Sunday, 21 October 2018

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம்

#அன்னாபிஷேகம்

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம்
சிறப்பு
கட்டுரை :

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது,

அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின்
வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.

உலக வாழ்கைக்கு அச்சாணி.

அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே
காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க
மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள்.

ஐப்பசி பௌர்ணமி நாள்.

அன்னாபிஷேக பொருள் விளக்கம்:

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது
படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்
அன்று அவனது கலை அமிர்த கலையாகும்.

அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

*சிவன் பிம்பரூபி*

அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள்.

பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும்.

அனைவருக்கும்
அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு
பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.

இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேக தரிசன பலன்:

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு
பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி
சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

சிவன் அபிஷேகப்பிரியர்.
மொத்தம் 16
பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம்.

அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம்.

சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்பு உடையதாகும்.

ஆகமத்தில் அன்னாபிஷேகம்:

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க  உரிய பொருளால் சிவபெருமானை
வழிபடுவது விஷேமானதாகும்.
ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய
அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.

முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும்.

இரண்டும் வேறல்ல.

அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு :

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது.

நிலத்தில் விளைந்த நெல்
அரிசியாகின்றது.

அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது.
எனவே அன்னமும்
பஞ்ச பூதங்களின் சேர்க்கை.

இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி
முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி அடைக்கலமாகின்றது.

அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.

எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

முக்கிய குறிப்பு :

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை
பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்
உண்டு என்பது ஐதீகம்.

அன்னாபிஷேக மஹத்வம் :

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம்
செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த
பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய
பலன்கள் சேர்கின்றன.

சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில்
வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும்.

அந்த
அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து,ஆனந்தம் அடைவோமாக.

ஓம் நமச்சிவாய


Saturday, 20 October 2018

ஸ்ரீ குருவாயூரப்பன் .

ஸ்ரீ குருவாயூரப்பன் .
நமஸ்காரம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜன்மம் பாபம் தீர
குருவாயூரப்பா!நம்ஸ்காரம் செய்கின்றோம்.

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தன காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்
நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்

எண்ணைய் ஸ்நானம் செய்து கையில் வாழைபழத்தோடு நிற்கும்
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக்கொண்டு
குழல் ஊதும் க்ருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து
ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
நாராயணா உன்னைநமஸ்காரம் செய்கின்றோம் !

Sunday, 26 August 2018

பஞ்ச_குண_சிவ_மூர்த்திகள்

☘#பஞ்ச_குண_சிவ_மூர்த்திகள்
☘
__

#ஓம்_நமச்சிவாய
--
பஞ்ச குண சிவ மூர்த்திகள் எனப்படுவது ஐந்து குணங்களை வெளிப்படுத்தும் ஐந்து வகையான சிவ மூர்த்திகள் ஆவர்.

☘#ஆனந்தம்_சாந்தம்_கருணை_வசீகரம்_ருத்திரம் ஆகியவை #பஞ்ச_குணங்கள் ஆகும்.☘

ஆனந்தத்தின் வடிவமாக நடராஜரும், சாந்தத்தின் வடிவமாக தட்சிணாமூர்த்தியும், கருணையின் வடிவமாக சோமஸ்கந்தரும், வசீகரத்தின் வடிவமாக பிச்சாடனாரும், ருத்திரத்தின் வடிவமாக பைரவரும் போற்றப்படுகின்றனர்.

இனி பஞ்ச குண சிவ மூர்த்திகளைப் பற்றிப் பார்ப்போம்...

☘#ஆனந்த_மூர்த்தி – #நடராஜர்☘

சிவனின் ஆனந்த வடிவமாக நடராஜர் வழிபடப்படுகிறார். இவர் ஆடல்கலையின் தலைவராகவும் வணங்கப்படுகிறார்.

இவர் தனது ஆடல்கலையின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கிறார் எனக் கருதப்படுகிறது.

