Wednesday, 25 November 2020

கீதை_ஜெயந்தி

 #கீதை_ஜெயந்தி


.

--

கார்த்திகை (மார்கசீர்ஷ‌) மாதம், வளர்பிறை ஏகாதசி,  #அர்ஜூனனுக்கு_பகவத்_கீதை_உபதேசிக்கப்பட்ட_புண்ணிய_தினம். ஒவ்வொரு வருடமும், இது  '#கீதா_ஜெயந்தி' தினமாகக் கொண்டாடப்

படுகின்றது.


இறைவனின் திருஅவதாரங்கள், #மஹான்கள்_தோன்றிய_தினத்தையே_ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், #ஒரு_புனித_நூலுக்கு_ஜெயந்தி_தினம்_கொண்டாடுவது_என்பது '#பகவத்_கீதை'க்கு மட்டுமே. வேறு எந்த நூலுக்கும் இந்தப் பெருமை கிடையாது.


26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், '#கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிப்பதாக இருக்கிறது.


முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது #சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும்  இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.


அலைகடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்த 'பகவத் கீதை' பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. '#உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை' இம்மூன்றும் பிரஸ்தானத்திரயம்.


கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா  - (மஹா. பீஷ்ம. 43/1)


என்று வியாஸமஹரிஷி, கீதையின் பெருமையைப் போற்றுகிறார்.


#வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை. 


கீதையென்னும் ஒப்பற்ற தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினரையும் ஆகர்ஷித்ததால், கீதா ஜெயந்தி, சிங்கப்பூர், மலேசியா, பாலி, கம்போடியா, ஆக்லாந்து, பெர்த், மெர்ல்போன், கேன்பரா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்

படுகின்றது.


பகவத் கீதையை உயிரென மதிப்பவர் பலர் வாழும் நம் நாட்டில், கீதா ஜெயந்தி, மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்

படுகின்றது.வடநாட்டின் பல மாநிலங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்

படுகின்றது. பக்தர்கள், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், கீதை நூலுக்கும் பூஜைகள் செய்து, மலரிட்டு வணங்கி வழிபடுகிறார்கள்.


அன்றைய தினம் ஏகாதசி என்பதால், முழு உபவாசமிருக்

கிறார்கள். தனியாகவோ பலர் சேர்ந்தோ, கீதையின் 700 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறார்கள்.


அர்ஜூனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்த இடமாகிய குருக்ஷேத்திரத்தில், கீதா ஜெயந்தி, மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்

படுகின்றது. அங்கு இது ஐந்து நாள் திருவிழா. பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.


எத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் அமுதவாக்காக வெளிவந்த பகவத் கீதையை, இறைவனுக்குச் சமமாக வழிபடுகின்றோம். உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.


#கீதா_சாரம்:


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்,

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றோருவருடைய

தாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடைய

தாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.


#யோகமே உலகப் பொருட்கள் அனைத்தின் தோற்றமும் ஒடுங்குதலும் ஆகும் என்கிறார் ஸ்ரீஅரவிந்தர். கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் 'யோகம்' என்ற சொல்லுடனே வழங்கப்படுகின்றன. விஷாத யோகம்,சாங்கிய யோகம்,கர்மயோகம் என்ற பெயர்களுடன் தொடருகின்ற  இந்த அத்தியாயங்களின் உட்கருத்தை உண்மையாக அறிய விழைவோர் உண்மையில் பேறு பெற்றவர்களே!!.


கீதா ஜெயந்தி தினத்தன்று, நம்மால் இயன்றவரை, பகவத் கீதையைப் பாராயணம் செய்வோம். முடிந்தால், தினமும் தொடரலாம் இதை. உள்ளத்திருள் நீங்கி, தெள்ளத்தெளிவாக, உண்மைப் பொருள் தோன்றும் நிச்சயம். 


வெற்றி பெறுவோம்!!


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.

Tuesday, 24 November 2020

பாண்டுங்காஷ்டகம்

 *பாண்டுங்காஷ்டகம்


1.மஹாயோக பீடே தடே பீமரத்யா :

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை: !

ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பீமரதியாற்றின் கரையில் யோகபீடத்தில், புண்டரீகனுக்கு வரம் கொடுப்பதற்காக முனிவர்களுடன் வந்து அருள்பாலிக்கிற ஆனந்தமே உருவான, பரப்ரஹ்மவடிவமான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

2.தடித்வாஸஸம் நாலமேகாவபாஸம்

ரமாமந்திரம் ஸுந்தரம் சித்ப்ரகாசம் !

வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

மின்னலொத்த வஸ்திரம் தரித்தவளும், நீலமேகம் போன்று விளங்குபவளும், லக்ஷ்மி வஸிக்குமிடமாயும், அழகானவளும், ஞானவடிவனாயும், இஷ்டகைக்கல்லில் ஸமமாக வைத்தக்கால்களையுடையவராயுமுள்ள பரப்ரஹ்மச் சுவரான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

3.ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்

நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத் !

விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

என்னையண்டிய பக்தர்களுக்கு ஸம்ஸாரக் கடலின் எல்லை இதுதான் என இடுப்பில் கை வைத்து காட்டுபவர் அவர். பிரம்மதேவன் வஸிப்பதற்கென்றே நாபியில் கமலத்தையும் தரிக்கிறார். அப்படிப்பட்ட பரம்பொருளின் ஸ்வரூபனான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

4.ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே

ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம் !

சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

கழுத்தில் மிளிரும் கௌஸ்துப மணியையுடையவரும், (லக்ஷ்மி) அழகுடன் கூடிய தோள்வாளையணிந்தவளும், ஸ்ரீநிவாஸனும், மங்கல ஸ்வரூபியாயும், அருமைமிக்கப்பெருமாளாய் உலகத்தை காத்தருளும் பரப்ரஹ்மமேயுருவான பாண்டுரங்கனை வழிபடுகிறேன்.

5.சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்

லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம் !

ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

சரத்கால சந்திரன் போன்ற முகம், அதில் அழகிய புன்சிறிப்பு, பளபளக்கும் குண்டலங்கள் தொங்கும் கன்னம், செம்பருத்தை அல்லது கோவைப்பழம் போன்ற உதடு, செந்தாமரையத்த கண்கள் - இவை பாண்டுரங்கனின் அடையாளங்கள். அவர் உண்மையில் பரம்ரம்மஸ்வரூபி அவரை நான் ஸேவிக்கிறேன்.

6.கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்

ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை: !

த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பத்து திசை மூலைகளிலும் பரவும் கிரீடப்ரகாச முள்ளவர். விலைமதிக்க முடியாத ரத்னங்களால் தேவர்கள் பாண்டுரங்கனை அர்ச்சிக்கின்றனர். மேலும் அவர் பற்பலவாகப் பரிணமிக்கும் வடிவங்கொண்டவர். மயில்தோகை, மாலைகள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பாண்டுரங்களை நான் ஸேவிக்கிறேன்.

7.விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்

ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம் !

கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

எங்கும் நிறைந்து எட்ட முடியாதவர். வேணுகானம் செய்யும் விளையாட்டு யாதவ வேஷம் பூண்டவர். இனிய புன்சிரிப்புடன் பசுக்கூட்டத்திற்கு ஆனந்தம் நல்குபவர். அப்படியான பரப்ரஹ்மஸ்வரூபி பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

8.அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்

பரம் தாம கைவல்ய மேகம் துரீயம் !

ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்

பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம் !!

பிறப்பில்லாதவர் அவர், ருக்மிணியின் ப்ராணநாதராய், ஒன்றாய், துரீயமாய், பெரும் ஒளியாய், எப்பொழுதும் ப்ரஸன்னராய் சரணடைந்தவரின் துயரை நீக்குபவராய் தேவதேவராயும் திகழ்ந்த பரப்ரஹ்ம ஸ்வரூபியான பாண்டுரங்கனை சேவிக்கிறேன்.

9.ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே

படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம் !

பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே

ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி !!

புண்யமான இந்த பாண்டுரங்கனின் ஸ்தோத்திரத்தை எவரெவர் பக்தியுடனும் ஒரே மனதுடனும் படிக்கிறார்களோ அவரவர் ஸம்ஸாரமாகிய கடலைத் தரித்து கடைசீ காலத்தில் ஹரியின் அந்த சாச்வதமான இடத்தையே அடைவர்.


பாண்டுங்காஷ்டகம் முற்றிற்று.

துளசி கல்யாணம்

 #பிருந்தாவன_துவாதசி_விரத‌ம். ..


#பகுதி :1


#Thanks : #AALOSANAI


அச்சுதன் அமலன் என்கோ!

அடியவர் வினை கெடுக்கும்

நச்சு மாமருந்தும் என்கோ!

நலங்கடல் அமுதம் என்கோ!

அச்சுவைக் கட்டி என்கோ!

அறுசுவை அடிசில் என்கோ!

நெய்ச் சுவை தேறல்  என்கோ!

கனிஎன்கோ! பால் என்கேனோ;


பிருந்தாவன துவாதசி விரதம் (துளசி பூஜை)யைப் பற்றி நாம் காணலாம்.


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்

படுகிறது. 

#ஸ்ரீ_கிருஷ்ணருக்கும், #துளசி_தேவிக்கும்_திருமணம்_நடந்த_தினமாக_கொண்டாடப்_படுகிறது. ஆந்திரா,கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிக விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, #கர்நாடகாவில், 

'#சிக்க_தீபாவளி'

(சின்ன தீபாவளி) என்றே கூறுகின்றனர். வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கை

களுடன் சிறப்புறக் கொண்டாடு

கின்றனர்.


துளசிச்செடியின் பெருமைகள் நிறைய. துளசியின் மகிமைகள்  மிக மகிமை வாய்ந்த துளசி, தோன்றிய புராணக்கதையை இப்போது பார்க்கலாம்.


புராணக்கதை.

இது விஷ்ணு புராணம், தேவி பாகவதம் முதலிய பல நூல்களில் விரிவாக அமைந்துள்ளது.


#தர்மத்துவஜன் என்னும் அரசன், #மாதவி என்னும் அரசகுமாரியை மணந்தான். அவனுக்கு, அவன் புண்ணிய பலன்களின் பயனாக, 

#கார்த்திகை_மாதம்_பௌர்ணமியுடன் கூடிய வெள்ளிக்

கிழமையன்று, 

ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அம்சமாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகே உருவான அந்தக் குழந்தைக்கு '#துளசி' என்று பெயரிட்டனர்.


