Friday, 17 August 2018

நாராயணன் நாமம்

நாராயணன் நாமம் ஒரு முறை சொன்னாலே
நாடுமே நலம் யாவுமே( ஸ்ரீ மன் நாராயணா)

வாரணம் கூவிட ஓடி வந்தான்
ஆரணங்கின் மானம் காத்து நின்றான் (ஸ்ரீ மன்)

பார்த்தனுக்காகவே தேர் செலுத்தி தர்ம போரினில் கீதையும் பரிந்துரைத்தான் ( ஸ்ரீ மன் )

சிறுவன் துருவன் துதித்த நாமம்
பிரகலாதன் அனவரதமும் பஜீத்த நாமம்
அரிய அஷ்டாச்சர நாமம்- குருவாயூர் அப்பனால் கலியினில் காட்சி தந்திடும் ( ஸ்ரீ மன் )

Wednesday, 8 August 2018

கமலாம்பிகை_ஸ்தோத்திரம்

#கமலாம்பிகை_ஸ்தோத்திரம்
.

நாராயண தீர்த்தரின் சீடரால் துதிக்கப்பட்டது.

1. பந்தூகத் யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தா ரகைர்வந்தி தாம்
மந்தா ராதி ஸமர்சிதாம் மது மதீம்
மந்த ஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச் சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகா பவர்க ப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : செம்பருத்திப் பூ போல் பிரகாசிப்பவள், சந்திரபிம்பம் போன்ற முகம் உடையவள், தேவர்களால் வணங்கப்படுபவள், மந்தாரம் முதலிய மலர்களால் பூஜிக்கப்படுபவள், ஆனந்தத்தை அளிப்பவள், புன்சிரிப்பு மிக்கவள், பேரழகி, கர்மபந்தத்தைப் போக்குபவள், முக்கண்ணாள், இந்த உலகில் எல்லா சுகங்களையும் தந்து, மோக்ஷத்தை அளிப்பவள், விரும்பியதை அளிப்பவள், அப்படிப்பட்ட மங்களத்தை அருளும் கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

2. ஸ்ரீகாமேச்வர பீட மத்ய நிலயாம்
ஸ்ரீராஜராஜேச்வரீம்
ஸ்ரீவாணீ பரிஸேவிதாங்க ரியுகளாம்
ஸ்ரீமத்க்ருபாஸாக ராம்
சோகாபத்பய மோசினீம் ஸுகவிதா
நந்தைக ஸந்தாயினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : காமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவள், ராஜராஜர்களின் தலைவி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் துதிகக்ப்பட்ட தாமரைத் திருவடிகளை உடையவள்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ பெருஞ்செல்வத்தைத் தரும் கருணைக்கடல், கவலை, பயம், ஆபத்துக்களைப் போக்குபவள், நல்ல புலமையைத் தந்து ஆனந்த நிலையை அளிப்பவள், விரும்பியதை அளிப்பவளும், மங்களத்தை அருளுபவளுமான கமலாம்பிகையை வணங்குகின்றேன்.

3. மாயா மோஹவினாசினீம்
முனிக ணைராராதி தாம் தன்மயீம்
ச்ரேய: ஸஞ்சய தாயினீம் குணமயீம்
வாய்வாதி பூதாம் ஸதாம்
ப்ராத: கால ஸமானசோப மகுடாம்
ஸாமாதி வேதை ஸ்துதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : மாயையால் உண்டாகும் அஞ்ஞானத்தைப் போக்குபவள், முனிவர்களால் துதிக்கப்பட்டு பிரம்மஸ்வரூபமாக விளங்குபவள், பலவித நன்மைகளை அளிப்பவள், நல்ல குணங்களை உடையவள், சாதுக்களின் இதயத்தில் ஆகாச வடிவில் உள்ளவள்,
https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/
அதிகாலை சூரியனுக்கு நிகரான சிவந்த அழகுடைய கிரீடத்தை உடையவள், சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளாகிய கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

4. பாலாம் பக்தஜனௌக சித்தநிலயாம்
பாலேந்து சூடாம்ப ராம்
ஸாலோக்யாதி சதுர்விதார்த பலதாம்
நீலோத்பலாக்ஷீமஜாம்
காலாரி ப்ரிய நாயிகாம் கலிமல
ப்ரத வம்ஸினீம் கௌலினீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : சிறுமி வடிவினள், பக்தர்களின் இதயத்தில் இருப்பவள், சந்திரக் கலையைத் தரித்தவள், பரபிரம்மஸ்வரூபிணி. ஸாலோகம், ஸாமீபம், ஸாரூபம், ஸாயுஜ்யம் முதலிய புருஷார்த்தங்களைக் கொடுப்பவள். கருங்குவளை மலர்களை ஒத்த கண்களை உடையவள், பிறப்பற்றவள், காலனைக் காலால் உதைத்த பரமசிவனின் மனைவி, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்கி, விரும்பியதை அளிப்பவளுமான மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

5. ஆனந்தாம்ருத ஸிந்து மத்ய நிலயாம்
அக்ஞான மூலாபஹாம்
க்ஞானானந்த விவர்தினீம் விஜயதாம்
மீனேக்ஷணாம் மோஹினீம்
க்ஞானானந்த பராம் கணேச ஜனனீம்
கந்தர்வ ஸம்பூஜிதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : ஆனந்தக் கடலின் நடுவில் இருப்பவள், அஞ்ஞானத்தின் காரணத்தைப் போக்கி, ஞானமும், ஆனந்தமும் அளிப்பவள், வெற்றியை நல்குபவள், மீன் போன்ற கண்களை உடையவள், மோகிக்கச் செய்பவள், மகாகணபதியின் தாய், கந்தர்வர்களால் பூஜிக்கப்பட்டவள்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ விரும்பியவற்றை அளிப்பவள், அப்படிப்பட்ட மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

6. ஷட் சக்ரோபரி நாதபிந்து நிலயாம்
ஸர்வேச்வரீம் ஸர்வகாம்
ஷட் சாஸ்த்ராகம வேத வேதி தகுணாம்
ஷட்கோண ஸம்வாஸினீம்
ஷட்காலேன ஸமர்ச்சிதாத்ம விபவாம்
ஷட்வர்க ஸம்சேதினீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : அறுகோண சக்கரத்தின் மீது நாத பிந்துவில் இருப்பவள், அனைவருக்கும் ஈஸ்வரி, எங்கும் இருப்பவள், ஆறு சாஸ்திரங்கள், நான்கு வேதங்கள் - ஆகமங்களால் அறியப்பட்ட குணங்களை உடையவள், ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்டவள், காம-குரோத-லோப-மோக-மத-மாத்ஸர்யம் எனும் ஆறு பகைவர்களை அழிப்பவள், விரும்பியவற்றை அளிக்கும் மங்களகரமான அந்த கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

7. யோகா னந்த கரீம் ஜகத்ஸுககரீம்
யோகீந்த்ர சித்தாலயாம்
ஏகாமீச ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
ஏகாந்த ஸஞ்சாரிணீம்
வாகீசாம், விதி, விஷ்ணு, சம்பு, வரதாம்
விச்வேச்வரீம் வைணிகீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : தியான யோகத்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவள், உலகிற்குச் சுகத்தை அளிப்பவள், யோகிகளின் மனதைக் கோவிலாகக் கொண்டவள், அத்விதீயாக இருப்பவள், பரமசிவனுக்குச் சுகத்தை அளிப்பவள், பிரளய காலத்தில் தனித்து நிற்பவள், வாக்கிற்கு ஈஸ்வரி. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு வரங்களை அளிப்பவள்
 உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.