இவர் வலது காலை முயலகன் மீது ஊன்றியும், இடது காலை உடலுக்கு குறுக்காக தூக்கிய ஆடிய நிலையிலும் காட்சியளிக்கிறார்; வலது மேற்கையில் டமருகமான உடுக்கையையும், இடது மேற்கையில் அக்னியையும் ஏந்தியுள்ளார்.

இவரின் வலது கீழ்கை அடைக்கலம் தரும் நிலையிலும், இடது கீழ்கைகளின் விரல்கள் தூக்கிய திருவடியை சுட்டியபடியும் இருக்கும்.

இவரது கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் ஆடியபடி இருக்கின்றன.

தலையில் கங்கை, நாகம், பிறைச்சந்திரன் ஆகியவற்றை அணிந்துள்ளார்.

முகத்தில் புன்சிரிப்புடன் காண்போரை கவர்ந்திழுக்கின்றார் நடராஜர்.

நடராஜர் உருவம் பஞ்சபூதங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அதாவது ஊன்றிய திருவடி நிலத்தினையும், தலையிலுள்ள கங்கை நீரினையும், இடதுமேற்கை அக்னி நெருப்பினையும், அசைந்தாடும் கூந்தல் காற்றினையும், தூக்கிய திருவடி ஆகாயத்தையும் குறிக்கின்றது.

இவரின் ஆனந்த தாண்டவமே உலக இயக்கத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

ஆடல்வல்லான், ஆடலரசன், சிற்றம்பலன், சபேசன், அம்மபலத்தான், கூத்தன் என்றெல்லாம் நடராஜர் அழைக்கப்படுகிறார். இம்மூர்த்தியை வழிபட எல்லையில்லா பேரானந்தம் கிடைக்கும்...

☘#சாந்த_மூர்த்தி – #தட்சிணாமூர்த்தி..☘

சிவனின் சாந்த வடிவமாக தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார். இவர் சிவாலயங்களில் மூலவருக்கு தெற்கே கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக அருள்பாலிக்கிறார்.

இவர் ஞானம், அறிவு, தெளிவு ஆகியவற்றின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.

இவர் வலது காலை அபஸ்மரனின் மீது ஊன்றியும், இடது காலை மடித்து அமர்ந்து தியான நிலையில் உள்ளார்; வலது மேற்கையில் பாம்புடன் கூடிய உடுக்கை ஃ ருத்திராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்னியையும் கொண்டுள்ளார்.

இவரது இடது கீழ்கையில் ஓலைச்சுவடி உள்ளது. வலது கீழ்கையில் உள்ள பெருவிரலுடன், ஆட்காட்டி விரலை இணைத்து ஏனைய விரல்கள் நேராக வைத்து சின்முத்திரை காட்டி அருளுகிறார்.

இடையில் புலித்தோலினையும், தலையில் பிறைச்சந்திரனையும் அணிந்து அருளுகிறார்.

பிரம்மாவின் குமாரர்களான சனகர், சதானந்தர், சனாதனர், சனத்குமாரர் ஞானத்தைத் தேடி அலைந்தனர். அவர்கள் தேடிய ஞானம் எங்கும் புலப்படவில்லை.

அப்போது தென்முகம் நோக்கி இறைவனான சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருந்தார்...

இதனைக் கண்ட சனகாதி முனிவர்கள் பசுவாகிய ஆன்மாவானது ஆணவம்;, கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை ஒழித்து பதியாகிய இறைவனை அடையும்போது ஞானம் (மோட்சம்) கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டனர்.

சிவனின் இத்திருக்கோலம் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

இவர் ஆலமர் கடவுள், ஆலமர் செல்வன், குருபகவான், தென்முகக் கடவுள் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இவரை வழிபட அறியாமை என்ற அஞ்ஞானம் நீங்கி மெய்யறிவான ஞானம் கிடைக்கும்.