துளசி, #பத்ரிவனம் சென்று, ஸ்ரீமந் நாராயணனையே கணவனாக அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்யலானாள்.  ஒரு காலில் நின்றபடி, இருபதினாயிரம் வருஷம் கடும் தவம் செய்தாள்(அக்காலத்தில், மனிதர்களுக்கு ஆயுட்காலம் அதிகம்). பழங்களையும் நீரையும் மட்டும் அருந்தி முப்பதினாயிரம் வருஷங்களும், இலைகள் மட்டுமே சாப்பிட்டு நாற்பதினாயிரம் வருஷங்களும், காற்றையே உணவாகக் கொண்டு பத்தாயிரம் வருஷங்களும் தவம் செய்தாள்.


பிரம்மன் அவள் தவத்துக்கு மெச்சி, அவள் முன் தோன்றினார். அவளிடம், இறைவனிடம் நீங்காத பக்தி, 

தாசத் தன்மை அல்லது மோக்ஷம் இவற்றில் எது வேண்டும் எனக் கேட்டார்.


ஆனால், துளசியோ அவரை வணங்கி, 'தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. நான் சென்ற பிறவியில், #கோலோகத்தில், கோபிகையாய் இருந்தேன். 

ஸ்ரீ கிருஷ்ணரது பிரியத்துக்கு உகந்த மனைவியாகி இருந்தேன். அதனால், #ராதை என் மீது கோபம் கொண்டு, பூவுலகில், மானிடப்பெண்ணாக பிறக்குமாறு சபித்து விட்டாள். ஆனால் என் நிலை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், என் மீது இரங்கி, #பிரம்மதேவனின் அனுக்கிரகத்தால், அவருடைய அம்சமான கணவனையே அடைவேன் என்று அருளினார். 

ஆகவே, 

ஸ்ரீமந் நாராயணனையே நான் கணவனாக அடைய அருளவேண்டும்' என்று வேண்டிக்

கொண்டாள்.


பிரம்மன், '#துளசி, ஸ்ரீ கிருஷ்ணருடைய மேனியிலிருந்து உண்டான, #சுதர்மன் என்ற #கோபாலன், உன்னை மணக்க வேண்டுமென்று விரும்பினான். அவனும், ராதையால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில், மனுவின் வம்சத்தில், '#சங்கசூடன்' என்ற பெயருடன் பிறந்திருக்கிறான்.  அவனை நீ மணப்பாய். பின்னர், நீ விரும்பியவாறு, ஸ்ரீமந் நாராயணனையே அடைவாய். நீ செடியாகி, எல்லா புஷ்பங்களிலும் சிறந்தவளாகவும்,  விஷ்ணுவுக்கு பிரியமானவளாகவும் இருக்கப்போகிறாய். பிருந்தாவனத்தில் பிருந்தாவனி என்ற பெயருடன் விளங்கப்போகும் உன்னைக் கொண்டு, அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பார்கள்' என்று வரமருளினார்.


துளசி, ராதையிடம் தனக்குள்ள பயத்தைப் போக்க வேண்டுமென கேட்க, பிரம்மனும், #பதினாறு_அக்ஷரங்கள்(எழுத்துக்கள்) உள்ள #ராதிகா_மந்திரத்தை_அவளுக்கு_உபதேசித்தார்.


துளசி, அந்த மந்திரத்தை தியானித்துக் கொண்டு இருக்கும் போது, #ஜைகிஷவ்யர் என்பவரிடமிருந்து உபதேசிக்கப்பட்ட 

ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை #புஷ்கர_க்ஷேத்திரத்தில் தியானித்து, மந்திர சித்தி பெற்ற #சங்கசூடன், பிரம்மனுடைய கட்டளையின் படி, அங்கு வந்தான். துளசி தனித்திருப்பதைப் பார்த்து, அவள் யார் என்று வினவினான்.


துளசியும், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, சங்கசூடன் தான் யார் என்பதையும், பிரம்மனுடைய கட்டளையின் பேரிலேயே அவளைத் தேடி வந்திருக்கும் விவரத்த்தைக் கூறி, தன்னை மணக்குமாறு வேண்டினான். துளசியும் சம்மதிக்கவே, #காந்தர்வ_முறையில் அவளை மணந்து கொண்டான்.


துளசி மிகச் சிறந்த பதிவிரதையாக விளங்கினாள். அவள் #பதிவிரதா சக்தியானால், எங்கு சென்றாலும் சங்கசூடனுக்கு வெற்றியே கிட்டியது. கடும் தவத்தின் பயனாக, துளசியின் பதிவிரதா தன்மைக்கு எப்போது பங்கம் நேரிடுமோ அப்போதே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென வரமும் பெற்றான்.  அவன் கழுத்தில் அவனைக் காக்கும் #மந்திரக்_கவசம் மின்னியது.


மூவுலகங்களையும் வென்றான் சங்கசூடன். தேவர்களை துரத்தியடித்தான். அவனால் துரத்தப்பட்ட தேவர்கள், வைகுண்டம் 

சென்று ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தனர். அவர்,' சங்கசூடனை வெல்லக் கூடியவர், #சங்கரர்_ஒருவரே, ஆகவே, நீங்கள் அவரைச் சரணடையுங்கள். தேவர்களின் நன்மைக்காக, நான் சங்கசூடனின் பத்தினியின் பதிவிரதா தன்மைக்கு பங்கம் ஏற்படச் செய்வேன்' என்று வாக்களித்தார்.