8. போதானந்த மயீம் புதைரபி நுதாம்
மோத ப்ரதா மம்பி காம்
ஸ்ரீமத் வேத புரீச தாஸவினுதாம்
ஹ்ரீங்கார ஸந்தாலயாம்
பேதாபேத விவர்ஜிதாம் பஹுவிதாம்
வேதாந்த சூடாமணீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

#பொருள் : ஞானானந்த ஸ்வரூபிணி, சான்றோர்களால் துதிக்கப்பட்டவள், சந்தோஷத்தை அளிப்பவள், அம்பிகை, வேதபுரீச தாசரால் துதிக்கப்பட்டவள், ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜ மந்திரத்தைக் கோவிலாகக் கொண்டவள்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ வேறுபட்டது - வேறுபடாதது என்ற இரண்டற்றவள், பலவித வடிவினள், வேதாந்தங்களுக்கு மணிமகுடமாக இருப்பவள் விரும்பியதை அளிக்கும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

9. இத்தம் ஸ்ரீகமலாம்பி காப்ரியகரம்
ஸ்தோத்ரம் படேத் யஸ்ஸதா
புத்ர ஸ்ரீப்ரத மஷ்டஸித்தி பலதம்
சிந்தா வினாசாஸ்பதம்
ஏதி ப்ரஹ்மபதம் நிஜம் நிருபமம்
நிஷ்கல்மஷம் நிஷ்களம்
யோகீந்த்ரை ரபி துர்லபம்
புனரயம் சிந்தா வினாசம் பரம்.

#பொருள் : குழந்தைச் செல்வம் மற்றும் எல்லாச் செல்வங்களையும், எட்டு சித்திகளின் பயனையும் அளித்து கவலைகளைப் போக்கும் கமலாம்பிகைக்குப் பிரியமான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ அவர்கள், இணையற்ற உருவமற்ற களங்கமற்ற, சிறந்த யோகிகளுக்கும் எட்டாத மேலான பிரம்மபதத்தை அடைவார்கள்.

சியாமளா_தண்டகம்_ஸ்லோகம்

#கல்வியில்_சிறந்து_விளங்கச்_செய்யும்_சியாமளா_தண்டகம்_ஸ்லோகம்

#அபூர்வ_ஸ்லோகம்

மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம், #சியாமளா_தண்டகம். தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம்.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும்
பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும்,
நீல மணியின் ஒளியுடன் கூடியhttps://www.facebook.com/groups/Divinity.Power/
அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி
வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில்
தியானம் செய்கிறேன்.

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும், நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப https://www.facebook.com/groups/Divinity.Power/
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியேஉலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன். நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே, சங்கீதத்தில் பிரியமுடையவளே, செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே, ஹே மாதங்கி! எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக. (கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).

ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த
ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட
பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப
காதம்ப காந்தார வாஸப்ரியே,
க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!

அம்ருதம் எனும் கடலின் மத்தியில்,
மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ
மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் கற்பக
விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே!
யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே,
அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே.

ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல
நீபஸ்ரகாபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீநத்த
ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக
ஸம்பாவிதே!

நீ பாடத்துவங்கி அந்த ஸங்கீத ரஸத்தில் திளைத்திருக்கும் தருணத்தில் உனது முதுகெலும்பின் அடிப்பாகம் வரை நீண்ட கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப புஷ்ப கொத்துக்கள் அசைந்தாடுவதே தனி அழகு. ஹே! ஹிமவானின் புதல்வியே! நீ சிரஸில் ஆபரணமாக அணிந்த சந்திர கலையின் கிரணங்களால் சூழப்பட்ட சுருள் சுருளான கருங்கூந்தல்களுடன் மிளிர்பவளே, சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுபவளே!

காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்ப https://www.facebook.com/groups/Divinity.Power/
ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே
சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே
ஸூராமே ரமே

காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனு ப்ரமைக்குரித்தானவளே, அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே! கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே! மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!

ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா
சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்
தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த
ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸூஸ்வரே பாஸ்வரே.

ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும், கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே. வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்
குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே, மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே.
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த
தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.

திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலாலஸச் சக்ஷு
ஜராந்தோலன ஸமாக்ஷிப்த கர்ணைக https://www.facebook.com/groups/Divinity.Power/
நீலோத்பலே, ச்யாமலே
பூரிதா சேஷலோகாபிவாஞ்
சாபலே நிர்மலே.

சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே, நீலநிறத் திருமேனியுடையவளே. லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே, பரிசுத்தமானவளே! ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.
ஸ்வேத பிந்தூல்லஸத்பால லாவண்ய நிஷ்யந்த

ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே
ஸர்வ மந்த்ராத்மிகே. ஸர்வ விச்வாத்மிகேகாளிகே
முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக 
கற்பூரதாம்பூல கண்டோத்கரே ! ஞானமுத்ராகரே,
ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, கரே !

நெற்றியில் காணும் வியர்வைத் துளிகளின் கூட்டமோ என்று பராமரிக்கக்கூடிய சோபை மிகுந்த புல்லாக்கு ஆபரணம் அணிந்தவளே! மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே! வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே, ஞானமே சின்னமாய் உடையவளே, சம்பத்துகள் அருள்பவளே, கையில் எழில் மிகுந்த தாமரை புஷ்பம் ஏந்தியவளே!

குந்த புஷ்பத்யுதி ஸ்நிக்த தந்தாவலீ
நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர 
சோபாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரேhttps://www.facebook.com/groups/Divinity.Power/
முல்லை புஷ்பம் போல் சோபையுள்ள பல்வரிசைகளின் ப்ரகாசத்துடன்
 கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே.

ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோத  யோத்வேல லாவண்ய
துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா

ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
துவங்கும் யௌவனத்தின் சந்த்ரோதயம் போன்று சோபையுடன் கூடிய பாற்கடலிலிருந்து வெளிப்படும் சங்கின் அழகையும் மிஞ்சும் கழுத்து உடையவளே, நளின நடையுடையவளே! சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே, மங்கள ஸ்வரூபிணியே!
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே:

விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத்
கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
ரத்னங்களை இழைத்த வங்கியின் ஒளிக்கிரணங்களால் சோபிக்கின்ற தோள்களுடன் விளங்குபவளே, யோகிகளால் வணங்கப்படுபவளே! திசைகளெல்லாம் ஒளிர்ப்பிக்கும் ப்ரகாசம் உடைய கங்கணத்தால் அலங்கரிக்கப்பட்டவளே, உபாஸகர்களால் பூஜிக்கப்படுபவளே!

வாஸராரம்பவேலா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த
ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம
ஸந்த்யாய மானாங்குலீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ)
கண்டலே,
சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே சூர்யோதயத்தில் மலர்ந்த தாமரை

புஷ்பத்திற்கு ஒப்பான கைகளையுடையவளே, எப்பொழுதும் பெருக்கெடுக்கும் தயையுடையவளே, இரண்டற்று ஒன்றேயானவளே, கைகளை அலங்கரிக்கும் ரத்ன மோதிரங்களின் ஒளியில் சாயங்கால சிவந்த வானம் போன்றதில், நகம் எனும் சந்திரனைப் போல் ப்ரகாசமுடைய தளிர் விரல்களுடையவளே, ஞானமாகிற ஒளி
யினால் சூழப்பட்டவளே, ஒளிரும் குண்டலங்கள் பூண்டவளே.

தாரகா ராஜிநீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ https://www.facebook.com/groups/Divinity.Power/
வலிச்சேத விஸீஸ முல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே, கிங்கர  கரே
ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோப பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே
லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே,

 மஞ்ஜூ ஸம்பாஷணே
நட்சத்திர மண்டலத்திற்கு ஒப்பான
ப்ரகாசமான முத்து மாலைகளின் வரிசை
யினால் சோபையூட்டப்பட்ட உயர்ந்த பரந்த மார்பகத்தின் பாரத்தினால் சிறிது மடிந்து வளைந்த இடையுள்ளவளே! கடல் போன்ற ஸௌந்தர்யங்களை உடையவளே, கைகளில் வீணை ஏந்தியவளும், குபேரனால் வணங்கப்படுபவளும் ஆனவளே! தங்கக்குடத்திற்கு ஒப்பான மார்பின் பாரத்தினால் வணங்கினவளே, மூன்று லோகங்களாலும் பூஜிக்கப்படுபவளே, இனிய பேச்சுடையவளே.

சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே
பத்ம ராகோல்லஸத் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே,சந்த்ரிகா சீதலே.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு
கச்சன்ன சாரு சோபா பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர
மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்கலே ச்யாமளே.

மன்மதனின் வில்லின் நாணுக்கு ஒப்பான சலங்கை பொருந்திய அரை ஞாண் பூண்டவளே, ஜரிகை வஸ்த்ரம் அணிந்தவளே. பத்மராகக் கல்லினால் இழைத்த ஒட்டியாணத்தின் சோபையுடன் கூடிய இடையுடையவளே, பவுர்ணமி நிலவு போன்று குளிர்ந்தவளே. மலர்ந்த பலாச புஷ்பம் போல் சிவப்பு நிறப் புடவையினால் மூடப்பட்ட துடைகளின் ப்ரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தூரத்தினால் சிவந்த ஐராவதத்தின் துதிக்கை போன்று கையை உடையவளே, எல்லையற்ற வைபவங்களுடன் கூடியவளே, இந்திரநீல போன்ற நிறம் உடையவளே.

கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸிதானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தல ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ
ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்கhttps://www.facebook.com/groups/Divinity.Power/ ஸாரங்கஸம்யோகரிங்க்கந்ந கேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.நிர்மலே!

அழகிய மென்மையான நீலத்தாமரை புஷ்பத்தினாலான மன்மதனின் அம்புறாத் தூணியோ என்றெண்ணக் கூடிய கொடி போன்ற கணுக்கால்களை உடையவளே, அழகிய விளையாடும் நடையுடையவளே. அடிபணியும் திக்பாலக ஸ்த்ரீகளின் சுருளான கருங்கூந்தல் கூட்டத்தின் நீலநிற சோபையினால், மானுடன் சம்பந்தம் சொல்லக்கூடிய அறுகம்புல் தளிர்களா அவை என்றெண்ணும்படியான, நகம் எனும்
சந்திரன் போன்ற மிகையான ப்ரகாசத்துடன் விளங்குபவளே.

ப்ரஹ்வ தேவேச, பூதேச வாணீச கீநாச
தைத்யேச, யக்ஷேச, வாகீச, வாணேச, https://www.facebook.com/groups/Divinity.Power/
கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலாதபோத் தாமலாக்ஷவர
ஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.

ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே,
ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே,
சங்க்க பத்மத்வயோபாச்ரிதே வணங்குகின்ற இந்திரன், விஷ்ணு,
சிவன், யமன், வருணன், குபேரன், ப்ரஹ்மா,

நிருருதி, வாயு, அக்னி, இவர்களுடைய கிரீடத்திலுள்ள மாணிக்க மணிகளின் ஒளியால் இளம் வெய்யில் போல் சிவந்ததும், தாமரை மலர்https://www.facebook.com/groups/Divinity.Power/ போன்றதுமான பாதங்களை உடையவளே, உமாதேவியே! நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகிய சிறந்த ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளே, அழிவற்றவளே. ரத்னம் போன்ற தாமரையில் ரத்ன
ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து, சங்கு, தாமரை இரண்டாலும் சேவிக்கப்படுபவளே.
தத்ரவிக்னேச துர்க்கா, வடுக்ஷேத்ர பாலையுதே
மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே,
மஞ்ஜூளாமேனகாத்யங்க நாமானிதே,

பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே தேவி
வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே,
சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி
சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே !https://www.facebook.com/groups/Divinity.Power/
பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங் கனா மண்டலை ரர்ச்சிதே

விநாயகர், துர்க்கை, ப்ரம்மச்சர்யம் பூண்ட பிரம்ம தேவதைகள், க்ஷேத்ரபாலன் இவர்களுடன் கூடியவளே. ஆனந்தத்தில் திளைக்கும், மதங்க முனிவரின் புதல்விகளால் சூழப்பட்டவளே. மஞ்ஜுளா, மேனகா முதலிய அப்ஸர ஸ்தீரிகளால் போற்றப்படுபவளே, எட்டு பைரவர்கள் எனும் தேவர்களால் சூழப்பட்டவளே. பூமி, லக்ஷ்மி முதலிய எட்டு சக்திகளுடன் கூடியவளே. ப்ராம்ஹீ முதலிய மாத்ருக்கள் எனும் எழுவரால் அலங்கரிக்கப்பட்டவளே. யக்ஷர், கந்தர்வர், ஸித்தர் இவர்களின்
ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுபவளே.

பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யாச
ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாபிநந்திதேhttps://www.facebook.com/groups/Divinity.Power/
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே,
யோகினாம் மானஸே, த்யோதஸே,

சந்தஸாமோஜஸா ப்ராஜஸே
கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன
க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே
பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே,
விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர்கீயஸே

மன்மதனைப் போன்று மயங்க வைக்கும் ரூபலாவண்யம் உடையவளே, மன்மதன் ரதிதேவி இவர்களாலும் பூஜிக்கப்படுபவளே, ப்ரியமுள்ளhttps://www.facebook.com/groups/Divinity.Power/ வஸந்தருதுவினால் சந்தோஷப்படுத்தப்படுபவளே, பக்தியுள்ளோருக்கு மோக்ஷமும் அனுக்ரஹமும் செய்கிறாய். யோகிகளின் மனதில் ப்ரகாசிக்கிறாய். வேதங்களின் ஸாரத்தில் உறைந்திருக்கிறாய். ஸங்கீத ரஸானுபவத்தில் ப்ரியமுள்ள க்ருஷ்ணனால் பூஜிக்கப்படுகிறாய். பக்தி ஆவேசம் உடைய பிரம்மாவால் பூஜிக்கப்
படுகிறாய். மனதைக் கவரும் வீணை முதலிய வாத்யங்களிசைக்கும் வித்யாதரர்களால் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறாய்.

ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்ச்சா வதூ
பீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு
காதா ஸமுச்சாடனம்
கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம்
ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகாபம் சுகம் லாலயந்தீ
 பரிக்ரீடஸே.

செவிகளுக்கு இனிய நாதமுடைய வீணையினால் கின்னர்களால் பாடப்படுகிறாய். யக்ஷ, கந்தர்வ, ஸித்தர்களின் ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். இஷ்ட ஸித்திகளில் விருப்பங்கொண்ட தேவஸ்த்ரீகளால் பூஜிக்கப்படுகிறாய். சகல வித்யைகளின் ஸாரமுடைய இனிமையான ஸ்லோகங்களை மொழிகின்றதும், கழுத்தின் அடிப்பாகத்தில் மூன்று வர்ணக் கோடுகளையுடையதும், அழகிய பச்சை நிற இறக்கைகள் உடையதும், புரச மொட்டின் நேர்த்தியை எஞ்சுகிற அழகுடன் கூடிய மூக்குடையதும் ஆன கிளியுடன் விளையாடிக் களிக்கிறாய்.

பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபிஸ்ப்பாடிகீம்
ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம்சாங்குசம்
பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே  தஸ்ய
வக்த்வரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.https://www.facebook.com/groups/Divinity.Power/
யேன வாயா வகாபாக்ருதிர்
பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா:

யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம்த்யாயத:

தாமரை போன்று அழகிய இரு கைகளில் ஞானத்தின் சாரமாகிய புஸ்தகத்தையும், ஸ்படிகமணி ஜப மாலையையும் தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே, உன்னை த்யானிப்போர் நாவின் மூலம் உரைநடை, செய்யுள் வடிவான வாக்சாதுர்யம் தானே வெளிப்படுகிறது. சிவந்த மேனியளாய் உன்னை த்யான செய்பவர்களுக்கு ஸ்த்ரீ புருஷர்கள் வசப்படுகிறார்கள். ஐஸ்வர்ய ரூபியாக உன்னை த்யானிப்பவர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்கிறாய். சந்த்ர கலையை சிரசில் அணிந்த உனது அழகு பொழிந்த நீல வர்ண சரீரத்தை மனதில் வைத்து த்யானம்

செய்பவருக்கு எதுதான் கிட்டாது. https://www.facebook.com/groups/Divinity.Power/
தஸ்ய லீலாஸரோவாரித:
தஸ்ய கேளீவனம் நந்தனம்
தஸ்ய பத்ராஸனம் பூதலம்,
தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ,
தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்
மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே,

ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே,
ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே,
ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே,
ஸர்வவிச்வாத்மிகே,
ஸர்வ தீக்ஷவத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே,
ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம்,

பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:

சமுத்திரம் (ஸம்சார) அவருக்கு விளையாட்டாக கடக்க முடிகிறது. தேவலோக நந்தவனம் அவருக்கு விளையாட்டிடம் ஆகிறது. பூமி ஸிம்ஹானமாகிறது. சரஸ்வதியும்https://www.facebook.com/groups/Divinity.Power/ பணிப்பெண்ணாகிறாள். அவர்க்கு ஐஸ்வர்யலக்ஷ்மீ பணிந்து செயல்படுகிறாள். சகல தீர்த்தங்களின் வடிவானவளே, சகல மந்த்ர ஸ்வரூபிணியே, சகல சாஸ்த்ர ரூபிணியே, மந்த்ர ரூபமான உபாஸனா யந்த்ரங்களில் உறைபவளே!

எல்லா ஜ்யோதிஷ்சக்கரங்கள், சக்திகளுக்கும் இருப்பிடமானவளே, எல்லா தேவதா ஸ்தானங்களின் வடிவானவளே, எல்லா தத்வார்த்தங்களுக்கும் உறைவிடமே, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமானவளே, யோகம் முதலிய சகல உபாஸனை சாதனைகளுக்கும் இருப்பிடமானவளே, சகல சப்த ரூபங்களுக்கும் உறைவிடமே, அக்ஷரங்களின் ஸ்வரூபிணியே, யக்ஞம் முதலிய உபாசனா தீக்ஷைகளில் உறைபவளே, எங்கும் வ்யாபித்த அத்வைத வடிவினளே, ஹே உலகங்களின் தாயே! என்னை காப்பாற்று, என்னைக் காப்பாற்று, என்னைக்காப்பாற்று, உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள், உனக்கு என் நமஸ்காரங்கள்.

Thursday, 19 July 2018

🍀#ஸ்ரீ #நாமராமாயணம்🍀

🍀#ஸ்ரீ #நாமராமாயணம்🍀
-
ஓம் ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதஸத்ருக்ந ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமச்சந்த்ரபரப்ரஹ்மனே நம:
-
🍀#பாலகாண்டம்🍀
1 .ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
2 .காலாத் மக பரமேஸ்வர ராம்
3 .ஸேஷ தல்ப ஸுக நித்ரித ராம்
4. ப்ரஹ்மாத் யமரப் ரார்த்தித ராம்
5. சண்டகிரண குலமண்டந ராம்
6. ஸ்ரீமத் தஸரத நந்தந ராம்
7. கௌஸல்யா ஸுகவர்த்தந ராம்
8. விஸ்வாமித்ர ப்ரியதந ராம்
9.கோர தாடகா காதக ராம்
10. மாரீசாதிநி பாதக ராம்
11. கௌஸிகமக ஸம்ரக்ஷக ராம்
12. ஸ்ரீ மதஹல்யோத்தாரக ராம்
13. கௌதம முனி ஸம் பூஜித ராம்
14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம்
15. நாவி கதா விதம் ம்ருது பத ராம்
16. மிதிலா புர ஜன மோஹக ராம்
17. விதேஹ மாநஸ ரஞ்ஜக ராம்
18.த்ர்யம்பக கார்முக பஞ்ஜக ராம்
19.ஸீதார்ப்பித வரமாலிக ராம்
20.க்ருதவை வாஹிக கௌதுக ராம்
21. பார்க்கவ தர்ப்ப விநாஸக ராம்
22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்


🍀#அயோத்யா #காண்டம்🍀
23. அகணித குணகண பூஷித ராம்
24. அவநீத நயா காமித ராம்
25. ராகா சந்த்ர ஸமாநந ராம்
26. பித்ரு வாக்யா ஸ்ரித காநந ராம்
27. ப்ரிய குஹ விநி வேதிதபத ராம்
28. தத்க்ஷாலித நிஜ ம்ருது பத ராம்
29. பரத்வாஜ முகா நந்தக ராம்
30. சித்ரா கூடாத்ரி நிகேதந ராம்
31. தஸரத ஸந்தத சிந்தித ராம்
32. கைகேயீ தந யார்த்தித ராம்
33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம்
34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
-

🍀#ஆரண்ய #காண்டம்🍀
35. தண்டகா வந ஜந பாவந ராம்
36. துஷ்ட விராத விநாஸத ராம்
37. ஸரபங்க ஸுதீக்ஷ்ணார்ச்சித ராம்
38. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்
39. க்ருத்ராதி பஸம் ஸேவித ராம்
40. பஞ்சவடி தட ஸுஸ்தித ராம்
41. ஸுர்ப்பண கார்த்தி விதாயக ராம்
42. கரதூ ஷணமுக ஸூதக ராம்
43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம்
44. மாரீசார்த்திக் ருதாஸுக ராம்
45. விநஷ்ட ஸீதாந் வேஷக ராம்
46. க்ருத்ராதி பகதி தாயக ராம்
47. ஸபரி தத்த பலாஸந ராம்
48. கபந்த பாஹூச் சேதந ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
-
🍀#கிஷ்கிந்தா #காண்டம்🍀
49.ஹனுமத் ஸேவித நிஜபத ராம்
50.நத ஸுக்ரீவா பீஷ்டத ராம்
51.கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
52.வானர தூத ப்ரேஷக ராம்
53.ஹிதகர லக்ஷ்மண ஸம்யூத ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
-
🍀#ஸுந்தர #காண்டம்🍀
54. கபிவர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம்
55. தத்கதி விக்னத் வம்ஸக ராம்
56. ஸீதா ப்ராணா தாரக ராம்
57. துஷ்டத ஸாதந தூஷித ராம்
58. ஸிஷ்ட ஹநூமத் பூஷித ராம்
59. ஸீதா வேதித காகாவந ராம்
60. க்ரூத சூடாமணி தர்ஸந ராம்
61. கபிவர வஸநா ஸ்வாஸித ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
-
🍀#யுத்த #காண்டம்🍀
62. ராவண நிதநப் ரஸ்தித ராம்
63. வாநர சைன்ய ஸமாவ்ரூத ராம்
64. ஸோஷித ஸரீதி ஸார்த்தித ராம்
65. விபீஷணா பயதாயக ராம்
66. பர்வத ஸேது நிபந்தக ராம்
67. கும்பகர்ண ஸிரஸ் சேதக ராம்
68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
69. அஹி மஹி ராவண சாரண ராம்
70. ஸம்ஹ்ரூத தஸமுக ராவண ராம்
71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம்
72. கஸ்தித தஸரத வீக்ஷித ராம்
73. ஸீதா தர்ஸந மோதித ராம்
74. அபிஷிக்த விபீஷண நத ராம்
75. புஷ்பக யாநா ரோஹண ராம்
76. பரத்வா ஜாபி நிஷேவண ராம்
77. பரத ப்ராண ப்ரியகர ராம்
78. ஸாகே தபுரீ பூஷண ராம்
79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம்
80. ரத்நல ஸத்பீடா ஸ்தித ராம்
81. பட்டாபிஷேகா லங்க்ருத ராம்
82. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
83. விபீஷணார்ப் பித ரங்கக ராம்
84. கீஸகுலா நுக்ரஹ கர ராம்
85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்
86. ஸமஸ்த லோகா தாரக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
-
🍀#உத்தர #காண்டம்🍀
87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம்
88. விஸ்ரூத தஸகண்டோத் பவ ராம்
89. ஸீதாலிங்கந நிர்வ்ரூத ராம்
90. நீதி ஸுரக்ஷித ஜநபத ராம்
91. விபிநத் யாஜித ஜநகஜ ராம்
92. காரித லவணா ஸுரவத ராம்
93. ஸ்வர்க்க தஸம்புக ஸம்ஸ்துத ராம்
94. ஸ்வதநய குஸ லவ நந்தித ராம்
95. அஸ்வமேதக்ரது தீக்ஷித ராம்
96. காலா வேதித ஸுரபதி ராம்
97. அயோத்யக ஜந முக்தித ராம்
98. விதிமுக விபுதா நந்தக ராம்
99. தேஜோமய நிஜ ரூபக ராம்
100. ஸம்ஸ்ரூதி பந்த விமோசக ராம்
101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
102. பக்தி பராயண முக்தித ராம்
103. ஸர்வ சராசர பாலக ராம்
104. ஸர்வ பவாமய வாரக ராம்
105. வைகுண்டாலய ஸம்ஸ்தித ராம்
106. நித்யாநந்த பத ஸ்தித ராம்