☘#கருணா_மூர்த்தி – #சோமஸ்கந்தர்..☘

சிவனின் கருணா வடிவமாக சோமஸ்கந்தர் வழிபடப்படுகிறார். சோமானான சிவபெருமான் ஸ்கந்தர் எனப்படும் முருகன், உமையம்மையுடன் இணைந்து இருப்பதால் சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

இவ்வடிவில் இறைவன் அன்பான கணவனாகவும், பாசமிகு தந்தையாகவும் இருக்கிறார். குடும்ப உறவின் உன்னத நிலையை இவ்வடிவம் உணர்த்துகிறது.

சிவபெருமான் வலதுபக்கத்திலும், உமையம்மை இடது பக்கத்திலும் இவ்விருவருக்கு இடையில் முருகப்பெருமானும் காட்சியளிகின்றனர்.

சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து இவ்வுலகைக் காக்கும் பொருட்டு இறைவனார் தம் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்பு பொறிகளை உருவாக்கினார். அந்நெருப்பு பொறிகளை அக்னிதேவனும், வாயுதேவனும் சரவணப்பொய்கையில் சேர்த்தனர்.

நெருப்பொறிகள் ஆறு தாமரைமலர்களில் ஆறுகுழந்தைகளாக மாறினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். குழந்தைகளைக் காண வந்த உமையம்மை ஆறுகுழந்தைகளை அணைத்த போது அறுவரும் ஒரே குழந்தையாக மாறினர். இவரே கந்தன் என்று அழைக்கப்பட்டார்..

கந்தன் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் இருந்து உலகத்திற்கு காட்சியளித்தார். இவ்வுருவமே சோமஸ்கந்தர் என்றழைக்கப்படுகிறது.

குழந்தைநாயகர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு, இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். இவரை வழிபட நல்ல குடும்ப வாழ்க்கையும், குடும்ப ஒற்றுமையும் கிடைக்கும்..

☘#வசீகர_மூர்த்தி – #பிட்சாடனார்☘

சிவனின் வசீகர வடிவமாக பிட்சாடனர் வழிபடப்படுகிறார். இவ்வடிவம் சிவபெருமான் பிச்சை ஏற்கும் வடிவிலான திருக்கோலமாகும். இவ்வடிவனத்தில் இறைவனார் பெரும் அழகோடு எல்லோரையும் வசீகரிக்கிறார்.

வசீகர மூர்த்தி இடது காலை ஊன்றி வலது காலை வளைத்து நடந்து செல்லும் நிலையில் உள்ளார். முன்வலது கையில் அருகம்புல்லால் மானை ஈர்த்தும், பின்வலது கையில் உடுக்கை ஏந்தி காதுவரை நீண்டும் இவர் காட்சியளிக்கிறார்.

பின்இடது கையில் பாம்புடன் திரிசூலமும், முன்இடது கையில் பிச்சை பாத்திரமும் கொண்டிருப்பார். ஆடையேதுமின்றி இடையில் பாம்பை அணிந்து விளங்குவார்.

தலையில் சடாபாரம், நெற்றியில் முக்கண்ணும், கருணை பொழியும் கண்களும், காண்போரை மயக்கும் கட்டழகுடனும் அருளுவார்.

வலக்காலில் வீரக்கழலும், திருவடிகளில் பாதுகைகளும் காணப்படும். இவரின் இடப்பக்கத்தில் தலையில் பிச்சை பாத்திரம் கொண்ட குறட்பூதமும், மோகினியும் காணப்படுவர்.

தாருகாவனத்தில் முனிவர்கள் வேள்விகளிலும், வேதமந்திரங்களிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை எனச் செருக்குற்றிருந்தனர். முனி பத்தினிகளும் கற்பில் தாங்கள் சிறந்தவர்கள் என்று ஆணவம் கொண்டிருந்தனர்.

அப்போது சிவபெருமான் பிட்சாடனார் வேடமிட்டு திருமாலை மோகினி வேடத்தில் கூட்டிக் கொண்டு தாருகாவனத்திற்குச் சென்றார்...

முனி பத்தினிகள் பிட்சாடனர் பின்னும், முனிவர்கள் மோகினி பின்னும் தங்களை மறந்து சென்றனர். திடீரென முனிவர்கள் தங்கள் நிலையை உணர்ந்தனர்.