தேவர்கள்   சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று, சிவனாரைத் துதித்தார்கள். சிவனார் அவர்கள் முன் தோன்றினார்.  சங்கசூடனுடன் போர்செய்ய ஒப்புக் கொண்டார்.


#சித்திரரதன் என்ற கந்தர்வனை அழைத்து, சங்கசூடனிடம் தான் யுத்தம் செய்ய வருவதாகத் தெரிவிக்குமாறு பணித்தார்.


சித்திரரதன், பன்னிரண்டு வாசல்களை உடையதும், மிகுந்த கட்டுக்காவல் உடையதுமான சங்கசூடனது வாசஸ்தலத்தை அடைந்தான். அங்கு முதல் வாசலில் காவல் செய்து கொண்டிருந்த பிங்களாக்ஷன் என்பவனிடம், தான் வந்திருக்கும் விவரத்தைக் கூற, அவனும், சித்திரரதனை சங்கசூடனிடம் அழைத்துச் சென்றான்.


தேவர்களின் அரசைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு அவனிடம் சித்திரரதன் கூற, சங்கசூடன் மறுத்து, மறுநாள், சந்திரபாகா நதி தீரத்தில், சிவனாரை யுத்தத்தில் சந்திப்பதாகக் கூறி அனுப்பினான்.


சிவனாருடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக, சிவனாரின் கணங்களும், அஷ்டபைவரவர்களும், ஏகாதச ருத்திரர்களும்,அஷ்ட வசுக்களும், துவாதச ஆதித்யர்களும், சூரிய சந்திரரும், தங்கள் வீரர்களுடன் வந்தனர். மூன்று கோடி யோகினிகளுடன், மஹாகாளி பிரத்தியக்ஷமானாள். பூதப்பிரேத பைசாசங்களும், சிவனாருடன் சேர்ந்து போரிட வந்தன.


சங்கசூடன், தான் போரிடப் போவதைப் பற்றித் தெரிவித்தவுடன், துளசி, அதிர்ந்தாள். தான்  விடிகாலையில், கெட்ட கனவு ஒன்று கண்டதாகக் கூறி, போருக்குப் போக வேண்டாமென கணவனைத் தடுத்தாள்.


சங்கசூடன், 'சந்தோஷமும் துக்கமும் பிரிவும் இணைவும், காலத்தினால் நிகழ்கின்றன. இந்தப் போரினால், நமக்குள் பிரிவு வந்துவிடுமோ என்று நீ பயப்படுவது அர்த்தமற்றது. அவ்வாறு நேர வேண்டுமென விதி இருக்குமானால் அதை யார் தடுத்துவிட முடியும்?. விதியை மாற்ற யாராலும் முடியாது. நடப்பது நடக்கட்டும்  என்று  நம் வேலைகளை நாம் கவனிப்பது ஒன்றே விவேகமான செயல் ஆகும்' என்று அவளைத் தேற்றினான்.


விடிந்ததும் தன் காலைக்கடன்களை முடித்து, தான தர்மங்கள் செய்த பின், தன் மகனை அரியணையில் ஏற்றி, ஆட்சியை ஒப்படைத்து விட்டு, யுத்தத்திற்கு புறப்பட்டான்.


#சந்திரபாகா நதிக்கரையில், சிவனார் தன் கணங்களுடன் யுத்தத்திற்கு காத்திருந்தார். அவரைக் கண்டதும், சங்கசூடன், தன் ரதத்திலிருந்து இறங்கி அவரைப் பணிந்தான்.


சிவனார், 

அவனிடம்,' நீ மிகுந்த பலமும், மந்திரசித்திகளும் உள்ளவன். தேவர்களின் அரசால் உனக்கு என்ன வந்து விடப்போகிறது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு' என்று அறிவுரை கூறினார். அதற்கு சங்கசூடன், 'தேவர்கள் அசுரர்களுக்கு எதிராகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குப் பகையாளிகள். ஆனால், தங்களிடம் எப்போதும் எங்களுக்கு பகை இல்லை. நாங்கள் வேண்டும் போதெல்லாம் வரங்களையே அளித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ, தேவர்களின் சார்பாக தாங்கள் யுத்தத்திற்கு அழைத்திருக்கி

றீர்கள். அவ்வாறு அழைத்த‌ பின்னும், தயங்குவது என் போன்றோருக்கு சரியல்ல. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும். நாம் இருவரும் விரோத பாவத்துடனேயே போரிடுவோம்' என்றான்.


பயங்கரமான யுத்தம் துவங்கியது. ஒரு சமயம், யுத்தத்தில் இடைவேளை ஏற்பட்ட போது,  விஷ்ணு ஒரு முதியவர் உருவம் எடுத்துக் கொண்டு, சங்கசூடனை அடைந்து, தான் கேட்பதை அவன் தட்டாது தர வேண்டுமெனக் கேட்டார். அவனும் ஒப்புகொள்ளவே, அவன் கழுத்திலிருந்த மந்திரக் கவசத்தைக் கேட்டார். சங்கசூடனும் கொடுத்து விட்டான்.