107. ராம ராம ஜெய ராஜா ராம்
108. ராம ராம ஜெய ஸீதா ராம்

🍀// இதி ஸ்ரீ நாம ராமாயணம் ஸம்பூர்ணம் //🍀
-
🍀#தொகுப்பு :  #திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀

Wednesday, 18 July 2018

ஸ்ரீ நிவாசா கோவிந்தா


ஏடு கொண்டல வாடா...
வேங்கட ரமணா...
கோவிந்தா கோவிந்தா....

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேக சியாமா கோவிந்தா
புராண புருஷ கோவிந்தா
புண்டரீகாட்சா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோரா கோவிந்தா
பசுபாலக ஸ்ரீ கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

துஷ்ட சம்ஹாரா கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரி பாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

வஜ்ர மகுட தாரா கோவிந்தா
வராக மூர்த்தி கோவிந்தா
கோபி ஜன லோல கோவிந்தா
கோவர்த்தன உத்தர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரியா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

மச்ச கூர்ம கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன பரசுராம கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

பலராமா அனுஜ கோவிந்தா
பெளத்த கல்கி தர கோவிந்தா
வேணுகான ப்ரியா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

சீதா நாயக கோவிந்தா
ஸ்ரீதா பரி பாலக கோவிந்தா
தரித்ர ஜன போஷக கோவிந்தா
தர்ம சம்ஸ்தாபக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்சல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

கமலா தளாக்ஷ கோவிந்தா
கமிதா பலதாத கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

பத்மாவதிப் ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபய ஹஸ்த ப்ரதர்சன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

சங்க சக்ர தர கோவிந்தா
சாரங்க கதா தர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்த்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

சகஸ்ர நாமா கோவிந்தா
சரசிஜ நயனா கோவிந்தா
லட்சுமி வல்லப கோவிந்தா
லட்சுமணக்ரஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனா அம்பரதர கோவிந்தா
கருட வாகனா கோவிந்தா
கான லோலா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

வானர சேவித கோவிந்தா
வாராதி பந்தன கோவிந்தா
ஏக சொருபா கோவிந்தா
சப்த கிரீசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

ஸ்ரீ ராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யட்ச தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

வஜ்ர கவச தர கோவிந்தா
வைபவ மூர்த்தி கோவிந்தா
ரத்ன கிரீட கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

பரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜ நாபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த தரகித கோவிந்தா
இக பர தயகா கோவிந்தா
இபராஜ ரட்சகா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா...
வேங்கடரமணா கோவிந்தா

சேஷ சாயினே கோவிந்தா
சேஷாத்ரி நிலையா கோவிந்தா
ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா...

#ஓம்நமோநாராயணாய
#OmNamoNarayanaya

ஸ்ரீமஹாலக்ஷ்மி அஷ்டகம் : -

ஸ்ரீமஹாலக்ஷ்மி அஷ்டகம் : -

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா ... !!!

Wednesday, 4 July 2018

சிவ புஜங்கம்

     

சிவ புஜங்கம்

 1 கலத்தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம் சலச்சாருசுண்டம் ஜகத்ராண சௌண்டம்! கன்த்தந்த காண்டம் விபத்பங்க சண்டம் சிவப்ரேம பிண்டம் பஜே வக்ரதசிவ புஜங்கம்

1.கலத்தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்

சலச்சாருசுண்டம் ஜகத்ராண சௌண்டம்!

கன்த்தந்த காண்டம் விபத்பங்க சண்டம்

சிவப்ரேம பிண்டம் பஜே வக்ரதுண்டம்!!

மதஜலம் பெருகி ஒடுவதால் கூட்டம் கூட்டமாக நாடிவரும் தேனிக்கள் குழுமிய தாடைகளும், அசைந்தாடும் துதிக்கையும், உலகத்தைக் காக்கத் துடிக்கும் வீறும், பளபளக்கும் கொம்புகளும், விபத்துக்களை ஒடுக்குவதில் துடிப்பும், சிவா-சிவன் இவ்விருவரின் அன்புக்கலவையாயும் அமைந்த வக்ரதுண்டரை சேவிக்கிறேன்.

2.அநாத்யந்த மாத்யம் பரம் த்தவமார்தம்

சிதாகாரமேகம் துரீயம் த்வமேயம்!

ஹரிப்ரஹ்மம்ருக்யம் பரப்ரஹ்மரூபம்

மநோவாகதீதம் மஹ:சைவமீடே!!

முதலும் முடிவுமில்லாதவர், முதன்மையானவர், தத்வப்பொருளானவர், ஞானவடிவானவர், அளவுக்கு எட்டாதவர், துரீயமானவர், ஹரியும் பிரம்மாவும் தேடும் பரப்ரஹ்மமேயானவர், மனம், வாக்கு இவற்றிற்கு அப்பாற்பட்டதுமான சிவஜ்யோதியை துதிக்கிறேன்.

3.ஸ்வசக்த்யாதிசக்த்யந்த ஸிம்ஹாஸநஸ்தம்

மநோஹாரி ஸ்ர்வாங்க ரத்னோரு பூஷம்!

ஜடாஹீந்து கங்காஸ்திசம்யாக மௌலீம்

பராசக்தி மித்ரம் நும்:பஞ்சவர்த்ரம்!!

தனது சக்தியில் தொடங்கி ஆதிசக்தியில் முடியும் சிம்மாஸனத்தில் அமர்ந்து, அழகிய உடம்பு முழுதும் ரத்னாங்கிபூண்டவரும், ஜடை ஸர்ப்பம், சந்த்ரன், கங்கை, சம்யாகம் இவற்றை தலையில் கொண்டவரும், பராசக்தி துணைவருமாகிய பஞ்சமுக சிவனை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

4.சிவேசாஸ தத்பூருஷாகோர வாமா

திபி:பஞ்சபிர்ஹ்ருந்முகை:ஷட்பிரங்கை:

அனௌபம்ய ஷட்த்ரிம்சதம் தத்வவித்யா

மதீதம் பரம் த்வாம் கதம் வேத்தி கோவா!!

சிவன், ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன் ஆகிய ஐந்து முகங்களுடனும், ஆறு அங்கங்களுடனும், இணையில்லாத முப்பத்தாறுதத்வங்களுக்கு அப்பால் உள்ள பரம் பொருளாகிய தங்களை யார் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

5. ப்ரவால ப்ரவாஹ ப்ரபாசோணமர்தம்

மருத்வன் மணி ஸ்ரீமஹ:ச்யாமமர்தம்!

குணஸ்யூதமேதத் வபு:சேவ மந்த

ஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்தி ஹேதோ: !!

பவழம் போன்று சிவப்பான ஒரு பகுதியும், இந்திர நீலம் போன்று கருநீலமான மற்றொரு பகுதியும், குணம் என்ற ஒரே கயிறு மூலம் இணைக்கப்பட்ட சிவஸ்வரூபத்தை காம விகாரமழிய தியானம் செய்கிறேன்.

