ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்


#பொருள் :


பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.


1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம

நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்

சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ

ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி

முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்

பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த

வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)


#பொருள் :


பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


3.லோகாவனாயாத்தலீலம் பூஜி

தானேக தேவேந்த்ர லோகைக பாலம்

ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு

தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்


#பொருள் :


உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.


4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச

ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்

ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர

பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)


#பொருள் :


இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


5. வாமேகரே சாருசக்ரம்-வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்

காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய

ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)


#பொருள் :


இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.


6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க

நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய

பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)


#பொருள் :

ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.


7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி

தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை

நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு

தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)


#பொருள் :


விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


#ஸ்ரீ_பார்த்தசாரதி_சுவாமி_பெருமை:


மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். *


இங்கு உற்சவ மூர்த்தி தன் #கதாயுதம்_இல்லாமல் #செங்கோலுடன்_காட்சி_தருகிறார்.


🙏#ஸ்ரீ_பார்த்தசாரதி_உன்_திருவடிகளே_சரணம்".🙏


*ஓம் நமோநாராயணா*

Sunday, 20 February 2022

காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


காப்பு


மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்

துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்

புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்

கயமுகவைங் கரனிருதாள் காப்பு.


நூல்


சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியா நின்ற வுமையே.

சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

துன்பத்தை நீக்கி விடுவாய்.

சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்

துயரத்தை மாற்றி விடுவாய்

ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ

சிறியனால் முடிந்திராது

சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்

சிறிய கடனுன்னதம்மா.

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி

சிரோன்மணி மனோன்மணியு நீ.

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

யனாத ரட்சகியும் நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அன்னை காமாட்சி உமையே.


பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட

- பாதச் சிலம்பி னொலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும் ;

முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும் ,

சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையில் பொன்கங்கணம்,

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பி னழகும்,

அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை

அடியனாற் சொல்லத் திறமோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்

குறைகளைச் சொல்லி நின்றும்,

கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ

குழப்பமா யிருப்ப தேனோ

விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்

சதமாக நம்பி னேனே

சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க

சாதக முனக் கிலையோ

மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய

மதகஜனை யீன்ற தாயே.

மாயனிட தங்கையே பரமனது மங்கையே

மயானத்தில் நின்ற வுமையே

அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்

அன்பு வைத்தென்னை யாள்வாய்,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்

பேரான ஸ்தலமு மறியேன்

பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்

போற்றிக் கொண்டாடி யறியேன்,

வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,

வாயினாற் பாடியறியேன்,

மாதா பிதாவினது பாதத்தை நானுமே

வணங்கியொரு நாளுமறியேன்,

சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்

சரணங்கள் செய்து மறியேன்,

சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,

சாஷ்டாங்க தெண்ட னறியேன்,

ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்

ஆச்சி நீ கண்ட துண்டோ,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்

பிரியமாயிருந்த னம்மா,

மெத்தனம் உடையை என்றறியாது நானுன்

புருஷனை மறந்தனம்மா,

பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்

பராமுகம் பார்த்திருந்தால்,

பாலன் யானெப்படி விசனமில்லாமலே

பாங்குட னிருப்பதம்மா,

இத்தனை மோசங்களாகாது ஆகாது

இது தர்மமல்ல வம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ

யிதுநீதி யல்லவம்மா,

அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ

அதை யெனக்கருள் புரிகுவாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ

மணி மந்தர காரிநீயே

மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ

மலையரையன் மகளானநீ,

தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,

தயாநிதி விசாலாட்சி நீ

தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ

சரவணனை யீன்ற வளும் நீ,

பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்

பேர்பெற வளர்த்தவளும் நீ,

பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ

பிரிய வுண்ணாமுலையு நீ

ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ

அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்

புத்திகளைச் சொல்லவில்லையோ,

பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை

பிரியமாய் வளர்க்க வில்லையோ,

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்

கதறி நானழுத குரலில்,

கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்

காதினுள் நுழைந்த தில்லையோ

இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா

இனி விடுவதில்லை சும்மா,

இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்

இதுதரும மல்ல வம்மா,

எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்

ஏதும் நீதியல்ல வம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்

மூடனான் செய்த னம்மா

மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு

மோசங்கள் பண்ணி னேனோ

என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே

இக்கட்டு வந்த தம்மா

ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து

என்கவலை தீரு மம்மா

சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே

சிறுநாணமாகு தம்மா,

சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்

சிவசக்தி காமாட்சி நீ

அன்னவாகனமேறி யானந்தமாக உன்

அடியன் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க

ளின்பமாய் வாழ்ந் திருக்க,

யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்

உன்னடியேன் தவிப்பதம்மா,

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்

உன் பாதஞ் சாட்சியாக

உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்

உலகந்தனி லெந்தனுக்கு

பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை

போக்கடித் தென்னை ரட்சி

பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்

பிரியமாய்க் காத்திடம்மா

அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க

அட்டி செய்யா தேயம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்

பாங்குடனி ரட்சிக்கவும்,

பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த

பாலருக் கருள் புரியவும்

சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்

செங்கலிய ளணு காமலும்,

சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்

பிரியமாய்ச் காத்திடம்மா.

பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி

பிழைகளைப் பொறுத்து ரட்சி.

ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

னம்மை யேகாம்பரி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது

இப்பூமி தன்னி லம்மா,

இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்

இனிஜெனன மெடுத்திடாமல்,

முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்

முக்காலும் நம்பினேனே,

முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ

முழித்திருக்காதே யம்மா,

வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன

விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை

விமலனாரேசப் போறார்,

அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்

அருங்குறை யைத் தீருமம்மா,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி உமையே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...