அதை பெற்றுக் கொண்டு, சங்கசூடனின் உருவத்தை எடுத்துக் கொண்டு, விஷ்ணு சங்கசூடனின் அரண்மனைக்குச் சென்றார்.


இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் காணலாம்.

Thursday, 12 November 2020

கோவத்ஸ_துவாதஸி

 *#கோவத்ஸ_துவாதஸி!*



*ஆஸ்வீஜ கிருஷ்ண பக்ஷ துவாதஸியை கோவத்ஸ துவாதஸி என்று கொண்டாடப்

படுகிறது!*


*திரு லஷ்மிபதி ராஜா அவர்களின் பிரவச்சனத்தின் எழுத்துப் பதிவு!*


*ஸ்தீரிகள் புருஷர்கள் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரும் அனுஷ்டிக்கலாம். செலவு ஏதுமில்லாமல் தெய்வ அனுக்ரஹத்தை பெறக்கூடிய வழிகளில் இதுவும் ஒன்று. அன்றைய தினம் முக்கியமாக யதா சக்தி கோவிற்கும் கன்றுக்குட்டிக்கும் ஆகாரம் கொடுப்பது விசேஷமானது. கோஸம்ரக்ஷணை என்பது விசேஷமானது!*


*கோவின் (பசுவின்) தேகத்தினுள் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸான்னித்தியம் கொண்டுள்ளனர். முக்கியமாக அதன் பின் பக்கம் மஹாலக்ஷ்மி ஸான்னித்தியம் கொண்டிருக்கிறாள்.   கோவினை ப்ரீதி செய்வதாலே (அந்தர்யாமியான ஸ்ரீ ஹரியை), கோதானம் செய்வதாலே, அதற்கு எத்தனை ரோமங்கள் உள்ளதோ அத்தனை ஆயிரம் வருஷங்கள் ஸ்வர்காதி லோகங்களில் வாசம் கிடைக்கிறது. ஆகவே கோசேவையானது எப்போதும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாக ஸாஸ்திரங்களில் உரைக்கப்

பட்டுள்ளது.  அதிலும் சில விஸேஷமான பர்வகாலங்களில், குறிப்பிட்ட தினங்களில், சுப காரியங்களின் அங்கமாக கோபூஜையானது வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் கோ பூஜைக்கு விசேஷமான ஒரு தினமாக சாஸ்திரம் குறிப்பிடுவது ஆஸ்வீஜ மாத (ஐப்பசி) கிருஷ்ண பக்ஷ துவாதஸி ஆகும். அதாவது தீபாவளிக்கு முன்னால் வரக்கூடிய துவாதஸி. வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. கோ - வத்ஸ என்றால்  கன்றுடன் கூடிய பசுவை குறிப்பதாகும். பசுவிற்கும் கன்றுக்குட்டிக்கும் சந்தனம் மஞ்சள் குங்குமம் பூசி புஷ்ப மாலையினால் அலங்காரம் செய்து அதன் வால் பகுதியிலோ எதிரிலோ அர்க்யம் கொடுத்து பூஜிக்க வேண்டும்.!*


*#அர்க்ய_ஸ்லோகம்:*


*"கோ ஷீரம் கோ க்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்"*


*தர்ம ஸிந்துவில் இந்த ஸ்லோகம் சொல்லப்பட்டு, அதன் 

அர்த்தமானது!*


*"பாற்கடலிலே பிறந்த என் தாயே, தேவர்களும் அசுரர்களும் உன்னை கொண்டாடு

கின்றனர். எல்லா தேவர்களும் உன்னுள்ளே இருப்பதினாலே, இந்த அர்க்யத்தை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்ய வேண்டும்!*


*என்ற விதத்திலே அர்க்யத்தை கொடுத்து, அந்த பசுவுக்கும் கன்றுக்குட்டிக்கும் புல், பழங்கள், அரிசி, வெல்லம் ஆகியவற்றைக் கொடுத்து கீழ்க்கண்டவாறு சொல்லி சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்!*


*ஸுரபி த்வம் ஜகந்மாதா தேவி விஷ்ணுபதே ஸ்திதா | ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்த ‌மிமம் க்ரஸ ||*


*ஸர்வதேவ மயே! தேவி! ஸர்வ தேவைஸ்ச  ஸத்க்ருதா !  மாதர் மமா(அ)பி லஷிதம் ஸபலம் குரு 

நந்தினி!*


*"மஹாவிஷ்ணுவுக்கு ப்ரியமாக பக்கத்தில் இருக்கும் ஜகன்மாதாவே, எல்லா தேவர்களுக்கும் இருப்பிடமாக இருக்கக்கூடிய தேவியே, என் மனோ இஷ்டங்களை பூர்த்தி செய்து பலன் தர வேண்டும் தாயே!"*


*என்று  கோவுக்கும் கன்றுகுட்டிக்கும் புஷ்பாஞ்சலி செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.!*