6. ஸ்வஸேவாஸமாயாத தேவாஸுரேந்த்ரா

நமந்மௌலி மந்தாரமாலா பிஷக்தம்!

நமஸ்யாமி சம்போ!பதாம்போருஹம் தே

பவாம்போதி போதம் பவானீ விபாவ்யம்!!

ஹேசம் போ!சம்ஸாரக் கடலைக்கடத்திவிடும் படகு போன்ற தங்களது திருவடித்தாமரையை நமஸ்கரிக்கிறேன் அது, தங்களை ஸேவிக்க வந்த தேவாஸுரர்களின் தலைகளிலுள்ள மந்தாரமலர்கள் படிந்து, பவானீ தேவி காணத்தக்கதாய் மிளிர்கிறது.

7.ஜகந்நாத!மந்நாத!கௌரீஸநாத!

ப்ரபன்னானுகம்பிந் விபந்நார்திஹாரிந்!

மஹ:ஸ்தோம மூர்த்தே ஸமஸ்தைகபந்தோ!

நமஸ்தே நமஸ்தே புனஸ்தே நமோஸ்து II

உலகத்தையும் என்னையும் காத்தருளும் கௌரீமணாளனே!சரணமடைந்தோரை இரக்கமுடன் காப்பவரே!தீதுற்றோர் துன்பம் துடைப்பவரே!ஜ்யோதிருபங்கொண்டவரே!உலகின் ஒரே பந்துவான உமக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

8.விரூபாக்ஷ!ஸிச்வேச!விச்வாதிதேவ!

த்ரயீமூல சம்போ சிவத்ர்யம்பக த்வம்!

ப்ரஸீத!ஸ்மர, த்ராஹி பச்யாவமுக்த்யை

க்ஷமாம் ப்ராப்னுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத் II

விரூபாக்ஷ, விச்வேச்!தேவாதிதேவ!வேதமூலனே!சம்போ, சிவ, திரியம்பக, அருள் பாலிப் பீராக!மறவாமல் காப்பாற்றுவீராக!மோக்ஷமளித்து, என்னை காத்தருள பெருமை கொள்வீராக!

9. மஹாதேவ!தேவேச!தேவாதிதேவ!

ஸ்மராரே!புராரே!யமாரே!ஹரேதி!

ப்ருவாண:ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்த

ததோ மே தயாசீல தேவ ப்ரஸீத II

மஹாதேவா!தேவேச!தேவாதிதேவ!ஸ்மராரியே!புராரியே!யமாரியே!ஹரனே என்று பக்தியுடன் உம்மை தியானிக்கிறேன். தயை காட்ட வேண்டுமே!எனக்காக அருள வேண்டுமே!

10. த்வதந்ய:சரண்ய:ப்ரபன்னஸ்ய நேதி

ப்ரஸீத ஸ்மரந்நேவ ஹந்யாஸ்து தைந்யம் !

நசேத் தே பவேத் பக்தவாத்ஸல்யஹாநி:

ததோ மே தயாலோ ஸதா ஸந்நிதேஹி II

சரணமடைந்தவருக்கு தாங்களன்றி வேறு காப்போரில்லை என்று எண்ணி, அருளன்போடு எனது ஏழ்மையைப் போக்கிவிடுங்கள். இல்லையெனில் பக்தனுக்கு அன்பன் என்ற பெயர் தீதுறுமே. அதனால், ஹேதயாபரனே!என்முன்னே தோன்றுவீராக!

11. அயம் தாநகலஸ்த்வஹம் தாநபாத்ரம்

பவாநேவ தாதா;த்வதந்யம் நயாசே!

பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்

க்ருபாசீல சம்போ!க்ரிதார் தோஸ்மி தம்மாத்மிமி

ஹேக்ருபாலா!சம்போ!இதுவே கொடுப்பதற்கு நல்ல நேரம்;நானே கொடுப்பதை ஏற்கத்தகுந்தவன். தாங்களே கொடுப்பவர். தங்களையன்றி வேறு எவரையும் வேண்டேன். உம்மிடம் ஸ்திரமான பக்தியை எனக்கு வழங்கவேண்டும். அதனால்தான் பெருமிதம் அடைவேன்.

12. பசும் வேத்ஸி சேந்மாம், தமேவாதிரூட:

கலங்கீதி வா மூர்த்னி தத்ஸேதமேவமி

த்விஜிஹ்வ:புவ:ஸோபிதே கண்டபூஷா

த்வதங்கீக்ருதா:சர்வ!ஸர்வேsபிதந்யா: II

என்னை பசு என்று (அலக்ஷ்யமாக) எண்ணுவீராகில் அதன்மீது தானே தாங்கள் பயணிக்கிறீர்கள். களங்கம் உள்ளவன் என்றால், அவனைத்தானே தலையில் தாங்குகிறார்கள். இரண்டு நாக்கன் என்றாலோ, அவனும் தானே தங்கள் கழுத்தில் ஆபரணமாகிறான். இப்படி தாங்கள் ஏற்றதால் அவர்களெல்லாம் புண்யசாலிகள் ஆகவில்லையா?

13. ந சக்நோமி பரத்ரோஹலேசம்

கதம் ப்ரீயஸே த்வம் ந ஜாநே கிரிச!

ததாஹி ப்ரஸந்நோஸி கஸ்யாபி காந்தா

ஸுத் த்ரோஹிணோ வா பித்ருத்ரோஹிணோவா II

சிறிதேனும் பிறருக்கு தீங்கு செய்வதறியேன். ஆனால் த்ரோஹம் செய்தவர் பாலும் தாங்கள் அன்பு கொண்டது எப்படியோ தெரியவில்லை. ஒரிருவர் அப்படித் த்ரோஹம் செய்தும் தங்கள் அன்புக்குப் பாத்திரமாகவில்லையா?

14. ஸ்துதிம் த்யானமர்ச்சாம் யதாவத்விதாதும்

பஜன்அப்யஜானன் மஹேசாவலம்பே !

த்ரஸந்தம் ஸுதம் த்ராதுமக்ரே ம்ருகண்டோ:

யமப்ராண நிர்வாபணம் த்வத்பதாப்ஜம் II

எனக்கு ஸ்தோத்திரம், தியானம், பூஜை ஆகியவற்றை முறையாகச் செய்யத் தெரியாது. ஆனால், மருண்ட ம்ருகண்டு வின்பிள்ளையைக் காக்கவேண்டி யமன் உயிரையே மாய்த்த தங்களது திருவடியை அறியாமலேயே பற்றியுள்ளேன்.

15. சிரோத்ருஷ்டி - ஹ்ருத்ரோக - சூலப்ரமேஹ-

ஜ்வரார்சோ - ஜரா - யக்ஷ்ம - ஹிக்கா - விஷார்த்தான்

த்வமாத்யோ பிஷக், பேஷஜம் பஸ்ம சம்போ !

த்வமுல்லாகயாஸ்மான் வபுர்லாகவாய !!

எத்தனையோ கொடிய ரோகங்களைப் போக்கும் முதன்மை மருத்துவராயிற்றே தாங்கள். சம்போ!தங்கள் ப்ரஸாதமான பஸ்மமே மருந்து!எங்களை நோயற்றவராகச் செய்தருள்வீராக!

16. த்ரித்ரோsஸ்மி, அபத்ரோsஸ்மி, பக்னோஸ்மி தூயே

விஷண்ணோsஸ்மி, ஸந்நோsஸ்மி, கின்னோsஸ்மி சாஹம் I

பவான் ப்ராணிநாம் அந்தராத்மாஸி சம்போ

மமாதிம் நவேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம் II

நான் ஏழ்மைப்பட்டு சீராக இல்லததால் மனம் உடைந்துள்ளேன். நொந்து கிலேசப்படுகிறேன். தாங்கள் ப்ராணிகளின் அந்தராத்மாவாக இருப்பதால், ஹேசம் போ!என் துன்பம் தெரியவில்லையா?என்னை காப்பாற்றுவீராக!

17. த்வதக்ஷ்ணோ:கடாக்ஷ:பதேத் த்ர்யக்ஷபதேத் த்ர்யக்ஷ

யத்ர க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீ :ஸ்வயமா தம் வ்ருணாதே!