தங்களின் பத்தினிகள் மயங்கக் காரணமான பிட்சாடனார் மீது வேள்வித்தீ, மான், மழு, நாகங்கள், யானை, புலி, சூலம், பூதப்படை, உடுக்கை, முயலகன் ஆகிவற்றை ஏவினர்.

இறைவனார் அவற்றை ஆடையாகவும், அணிகலானகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார். இதனைக் கண்ட முனிவரும், அவர்தம் பத்தினியரும் இறைவனை உணர்ந்து தங்களின் ஆவணவம் அழியப் பெற்றனர்.

பலிதேர்பிரான், ஐயங்கொள் பெம்மான், பிச்சத்தேவர் என்றெல்லாம் போற்றப்படும் இவரை வழிபட அடியர்களின் தீவினைகளை அழித்து நல்வழி காட்டுவார்.

இவர் தம் பக்கதர்களின் சிற்றின்ப பற்றினை நீக்கி பேரின்பத்தை நல்குவார்..

☘#ருத்திர_வடிவம் – #பைரவர்...☘

சிவனின் ருத்திர வடிவமாக பைரவர் வழிபடப்படுகிறார். இவரை வைரவர் என்றும் அழைப்பர். இவரின் வாகனம் நாய் ஆகும். இவர் காவல் தெய்வமாக்க கருதப்படுகிறார்.

இவர் பொதுவாக சிவாலயத்தில் வடகிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார்.

சிவாலய வழிபாட்டின் முடிவில் சிவாலயத்திலிருந்து பிரசாதத்தைத் தவிர வேறு பொருட்களை எடுத்து செல்லவில்லை என்று கூறி இவரிடம் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும்.

பிறந்த மேனியினராய், நாகத்தை பூணூலாகவும் சந்திரனை தலையில் வைத்தும் காட்சி அளிக்கிறார். கைகளில் பாசம், அங்குசம், சூலம், வாள் ஆகியவற்றை ஏந்தி நாய் வாகனத்துடன் அருள்பாலிப்பார்.

இவர் சனிபகவானின் குருவாகவும், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரங்கள் உள்ளிட்டவைகளையும், காலத்தை கட்டுப்படுத்துபவராகவும் கருதப்படுகிறார்.

அந்தகாசுரன் என்ற அசுரன் சிவனிடம் பெற்ற வரத்தினால் உலக உயிர்களை துன்புறுத்தினான். சிவனிடம் இருந்து பெற்ற சக்தியால் உலகினை இருளில் மூழ்கடித்தான்..

அனைவரும் இறைவனான சிவபெருமானிடம் அந்தாகாசுரனை வதம் செய்ய வேண்டினர்.

சிவனும் காலாக்னியைக் கொண்டு பைரவரை படைத்தார். பைரவரும் சிவனின் ஆணைப்படி அந்தகாசுரனை அழித்து உலகில் ஒளி பரவச் செய்தார்.

எட்டு திசைகளிலும் நிலவிய இருளைப் போக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இவர் பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், சேத்ர பாலர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், சித்தன், வாதுகன் என பல பெயர்களில் போற்றப்படுகிறார்.

இவரை வழிபட மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி சிறந்ததாகும். செவ்வாயுடன் சேர்ந்த தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவரை வழிபட அகால மரணம் தவிர்க்கப்படும். நோய் நொடிகள் நீக்கி வளமான வாழ்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

நாமும் பஞ்ச குண சிவ மூர்த்திகளை வழிபட்டு வாழ்வில் மேன்மை அடைவோம்..
சிவசிவ
அன்பே சிவம்.