*ஸ்தீரிகள் புருஷர்கள் குழந்தைகள் என எல்லோரும் இந்த துவாதஸியில் கோபூஜை கோசேவை கோஸம்ரக்ஷனை செய்வதாலே ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ஞானம் பக்தி வைராக்கியம் இவற்றை அருளி பகவான் ரக்ஷனை செய்கிறார். கோ ஸம்ரக்ஷணையின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கவே  கோபாலகனாக கிருஷ்ண பகவான் அவதரித்தார் என்று பாகவதம் மகாபாரதம் போன்ற கிரந்தங்களில் நமக்கு உணர்த்துகின்றன. கிருஷ்ணனின் மகிமையை கொண்டாடும் விதத்தில் நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்ததை போற்றும் விதத்தில் நாம் செய்யும் தீபாவளி உற்சவத்திற்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இந்த இந்த கோ பூஜை ஆனது உரைக்கப்பட்டுள்ளது மிகவும் விஸேஷமாகும்!*


*இந்த ஒரு சேவையை சத்காரியத்தை செய்து பகவானுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகுவோம்!*


*பாரதி ரமண முக்ய ப்ராண அந்தர்கத கோபால கிருஷ்ணருடைய பாதாரவிந்தங்களில் சமர்ப்பணம் செய்வோம்!*


*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*


*திரு லஷ்மிபதி ராஜா அவர்களின் பிரவச்சனத்தின் எழுத்துப் பதிவு!*


🙏🙏🙏

Friday, 2 October 2020

ஸ்ரீமஹாகணபதி_மங்களமாலிகா_ஸ்தோத்திரம்

 #ஸ்ரீமஹாகணபதி_மங்களமாலிகா_ஸ்தோத்திரம்


1.   ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய கௌரீவாமாங்க வாஸிநே


த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.


#பொருள்_விளக்கம்:

ஸ்ரீநீலகண்டரின் பிரிய புத்திரனும், ஸ்ரீஅம்பாளின் இடது மடியில் வசிப்பவரும், முப்பத்திரண்டு ரூபங்கள் உள்ளவருமான ஸ்ரீமகாகணபதிக்கு மங்களம் உண்டாகட்டும்.


2. ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே!


வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.


#பொருள்_விளக்கம்:

முதலில் பூஜிக்கத் தகுந்தவரும், தேவரும், தந்தம், கொழுக்கட்டை ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டிருப்பவரும், ஸ்ரீவல்லபா தேவியின் நாதனுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


3. லம்போதராய ராந்தாய சந்திரகர்வாபஹாரிணே


கஜாநநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்!!


#பொருள்_விளக்கம்:

தொங்குகின்ற வயிற்றை உடையவரும், சாந்தமூர்த்தியும், சந்திரனின் கர்வத்தைப் போக்கியவரும், யானை முகத்தை உடையவரும், பிரபுவுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


4. பஞ்சஹஸ்தாய வந்திதாய பாராங்குபர தராயச


ஸ்ரீமதே கஜகர்ணாய ஸ்ரீகணேசாய மங்களம்!!


#பொருள்_விளக்கம்:

ஐந்து கைகளை உடையவரும், எல்லோராலும் நமஸ்கரிக்கத் தக்கவரும், பாசம்- அங்குசம் நன்றி விகடன் ஆகியவற்றைத் தரித்தவரும் ஸ்ரீமானும் யானையின் காதுகளை உடையவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


5. த்வை மாதுராய பாலாய ஹேரம்பாய மஹாத்மனே


விகடாயா குவாஹாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

துர்கை, சாமுண்டா தேவி இரண்டுபேரும் வளர்த்ததால், இரண்டு தாய்களை உடையவரும், சிறுவனும், ஹேரம்பனும் (ஹே- மஹேஸ்வரனின் அருகில், ரம்பதே - இருக்கிறார்) மஹாத்மாவும், விரிந்த கன்னத்தை உடையவரும், மூஞ்சூரை வாகனமாக கொண்டவருமான கணபதிக்கு மங்களம்.


6.ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே


ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்.


#பொருள்_விளக்கம்:

ஒளியுள்ள தந்தத்தை கொண்டவரும், ஒருவராலும் ஜெயிக்க படாதவரும், பிரார்த்தித்து வேண்டிக்கொண்ட பொருளை சீக்கிரம்


அளிப்பவரும், ஸித்தி- புத்தி என்ற இரண்டு மனைவிகளுக்கு சந்தோஷத்தை அளிப்பவருமான ஸ்ரீகணபதிக்கு  மங்களம்.


7.விலம்பியக்ஞஸுத்ராய ஸர்வ விக்னநிவாரிணே


தூர்வாதள ஸுபூஜ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

பூநூலை அணிந்தவரும், இடையூறுகளை நீக்குகிறவரும், அருகம்புல்லால் பூஜிக்கத் நன்றி விகடன் தக்கவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


8. மஹாகாயாய பீமாய மஹாஸேநாக்ரஜன்மனே


த்ரிபுராரிவோத் தர்த்ரே ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

பெரிய சரீரத்தை உடையவரும், பயங்கரமானவரும் சுப்ர மணியருக்கு முன்னதாகப் பிறந்தவரும், ஸ்ரீபரமசிவனிடம் வரம் பெற்றவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


9. ஸிந்தூர ரம்ய வர்ணாய நாகபத்தோ தராயச


ஆமோதாய ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

குங்குமப்பூவைப் போல் அழகிய நிறத்தை கொண்டவரும், நாகத்தை வயிற்றில் கட்டிக்கொண்டவரும், சந்தோஷ ரூபியும், ஆனந்தரூபியுமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