கிரீடஸ்புச்சாமரச்சத்ரமாலா-

கலாசீ-கஜ-ªக்ஷளம-பூஷா-விசேஷை: II

ஈசனே!நீர்முக்கண்ணராயிற்றே!உமது கடாக்ஷம் யார்மேல் ஒரு நொடியாவது விழுகிறதோ, அவன்பால், பூமி, சொத்து, சுதந்திரம் அரசாட்சி அனைத்தும் தாமே குடிகொள்ள அடையுமே!

18. பவான்யை பவாயாபி மாத்ரேச பித்ரே

ம்ருடான்யை ம்ருடாயாப்யகக்ன்யை மகக்னே I

சிவாங்க்யை சிவாங்காய குர்ம:சிவாயை

சிவாயாம்பிகாயை நமஸ்த்ர்யம்பகாய II

பவானீ-பவராய், தாய் தந்தையராய், ம்ருடானீ-ம்ருடராய், பாபம் துடைப்பவளாய்-தக்ஷயாகம் குலைத்தவராய், மங்கள வடிவம் கொண்டு சிவா-சிவனாய் விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.

19. பவத்கௌரவம் மல்லகுத்வம் விதித்வா

ப்ரபோ ரக்ஷ காருண்யத்ருஷ்ட்யாநுகம் மாம் I

சிவாத்மானுபாவஸ்துதாவக்ஷமோsஹம்

ஸ்வசக்த்யா க்ருதம் மேsபராதம் க்ஷமஸ்வமிமி

தங்களது கௌரவத்தையும் எனது சிறுமையையும், நன்கு அறிந்து கருணைக்கண்ணுடன் என்னைக் காப்பீராக!சிவாத்மானு பூதியுடன் ஸ்தோத்திரம் செய்யமுடியவில்லை. நான் செய்த தவறை தாங்களே பொறுப்பேற்று மன்னிப்பீராக!

20. யதா கர்ணரந்த்ரம் வ்ரஜேத் கால வாஹ-

த்விஷத் கண்ட - கண்டா கணாத்கார நாத:

வ்ருஷாதீச மாருஹ்ய தேவெளபவாஹ்யம்

ததா வத்ஸ மாபைரிதி ப்ரீணயத்வம் II

யம வாஹனமாகிய மஹிஷப்பகைவனின் கழுத்தில் தொங்கும் மணியின் ஒசை என் செவியில் விழுவதற்குள் தங்கள் வாஹனமாகிய விருஷ பத்தின் மீதேரி பயப்படாதே குழந்தாய் என்று சொல்லி மனம் தேற்றுவீராக!

21. யதா தாருணாபாஷணா பீஷணா மே

பவிஷ்யந்த்யுபாந்தே க்ருதாந்தஸ்ய தூதா:

ததா மன்மனஸ்த்வத்பமா ம்போருஹஸ்தம்

கதம் நிஸ்சலம் ஸ்யாத் நமஸ்தேsஸ்து சம்போ II

யமதூதர்கள் கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு என்னருகில் தொங்குவதற்குள், ஹேசம்போ!ஒரு கணம் என் மனம் தங்கள் திருவடித்தாமரையில் பதிந்து அசையாமலிருக்க வேண்டுமே!உமக்கு நமஸ்காரம்.

22. யதா துர்நிவார வசதோணுஹம் சயாநோ

லுடன், நி:ச்வஸன் நி:ஸ்ருதாவ்யக்த வாணி:

ததா ஜஹ்னு கன்யா ஜலாலங்க்ருதம் தே

ஜடா மண்டலம் மன்மனோ மந்திரம்ஸ்யாத் II

ஏதோ தாங்கமுடியாத வலியால் படுத்துப்புறன்டு பெருமூச்சுவாங்க, ஏதோ உளரிக் கொண்டிருப்பேனே, அப் பொழுதாகிலும் கங்கை கொண்ட தங்களது ஜடாமண்டலம், என் மனம் குடிகொள்ளும் இடமாக அமையட்டும்.

23. யதா புத்ரமித்ராதயோ மத்ஸகாசே

ருதந்த்யஸ்த ஹா கீத்ருசீயம் தசேதி I

ததா தேவதேவேச கௌரீச சம்போ!

புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம்மிமி

என் பெண்டு பிள்ளைகள் என்னருகில் உட்கார்ந்து, இவருக்கு என்ன ஆயிற்று என்று அழுது புலம்புவார்களே, அப்பொழுது, ஹேத்வதேவ!கௌரீபதே, சம்போ என்றும் சிவாம நம:என்றும் விடாமல் கூறுவேனாக!

24. யதா பச்யதாம் மாமஸெள வேத்திநாஸ்மா

நயம் ச்வாஸ ஏவேதி வாசோ பவேயு:

ததா பூதிபூஷம் புஜங்காவநத்தம்

புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம் II

நாம் பார்க்கிறோமே, ஆனால் இவர் நம்மை அடையாளம் கண்டுகொள்ளவில்லையே என்றும் இது நிச்சயம் மூச்சுதான் என்றும் ஏதேதோ பேசுவார்களே அப்பொழுது பஸ்மபூஷிதராய், நாகாபரணம் பூண்டவராய் இருக்கும் தங்களைத் தெளிவாகக் காண்பேனா?

25. யதா யாதநாதேஹஸந்தேஹ வாஹீ

பவேதாத்ம தேஹே ந மோஹோ மஹான் மேமி

ததா காச-சீதாம்சூ ஸங்காசமீச !

ஸ்மராரே வபுஸ்தே நமஸ்தே ஸ்மராணி II

யாதனாதேஹம் நெருங்கிவிட்டதோ என்ற சந்தேஹம் மேலிட, தற்போதய தேஹத்தில் மயக்கம் மேலிடாத பொழுது, தங்களது தூய வெண்ணிற மேனியை கண்ணாரக்காண்பேனா?

26. யதாபாரமச்சாய மஸ்தானமத்பி:

ஜனைர்வா விஹீனம் கமிஷ்யாமி மார்கம் I

ததா தம் நிருந்தன் க்ருதாந்தஸ்ய மார்கம்

மஹாதேவ!மஹ்யம் மனோஜ்ஞம் ப்ரயச்ச! II

அக்கரைகாணாத, களையிழந்த, போக்கிடமில்லாத, தண்ணீரும் தன்னைச் சார்ந்த வருமில்லாத அந்தயமனின் வழியை மறித்து, ஹேமஹாதேவ!எனக்கு வேறு நல்வவியை கொடுப்பீராக!

27. யதா ரௌவாதி ஸ்மரன்னேவ பீத்யா

வ்ரஜாம்யத்ர மோஹம் மஹாதேவ கோரம் I

ததா மாமஹோ நாத!கஸ்தாரயிஷ்ய-

த்யநாதம் பராதீனமர்த்தேந்து மௌலே!மிமி

ஹேமஹாதேவ!ரௌரவம் முதலிய நரகங்களை நினைத்து, பயந்து, நான் மயக்கமுற்று தவிற்கும்போது, துணையில்லாமலும் பிறரையண்டியுமிருக்கிற என்னை, உன்னையன்றி வேறு யார் கைதூக்கிவிடுவார்கள்.

28. யதா ச்வேத பக்ராயதாலங்க்ய சக்தே

க்ருதாந்தாத் பயம் பக்தவாத்ஸல்ய பாவாத் I

ததா பாஹிமாம் பார்வதீவல்லபான்யம்

ந பச்யாமி பாதார மேதாத்ருசம்மே II

எனக்கு மீற முடியாத யம பயம் நேர்ந்த பொழுது, ஹே பார்த்தீ வல்லப!என்னைக் காத்தருள். நீர் பக்தனுக்கு அன்பு காட்டுபவரன்றோ. உம்மைத்தவிர வேறெவரும் என்னைக் காப்பவரில்லை!