Tuesday, 21 August 2018

ஸ்ரீ_அருணகிரிநாதர்_சுவாமிகள்_அருளிய_கந்தர்_அநுபூதி

☘#ஸ்ரீ_அருணகிரிநாதர்_சுவாமிகள்_அருளிய_கந்தர்_அநுபூதி
☘

☘#காப்பு☘
--
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
--
☘#நூல்☘

(1) ☘ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.☘
--
(2) ☘உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.☘
--
(3) ☘வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.☘
--
(4)☘ வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.☘
--
(5) ☘மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.☘
--
(6) ☘திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.☘
--
(7) ☘கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.☘
--
(8) ☘அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.☘
--
(9) ☘மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல
நிர்பயனே.☘
--
(10) ☘கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.☘
--
(11) ☘கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.☘
--
(12) ☘செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.☘
--
(13) ☘முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.☘
--
(14) ☘கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.☘
--
(15) ☘முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.☘
--
(16)☘ பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக
 துரந்தரனே.☘
--
(17) ☘யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.☘
--
(18) ☘உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல,
சூர பயங் கரனே.☘
--
(19)☘ வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.☘
--
(20) ☘அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.☘
--
(21) ☘கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.☘
--
(22)☘ காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.☘
--
(23) ☘அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே☘
--
(24) ☘கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர
 பூபதியே.☘
--
(25) ☘மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.☘
--
(26) ☘ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.☘
--
(27) ☘மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஆனா வானவனே.☘
--
(28) ☘ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.☘
--
(29) ☘இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.☘
--
(30)☘ செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.☘
--
(31)☘ பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.☘
--
(32)☘ கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.☘
--
(33) ☘சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.☘
--
(34) ☘சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.☘
--
(35) ☘விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா,
சுர பூபதியே.☘
--
(36) ☘நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத
சேகரனே.☘
--
(37) ☘கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.☘
--
(38) ☘ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.☘
--
(39) ☘மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர
தேசிகனே.☘
--
(40) ☘வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.☘
--
(41) ☘சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.☘
--
(42)☘ குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.☘
--
(43) ☘தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி
பிறந்ததுவே.☘
--
(44) ☘சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.☘
--
(45) ☘கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக
தயாபரனே.☘
--
(46) ☘எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.☘
--
(47) ☘ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.☘
--
(48) ☘அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.☘
--
(49) ☘தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.☘
--
(50) ☘மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.☘
--
(51) ☘உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.☘

ஸ்ரீபஞ்சாயுத_ஸ்தோத்ரம்

#ஸ்ரீபஞ்சாயுத_ஸ்தோத்ரம்
...

தினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்
திருமாலின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும்.

#திருமாலின்_திருவருளும், அதனால் திருமகளின் அருளும் உங்கள் இல்லம் வந்து சேரும்.
குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும். எதிரிகள் சக்தியிழப்பர்.

 1) #சுதர்சனம் - சக்கரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,
வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

2) #பாஞ்சஜன்யம் - சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால்
அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

3) #கௌமோதகம் - கதை

ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

4) #நந்தகம் - வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

5) #சார்ங்கம் - வில்

யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.

இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்தது:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.

Sunday, 19 August 2018

ஹிரண்மயீம் லக்ஷ்மீம்

இராகம் : லலிதா

தாளம் : ரூபகம்

#பல்லவி

ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஸதா பஜாமி
ஹீன மானவாஸ்ரயம் த்யஜாமி

#அனுபல்லவி

சிர-தர ஸம்பத்ப்ரதாம்
க்ஷீராம்புதி தனயாம்

ஹரி வக்ஷ:ஸ்தலாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்ருத குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

#சரணம்

ஸ்வேத த்வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பிகாம் பராம்
பூத பவ்ய விலாஸினீம்
பூஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்ஜ மாலினீம்
மாணிக்யாபரண தராம்
கீத வாத்ய வினோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்

ஸீத கிரண நிப வதனாம்
ஸ்ரித சிந்தாமணி ஸதனாம்
பீத வஸனாம் குரு குஹ -
மாதுல காந்தாம் லலிதாம் (ஹிரண்மயீம்
லக்ஷ்மீம் )