10. விக்னகர்த்ரே துர்முகாய விக்னஹர்த்ரே பரிவாத்மனே


ஸுமுகாயைகதந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

மாறுபாடான முகம் கொண்டவரும், விக்னங்களை போக்கு கின்றவரும், சிவபுத்ரனும் மங்களமான முகத்தை உடையவரும், ஒரு தந்தத்தை உடையவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


11. ஸமஸ்த கணநாதாய விஷ்ணவே தூமகேதவே


த்ரியக்ஷாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

எல்லா கணங்களுக்கும் தலைவரும், எங்கும் வியாபித்தவரும், பாபிகளுக்கு இடையூறின் உருவமாக இருப்பவரும். முக்கண்ணனும் நெற்றியில் சந்திரனை தரித்தவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


12. சதூர்திபராய மான்யாய ஸர்வவித்யாப்ரதாயினே


வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

சதுர்த்தி திதிக்கு நாயகனும், பூஜிக்கத் தக்கவரும். எல்லா வித்தைகளையும் கொடுப்பவரும், வளைந்த நன்றி விகடன் துதிக்கையை உடைய வரும், குள்ளமாக இருப்பவருமான ஸ்ரீ கணபதிக்கு மங்களம்.


13. துண்டினே கபிலாக்யாய ஸ்ரேஷ்டாய ருணஹரிணே


உத்தண்டோத்தண்டரூபாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

நர்த்தனம் செய்கின்றவரும், கபில கணபதி என்ற பெயரை உடையவரும், கடனைப் போக்குகிறவரும், மிகப் பயங்கரமான ரூபமுடையவருமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


14. கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயினே


விநாயகாய விபவே ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

கஷ்டங்களைப் போக்குகின்றவரும், யானை, மனிதன் ஆகிய இரண்டு உருங்களாக இருப்பவரும், பக்தர்கள் கோரிய ஜயத்தை அளிப்பவரும், விநாயகரும், ப்ரபுவுமான ஸ்ரீ கணபதிக்கு  மங்களம்.


15. ஸச்சிதா நந்த ரூபாய நிர்குணாய குணாத்மனே


வடவே லோக குரவே ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

ஸத், சித், ஆனந்தம் இந்த உருவாக இருப்பவரும் முக்குணம் அற்றவரும், கல்யாண குணங்கள் நிரம்பியவரும், பிரும்மசாரி ரூபியும் உலகங்களுக்கு ஆசார்யருமான கணபதிக்கு மங்களம்.


16. ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய ப்ரஸன்னவதனாயச


ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்


#பொருள்_விளக்கம்:

ஸ்ரீசாமுண்டா தேவியின் மங்கள புத்திரரும், யானை முகத்தை உடையவரும், ஸ்ரீ குபேரன் முதலியவர்களால் சேவிக்கத் தகுந்தவருமான ஸ்ரீகணபதிக்கு மங்களம்.


17. ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர ஸ்ரீக்ருஷ்ணேந்தர விநிர்மிதாம்


விபூதி மாத்ருகாரம்யாம் கல்யாணைஸ்வர்ய தாயி நீம்


18. ஸ்ரீமஹா கணநாதஸ்ய ஸ்ரீபாம் மங்கள மாலிகாம்


ய: படேக் ஸததம் வாணீம் லக்ஷ்மீம் ஸித்தி மவாப்நுயாத்


#பொருள்_விளக்கம்: 

17,18

ஸ்ரீதுர்காதேவியின் கருணைக்குப் பாத்திரமான...  ஸ்ரீக்ருஷ்ணேந்திந்ராள் என்ற ஸந்நியாஸியால் செய்யப்பட்டதும், அஷ்ட ஸித்திகள் மற்றும் சப்த மாத்ருகைகளின் பிரசாதத்தையும் அளிப்பதால் ரமணீயமாக உள்ளதும், கல்யாணங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடியதும், மங்களத்தை அளிக்கக் கூடியதுமான ஸ்ரீமஹா கணபதியின் மங்கள மாலிகா ஸ்தோத் திரத்தை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் சகல சௌபாக்கியங்

களையும் அடைவான்.


ஸ்ரீமஹா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


தொகுப்பு: எம்.ஆனந்த நாராயணன்


#நன்றி  :  #விகடன்.

Monday, 14 September 2020

அளவற்ற_செல்வம்_தரும்_ஆனித்_திருமஞ்சனம்

 #அளவற்ற_செல்வம்_தரும்_ஆனித்_திருமஞ்சனம்



ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு. இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்துகிறார்கள்.


இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக்கு ஒரு கால அளவாகவும், மனிதர்களுக்கு வேறு ஒரு கால அளவாகவும் இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளைத்தான் குறிக்கும். அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும்.


தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தை குறிக்கும். தேவர்களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தை குறிக்கும். அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தை குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தை குறிக்கும்.


இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள். 


மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.


இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள். அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஜூன் 21-ந்தேதி சிவாலயங்களில் ஆனி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.


திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது ஈசனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவ னையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை 3 மணியில் இருந்தே அபிஷேகம் தொடங்கி விடுவார்கள்.


சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள். ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணா மலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. 


ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு. அப்போது பலவகை அபிஷேகங்கள் செய்யப்படும்.


அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.


நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும். 


அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.


அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.


ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.