29.இதானீமிதானீம் ம்ருதிர்மே பவித்ரீ

த்யஹோ ஸந்ததம் சிந்தயா பீடிதோsஸ்மி I

கதம் நாம மா பூத் ம்ருதௌ பீதிரேஷா

நமஸ்தே கதீனாம் கதே நீலகண்ட! II

ஹே நீலகண்ட, இதோ இதோ எனக்கு மரணம் வந்துவிட்டது என்று யமபயத்தால் துன்பப்படுகிறோனே இந்த யம பயம் எப்படி தொலையும்!உமக்கு நமஸ்காரம் நீரே எனக்கு கதி!

30.அமர்யாத மேவாஹ மாபால வ்ருத்தம்

ஹரந்தம் க்ருதாந்தம் ஸமீக்ஷ்யாஸ்தி பீத:

ம்ருதௌ தாவகாங்க்ரயப்ஜ திவ்யப்ரஸாதாத்

பவானீபதே நிர்லயோsஹம் பவானி II

சிறியவர், பெரியவர் என்று நிலையின்றி, தடையின்றி உயிரைப் பறிக்கும் யமனைக்கண்டு பயந்து நடுங்குகிறானே!ஹே பார்வதீபதே!உமது திருவடிதாமரையருளால் இந்த யம பயத்தினின்று தெளிவேனாக!

31.ஜராஜன்ம கர்பாதிவாஸாதிது:கா

ன்யஸஹ்யாநி ஜஹ்யாம் ஜகந்நாததேவ! I

பவந்தம் விநாமே கதிர்நைவ சம்போ !

தயாலோ ந ஜாகர்த்திகிம்வா தயா தே II

ஹே ஜகந்நாத!முதுமை, பிறப்பு, இறப்பு முதலிய பொறுக்கவொண்ணாத் துன்பங்களை முற்றிலும் விட்டொழிக்க உம்மைத் தவிர எனக்கு வேறு வழி ஏது?நீர் தயையுள்ள வராயிற்றே!உமக்குக்கூட தயை பிறக்கவில்லையா?

32. சிவாயேதி சப்தோ நம:பூர்வ ஏஷ

ஸ்மரன் முக்திக்ருத் ம்ருத்யுஹா தத்வவாசீமி

மஹேசாந மா கான்மனஸ்தோ வசஸ்த:

ஸதா மஹ்யமேதத் ப்ரதானம் ப்ரயச்ச II

நம:என்று தொடங்கி சிவாய என்று முடியும் சொல்லை நினைப்பவருக்கு மோக்ஷமே கிடைக்கும். தத்வர் பொருளை உணர்த்தும் அச்சொல் மரணத்தை நீக்கும். ஹேமஹாதேவ!அச்சொல் என் மனதைவிட்டு வரம் தந்தருள்வாயே!

33. த்வமப்யம்ப!மாம் பச்ய் சீதாம்சூமௌலி-

ப்ரியே!பேஷஜம் த்வம் பவவ்யாதிசாந்தௌ

பஹ§க்லேச பாஜம் பதாம்போஜபோதே

பவாப்தௌ நிமக்னம் நயஸ்வாத்ய பாரம் II

ஹே சந்த்ரமௌலிப்ரியே!நீயும் என்னை கவனித்துக் கொள். c தானே அம்மா!சம்சாரநோய்க்கு மருந்து. சம்ஸாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் என்னை நினது திருவடிப்படகில் ஏற்றி கரைக்கடக்கச் செய்!

34. அனுத்யல்லலாடாக்ஷி வஹ்நிப்ரரோஹை:

அவாமஸ்புரத் சாருவாமேரு சோபை: I

அனங்கப்ரமத் போகிபூஷா விசேஷை:

அசந்த்ரார்த்த சூடை ரலம்தைவதைர் ந: II

நெற்றிக்கண்ணில் தீப்பொறி தோன்றாத, இடது பக்கம் அழகிய நங்கை மிளிராத, உடம்பில் பாம்பு அணிகலன்கள் தவழாத, சந்த்ரமௌலியாக இல்லாதபிற தெய்வங்கள் எனக்கு வேண்டாமே!

35. அகண்டே கலங்கா தனங்கே புஜங்காத்

அபாணௌ கபாலா தபாலேநலாக்ஷ£த் I

அமௌலௌ சசாங்காதவாமே கலத்ராத்

அஹம் தேவ மன்யம் நமன்யே நமன்யே II

கழுத்தில் காலகூடமில்லாத, உடம்பில் நாகம் தவழாத, கையில் கபாலமில்லாத, நெற்றியில் தீக்கண்ணில்லாத, மௌலியில் சந்த்ரபிறையில்லாத, இடதுபக்கம் பாகம் பிரியாள் இல்லாத வேறு ஒரு கடவுளை கடவுளாக நான்மனதாலும் நினையேன்.

36. மஹாதேவ!சம்போ கிரீச!த்ரிசூலின்

த்வயீதம் ஸமஸ்தம் விபாதீதி யஸ்மாத் !

சிவாதன்யதா தைவதம் நாபிஜாதே

சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம் II

மஹாதேவ!சம்போ!கிரீச!த்ரிசூலனே!உம்மிடமே இந்த அகில உலகும் துலங்குகிறது. ஆகையால், சிவனாகிய உன்னைத் தவிற வேறு தெய்வத்தை அறியேன். நானே சிவன், நானே சிவன், நானே சிவன்.

37. யதோsஜாயதேதம் ப்ரபஞ்சம் விசித்ரம்

ஸ்திதிம் யாதி யஸ்மின் யதேகாந்தமந்தே I

ஸகர்மாதிஹீன:ஸ்வயம்ஜ்யோதிராத்மா

சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம்மிமி

இந்த விசித்ர உலகம் எங்கிருந்து தோன்றி, நிலைகொண்டு, பின் எதனில் கடைசியில் ஒடுங்குகிறதோ அதே, கர்மம் முதலியன இல்லாததாகி ஸ்வயம் பிரகாசமான, ஆத்மஸ்வரூபமான சிவனே நான், சிவனே நான், சிவனே நான், சிவனே நான்.

38. கிரீடே நிசேசோ லலாடே ஹ§தாசோ

புஜே போகிராஜோ கலே காலிமா ச!

தநௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்

ந ஜானே ந ஜானே நஜானே ந ஜானே II

எவருடைய கிரீடத்தில் சந்திரபிறையும், நெற்றியில், அக்னியும், கைகளில் ஸர்ப்பராஜனும், கழுத்தில் காலகூடக் கறுமையும், உடம்பில் பிரியையும், உறைகிறார்களோ அப்படிப்பட்ட கடவுளை சிவனன்றி அறியேன். அறியேன். அறியேன். அறியேன்.

39. அநேந ஸ்தவேநாதராதம்பிகேசம்

பராம் பக்திமாஸாத்ய யம் யே நமந்திமி

ம்ருதௌ நிர்பயாஸ்தே ஜனாஸ்தம் பஜந்தே

ஹ்ருதம்போஜமத்யே ஸதாஸீநமீசம் !!

அம்மையருபாகனான அந்த தேவனை பக்தியுடனும், ஆதரவுடனும் எவரெவர் இந்தஸ்தோத்திரத்தைச் சொல்லி நமஸ்கரக்கிறார்களோ அவரவர் மரணபயம் நீங்கி ஹ்ருதயத் தாமரையில் அனவரதம் வாஸம் செய்யும் அவ்ஈசனையடைவர்.

40. பஜங்கப்ரியாகல்ப சம்போ மயைவம்

புஜங்கப்ரயாதேந வ்ருத்தேந த்லுப்தம் !

நர:ஸ்தோரமேதத் படித்வோருபக்த்யா

ஸுபுத்ராயுராரோக்ய மைச்வர்யமேதிமிமி

புஜங்கப்ரயாத விருத்தத்திலமைந்த இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி நாகாபரணரான சம்புவை சேவிக்கிற அனைவரும் நல்ல புத்ரர்கள், ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம் ஆகிய நற்பயனைப் பெறுவர்.


Thanks  :Shri Kanchi Kamakoti Peetham | 

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...