ஏகாதசி

🍀#ஏகாதசி #விரதமும்.. #பலன்களும்..🍀
--
#ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் #ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
--
#ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் #ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் #ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். #அமாவாசை, #பவுர்ணமிக்கு #அடுத்த 11 நாட்களில் ஒரு #ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 #ஏகாதசிகள் #வருகின்றன. #இதில் #வளர்பிறையில் #ஒரு #ஏகாதசியும், #தேய்பிறையில் #ஒரு #ஏகாதசியும் #வரும்.
--
#ஆண்டு முழுவதும் #வரும் #ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த #ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் #நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. #ஒவ்வொரு #ஏகாதசியும் #ஒவ்வொரு #பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
--
 #சித்திரை மாத #வளர்பிறை #ஏகாதசி,  🍀‘காமதா ஏகாதசி’🍀 என்றும், #தேய்பிறையில் #வரும் #ஏகாதசி
🍀 ‘பாப மோகினி ஏகாதசி’🍀  என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு #ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.
--
 #வைகாசி மாத #வளர்பிறை #தினத்தில் வரும் ஏகாதசி 🍀‘மோகினி ஏகாதசி’ 🍀என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘வருதித் ஏகாதசி’ 🍀என்றும் கூறப்படுகிறது. இந்த #ஏகாதசி காலங் களில் #விரதம் இருப்பவர்கள் அனைவரும், #இமயமலை #சென்று #பத்ரிநாத்தை #தரிசனம் #செய்து #வந்ததற்கானபலனைபெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
--
 #ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 🍀‘நிர்ஜலா ஏகாதசி’🍀 என்றும், #தேய்பிறையில் #வரும் #ஏகாதசி🍀 ‘அபார ஏகாதசி’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் #சொர்க்கத்தை #அடைவார்கள்.
--
 #ஆடி மாதத்து #வளர்பிறை #ஏகாதசி  🍀‘சயனி’ 🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘யோகினி’ 🍀 என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த #ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு #அன்னதானம் #வழங்கியதற்கு #நிகரான #பலன்கள் #கிடைக்கப்பெறும்.
--
 #ஆவணி மாத #வளர்பிறை #ஏகாதசியானது 🍀‘புத்ரஜா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசியானது🍀 ‘காமிகா’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசி #தினங்களில் #விரதம் #இருந்தால் #மக்கட்பேறு #கிடைக்கப்பெறுவார்கள்.
--
 #புரட்டாசி மாத #வளர்பிறை #ஏகாதசி, 🍀‘பத்மநாபா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘அஜா’ 🍀 என்றும் பெயர் பெற்றது. இந்த #ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.
--
 #ஐப்பசி மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘பாபாங்குசா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி 🍀‘இந்திரா’🍀 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த #ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
--
 #கார்த்திகை மாத #வளர்பிறை #ஏகாதசி
🍀 ‘பிரபோதின’🍀 எனப்படும் இந்த #ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், #தேய்பிறை #ஏகாதசியான, 🍀‘ரமா’🍀 தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
--
 #மார்கழி மாத #ஏகாதசி 🍀‘வைகுண்ட ஏகாதசி’🍀 என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் #ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் #தேய்பிறை #ஏகாதசி 🍀‘உத்பத்தி ஏகாதசி’🍀 எனப்படுகிறது.
--
 #தை மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘புத்ரதா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘சுபலா’🍀 என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.
--
 #மாசி மாத #வளர்பிறை #ஏகாதசி🍀 ‘ஜெயா’🍀 என்றும், #தேய்பிறை #ஏகாதசி
🍀 ‘ஷட்திலா’ 🍀என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
--
 #பங்குனி #தேய்பிறை #ஏகாதசி 🍀‘விஜயா’ 🍀எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். #வளர்பிறை #ஏகாதசி
🍀 ‘ஆமலகி’ 🍀எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.
--
ஆண்டில் கூடுதலாக வரும் #ஏகாதசி🍀 ‘கமலா ஏகாதசி’🍀 எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

🍀தொகுப்பு🍀 :  🍀திருமதி லதா வெங்கடேஷ்வரன்.🍀

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...