என்றாலும் மற்ற சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடத்தப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை தலத்தில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்துகிறார்கள்.


திருமஞ்சனம் தினத்துக்கு முந்தைய தினம், அதாவது 20-ந்தேதி புதன்கிழமை மாலை ஸ்ரீநடராஜ பெருமான் புறப்பாடாகி எழுந்தருள்வார். இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு வரும் அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தை கடந்து ஆயிரம் கால் மண்டபத்துக்கு வந்து சேருவார்.


ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஸ்ரீநடராஜ பெருமான் எழுந்தருள்வார். ஒன்று மார்கழி திருவாதிரை தினம். மற்றொன்று ஆனி திருமஞ்சனம் தினம்.


எனவே ஆனி திருமஞ்சன திருநாளில் ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம் கால் மண்டபத்துக்கு வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்ததும் வலது பக்கம் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.


அன்றிரவு முழுவதும் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருப்பார். மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அங்கு ஆனி திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இதுபற்றி திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யார்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் கூறுகை யில், “ஆனி திருமஞ்சனம் தினத்தன்று பள்ளியறை திறக்கப்பட்ட பிறகே ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கும். பொதுவாக பழமையான மற்ற சிவாலயங்களில் அதிகாலை 3 மணிக் கெல்லாம் நடராஜ பெருமானுக்கு அபி ஷேகம் தொடங்கி நடப்பதுண்டு.


ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அதிகாலை 5 மணிக்குத்தான் அபி ஷேகம் தொடங்கும். பழங்காலத்தில் இந்த அபிஷேகம் பல மணி நேரத்துக்கு நடந்துள்ளது.


60-க்கும் மேற்பட்ட வகை, வகையான அபிஷேகங்களை நடராஜருக்கு செய்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் அந்த அளவுக்கு அதிகமான அபிஷேகங்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே 16 வகை அபிஷேகம் நடத்தப்படுகிறது” என்றார்.


பொதுவாக இறைமூர்த்தங்களுக்கு நடத்தப்படும் சில அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்கக் கூடாது என்று சொல்லப் படுவதுண்டு. ஆனால் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடத்தப் படும் அனைத்து வகை அபிஷேகங் களையும் பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.


அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் ஸ்ரீநடராஜ பெருமான் அழகுப்படுத்தப்பட்டு, அலங்காரம் செய்யப் படுவார். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.


அதன் பிறகு ஸ்ரீநட ராஜ பெருமான், சிவகாம சுந்தரியுடன் நடனம் ஆடியபடி ஆயிரம் கால் மண்டபத்தின் படிகளில் இறங்கி வருவார். அந்த காட்சி கைலாயத்தில் சிவபெருமான் நடனம் ஆடிக் கொண்டு வருவது போன்று ஆனந்தமயமாக கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


நடராஜர் ஆடும் அந்த ஆனந்த நடனம், உண்மையிலேயே பக்தர்கள் மனதில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளித்தரும். மனம் எல்லாம் பூரிப்பால் நிறைந்து விடும்.


இதைத் தொடர்ந்து ஸ்ரீநடராஜ பெருமான் திருவீதி உலாவுக்கு புறப்படுவார். அதிலும் ஒரு வித்தியாசமான நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது.


பொதுவாக சிவாலயங்களில் திருவீதி உலாவுக்கு செல்லும் இறைமூர்த்தங்கள் ராஜகோபுரம் வழியாகவே சென்று திரும்பும். திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியாக உற்சவர்கள் சென்று வருகிறார்கள்.


ஸ்ரீநடராஜ பெருமான் அந்த திட்டிவாசல் வழியை பயன்படுத்த மாட்டார். அவர் திருமஞ்சனம் கோபுரவாசல் வழியையே பயன்படுத்துவார். ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் அவர் ராஜகோபுரத்துக்கு முன்னதாக உள்ள பிரகார நந்தவனம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழி யாக வீதி உலா செல்வார்.


(ஆலயத்துக்கு தினமும் அதிகாலை இந்த வாசல் வழியாகத்தான் திருமஞ்சன புனிதநீர் எடுத்து வரப்படுவதால், இந்த கோபுரத்துக்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது)


திருவண்ணாமலை ஆலய நடராஜர் உற்சவர் பிரமாண்ட உருவ அமைப்பு கொண்டவர். வீதி உலாவில் அவரைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.


வீதி உலா முடிந்த பிறகு ஸ்ரீநடராஜ பெருமான் அதே திருமஞ்சன கோபுரம் வழியாக ஆலயத்துக்கு திரும்புவார். திருவண்ணாமலை ஆலயத்தில் ஒருநாள் உற்சவமாக இந்த “ஆனித் திருமஞ்சன உற்சவம்” கொண்டாடப்படுகிறது.


ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். முதலாவது பலன்- நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். விவசாயம் செழித்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.


அடுத்து ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக கூறப்பட்டுள்ளது. 


சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். மொத்தத்தில் சிவ-சக்தி இருவரது பேரருளும் நமக்கு கிடைக்கும்.


ஆனி திருமஞ்சன உற்சவம் போலவே திருவண்ணாமலையில் நடக்கும் பஞ்ச பருவ உற்சவங்களும் அதிசயங்களால் நிறைந்தவை.


நன்றி  :  மாலை மலர்.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...